விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனே எமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அதற்காகவே நாம் அவரைப் பயன்படுத்தியதாக இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்
அதேவேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ள குழுதான், கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் சுட்டிக்காட்டினார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் ‘திரிப்போலி’ என்ற கொலைக் கும்பல். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் தெரிவித்தார்.