மக்கள் போராட்டங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.