விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (08) கொழும்பு விளக்கமறியல்சாலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சேபால் அமரசிங்க, சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவரை தாக்கியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஸ்ரீ தலதா மாளிகையை அவமதித்த சம்பவம் தொடர்பில் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.