மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரான அஜித் நிவாட் கப்ரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜராகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தொடர முடியாது என முதற்கட்ட ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக எழுத்துமூலம் டிசம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.