Author: Telobatti
அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு – ரெலோவின் இளைஞர் அணித்தலைவர் சபா குகதாஸ்
ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில் ஒரு ஐனநாயகத் தேர்தலை எதிர் கொள்ள முடியாது தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சமே ஒத்திவைப்புக்குகான பிரதான காரணம் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.
உள்ளுராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள அவர்,
கொரோனா அச்சத்தின் மத்தியில் பாராளுமன்ற தேர்தலை நடாத்திய ஐனாதிபதி தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு கொரோனா அச்ச நிலை ஓரளவு சாதாரண நிலையை அடைந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடையும் நிலையில் அதன் ஆயுட் காலத்தை நீடிக்கும் வர்த்தமானியை வெளியிட்டார் என்றால் அவர்களால் தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.
வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க விட்ட சாதனையின் அறுவடையை இனி வரும் தேர்தலில் பெற வேண்டி வரும் என்ற தெளிவு ஆட்சியாளர்களுக்கு புரியும் அந்தப் புரிதலின் முடிவு தேர்தல் ஒத்திவைப்பு.
2024 ஆண்டு வரை தேர்தல் ஒன்றை எதிர் கொள்ள தற்போதைய ஆட்சியாளர்களினால் முடியாத நிலைமை உருவாகி விட்டது என பல தரப்பும் கூறி வருகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறுவது போல மாகாணசபை மற்றும் உள்ளூராட்ச்சி மன்றங்களின் தேர்தல்கள் நடாத்தப்படாது ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை சர்வசன வாக்கெடுப்பு மூலம் தற்போதைய அரசாங்கம் கால நீடிப்பு செய்ய முயற்சிக்கலாம் என கூறுகின்றனர்.
அன்று ஐெ ஆர் செய்த மாதிரி இன்றைய ஐீ ஆர் செய்வதற்கான வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அவற்றின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
41 நகர சபைகள், 24 மாநகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி
10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி,
பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிச் சட்டம் ஆகியவை புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சு அகற்றப்பட்டு, அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் சிறப்பு செயல்பாடுகளும் நீதி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த தேசியக் கல்வி ஆணைக்குழு மற்றும் தேசியக் கல்வி ஆணையச் சட்டம் (எண். 1991) ஆகியவை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சின் விசேட முன்னுரிமைகளின் கீழ் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை இலங்கை முதலீட்டுச் சபை உள்ளடக்கியுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (ஒருங்கிணைத்தல்) சட்டம் கைத்தொழில் அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவை பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்
இலங்கையின் மிகப் பழமையான கோட்டைகளில் ஒன்றாகக்கருதப்படும், மட்டக்களப்பு கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு கோட்டையினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஆராயும் வகையிலேயே இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது குறித்த கோட்டையின் புனரமைப்பு பணிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது 2019ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் கோட்டை புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த கோட்டையினை சுற்றுலாத்தளமாக மாற்றும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
டச்சுக் கோட்டை கட்டுவதற்கான ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் S4IG நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், S4IG நிறுவனத்தின் முகாமையாளர், S4IG நிறுவனத்தின் பிரதி குழுத் தலைவர் கமலநாதன் ஜெயதாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணத்திட்டங்கள் பலவற்றுக்கு உதவி வழங்குவதற்கு அவுஸ்ரேலிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்
1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமைகாலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது.இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.
இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் அரசாங்கம்! – எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் நிலைமைக்குத் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர் மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும். எதையும் செய்வதற்கு முன்னும் மக்கள் வாழ வேண்டும் என்பதை நான் அரசாங்கத்திற்கு கூற விரும்புகிறேன்.
மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் வழங்குவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.எரிபொருளை இழந்தால் நாட்டின் தொழில் அமைப்பும் சமூக அமைப்பும் சீரழியும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், டொலர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு திறன் இல்லை, இனங்கள், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை பரப்பி அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவதுதான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயலாகும்.
அரசாங்கம் அவ்வாறு செயற்படும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு மூச்சைக் கொண்டு வந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மறுபுறம், தகவல் தொழில்நுட்ப புரட்சி திட்டம் திட்டத்தை பாடசாலை கட்டமைப்புக்கு கொண்டு வந்து நவீன கல்வி, கணினி கல்வியறிவு, தகவல் தொடர்பு கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் அதேவேளையில், நல்ல சுகாதாரத் திட்டங்களையும், நல்ல கல்வித் திட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். இதுதான் அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் உள்ள வித்தியாசம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் விடுதலை விவகாரத்தில் அரச தலைவர் அசண்டையீனம் : ஐ.நாவை நாடுகிறது எதிரணி
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியிடம் மனு ஒன்றை கையளித்தனர்.
மனுவை கையளிப்பதற்காக இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்குவது சம்பந்தமாக அரச தலைவர் கவனம் செலுத்தவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து கொள்வதற்கான இவ்வாறான தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க, ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறையில் இருக்கவில்லை. கருத்து வெளியிடும் போது நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
குற்றங்களுடன் தொடர்பில்லாத அரசியல்வாதி என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்க முடியும். எனினும் அரசதலைவர் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பதாகவும்இ மேலும் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு தெரிவிப்பதாகவும்இ அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி பல்வேறு கட்டப் பேராட்டங்களை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நடவடிக்கையால் சில வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
தமிழ்க்கட்சிகளின் கூட்டுக்கோரிக்கை இந்தியா செய்யப்போவது என்ன?
– அகிலன்
இந்தியா செய்யப்போவது என்ன: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒருவாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்த இழுபறிகள், சர்ச்சைகளுக்குப் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணம் இறுதியாக்கப்பட்டு கையொப் பங்களும் பெறப்பட்டன. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மூலமாக இது இப்போது இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.
ரெலோ முன்னெடுத்த இந்த முயற்சி தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு நகர்வு. இலங்கையை மையப்படுத்தி இடம்பெறும் வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியைப் பயன்படுத்தக்கூடிய ஒரு நகர்வு. தேசியக் கட்சிகள் எனச் சொல்லக்கூடிய கட்சிகளைப் பொறுத்தவரையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் இதில் இணைந்திருந்தமை முக்கியமான ஒன்று.
13 ஆவது திருத்தம்
அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான் இதன் பிரதான இலக்கு. தற்போதைய சர்வதேச – உள்நாட்டு அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் நடைமுறைச் சாத்தியமானதும், அவசியமானதும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் காய்நகர்த்துவது என்ற முடிவை ரெலோ எடுத்ததாகத் தெரிகின்றது.
13 ஆவது திருத்தம் தமிழ்க் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பது உண்மைதான். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை மூலமாக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் தமிழர் தாயகத்தில் இருந்தது. மிகவும் பலமான – உறுதியான கட்டமைப்புக்களை அவர்கள் வைத்திருந்தார்கள். இதற்கான தலைமை அவர்களிடமிருந்தது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை அவர்கள் பெற்றிருந்தார்கள். அந்த நிலையில், இலங்கை – இந்திய உடன்படிக்கையை புலிகள் நிராகரித் திருந்தாலும், இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஆயுதங்களை கீழே போடுவதாக பிரபாகரன் சுதுமலையில் வைத்து அறிவித்தார்.
தற்போது தமிழ் மக்கள் அந்தளவுக்கு பலமான நிலையில் இல்லை. அதாவது பேரம்பேசும் பலம் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பலமான ஒரு தலைமை தமிழ் மக்களிடம் இல்லை. இந்தியப் பிரதமருக்கான கடிதத்தைத் தயாரிக்கும் விவகாரத்திலேயே இதனைத் தெளிவாகக்காண முடிந்தது. உண்மையில் இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையாக இருக்கவில்லை. இந்தியாவுக்கும் பிரச்சினையாக இருந்தது. அதாவது, பலமான தமிழ்த் தலைமை ஒன்றில்லை என்ற நிலையில், இலங்கையைக் கையாள்வதில் புதுடில்லியும் தடுமாறியது.
தமிழரசு – ரெலோ
அரசியல் ரீதியாக இலங்கையைக் கையாள வேண்டுமானால், பலமான ஒரு தமிழர் தலைமை – ஒன்றிணைந்த குரலில் கோரிக்கையை முன்வைக்கக்கூடிய தலைமை அவசியம் என புதுடில்லி கணக்குப் போட்டது. பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் அதனை அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், தமழரசுத் தலைமையைப் பொறுத்தவரையில் அதற்கான முன்னெடுப்பு ஒன்றைச் செய்யக்கூடிய நிலையில் அது இருக்கவில்லை.
இந்தியா-செய்யப்போவதுஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இதற்கான முன்னெடுப்பை ரெலோ மேற்கொண்டது. தமிழ்த் தேசியக் கட்சி களைப் பொறுத்தவரையில் தேர்தல் அரசியலை மையப்படுத்திய கட்சிகளாகவே அவை உள்ளன. கூட்டமைப்பின் பிரதான கட்சியாக தன்னையே எப்போதும் முன்னிலைப் படுத்தும் செயற்பாட்டில் தமிழரசுக் கட்சி இருந்துள்ளது. ஆனால், இதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கத்தக்க யாரும் அங்கிருக்கவில்லை. அதனால்தான், ரெலோ இந்த முயற்சியை முன்னெடுத்தது.
இந்தியா-செய்யப்போவதுகடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பாரிய பின்னடைவைச் சந்தித்த அதே வேளையில், கூட்டமைப்புக்குள் வலுவான ஒரு கட்சியாக ரெலோ மேலோங்கி யிருந்தது. மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்த ரெலோ, இந்தியப் பிரதமருக்கான கடிதத்தை அனுப்பி வைக்கும் முயற்சியையும் முன்னெடுத்தமை தமிழரசுக் கட்சிக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே குழிபறிக்கும் முயற்சிகளை தமிழரசுக் கட்சி – குறிப்பாக சுமந்திரன் மேற்கொண்டார்.
சுமந்திரனை முன்னிலைப்படுத்தாமல் இவ்வாறான ஒரு முயற்சியை தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்னெடுத்திருப்பது இதுதான் முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.
ரெலோ முன்னெடுத்த இந்த முயற்சியின் முதலாவது கூட்டம் நவம்பர் முதல்வாரம் யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹொட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா இறுதி நேரத்தில் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த எதிர்ப்புக்கள்தான் இதற்குக் காரணம்.
இந்தியா-செய்யப்போவதுஇரண்டாவது சந்திப்பு கொழும்பில் குளோபல் ரவர் ஹொட்டலில் நடைபெறவிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சுமந்திரன், ரெலோ முன்னெடுத்த இந்த நகர்வை கடுமையாக விமர்சித்தார். மறுநாள் கொழும்பு சந்திப்பில் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார். மூன்றாவது சந்திப்புக்கு சுமந்திரனையும் அழைத்துக்கொண்டு அவர் சென்றிருந்தார். தான் கடுமையாக விமர்சித்த நகர்வில் தானும் சம்பந்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் சுமந்திரனுக்கு ஏற்பட்டது.
மலையக முஸ்லிம் கட்சிகள்
மலையக, முஸ்லிம் கட்சிகளையும் இந்த நகர்வில் இணைத்துக்கொண்டமை எதிர்பார்க்கப்பட்டதைப் போல விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. பொதுவான நிலைப்பாட்டில் அந்தக் கட்சிகள் இணைந்துகொண்டாலும், வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட மக்களுடைய பிரச்சினைகளிலிருந்து மலையக, முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் வேறுபட்டவை. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாக பொதுவான ஆவணம் ஒன்றை தயாரிப்பதில் உள்ள பிரச்சினைகள் புரிந்துகொள்ளப்படவேண்டிவை.
இந்த நிலையில்தான் அந்த இரண்டு கட்சிகளையும் உள்ளடக்காமல் இந்த ஆவணம் கைச்சாத்தாகியிருக்கின்றது. ஆனால், பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட வேண்யதன் அவசியம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சி இதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், ஹக்கீமைப் பொறுத்தவரையில் அவர் எதிர்கொள்ளும் உட்கட்சிப் பிரச்சினையும் தமிழ்க் கட்சிகளுடன் அவர் இணைந்து செயற்பட முடியாமைக்கு மற்றொரு காரணம்.
இந்தியா என்ன செய்யும்?
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கரங்கள் இப்போது மேலோங்கியிருப்பது தெரிகின்றது. இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார – அந்நியச் செலாவணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா கைகொடுத் திருக்கின்றது. அதற்குப் பிரதியுபகாரமாக திருமலையிலுள்ள மேலும் சில எண்ணெய்க் குதங்களை 50 வருட குத்தகைக்கு இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை இணங்கியிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் தமிழ்க் கட்சிகள் பொதுவான கோரிக்கை ஒன்றில் இணங்கிவந்து ஐக்கியமான தமது நிலைப்பாட்டை இந்தியாவிடம் வெளிப்படுத்தி யிருப்பது புதுடில்லிக்கு அரசியல் ரீதியாக பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், புதுடில்லியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?