முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார வழக்கின் தீர்ப்பை இன்று(01) அறிவித்தார்.
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டரங்கிற்கு அருகில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட லக்ஷ்மன் குரே, குறித்த குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடடுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.