எதிர்காலத்தில் சித்தார்த்தன் தலைமையில் மாவை இணைவது பெருமகிழ்ச்சி – ரெலோ தலைவர் செல்வம்

சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் ஒருமித்த செயற்பாடு குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டும். அந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து கொண்டுள்ளோம். இதன் முதல்கட்ட கலந்துரையாடல் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது. அதற்குப் பெரும் ஆதரவினை அனைவரும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் சித்தார்த்தன் அவர்களே எங்களோடு முனைப்பாக தொடர்ந்தும் செயலாற்றினார். மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கும் கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் அளப்பரிய பங்களிப்பை செய்தவர் சித்தார்த்தன்.

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் வகையிலே கடந்த சில மாதங்களாக சந்திப்புகள் நடைபெற்று வருகின்றதன. இதில் காத்திரமான வெற்றியும் கண்டிருக்கிறோம். தற்போது பல கட்சி தலைவர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் நிலைமைக்கு இது வளர்ச்சி கண்டுள்ளது.

இதில் பல கூட்டங்களில் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு இருந்தாலும் இறுதி நேரங்களில் பின்வாங்கும் போக்கினை கடைப்பிடித்து இருந்தார். அதற்கான காரணத்தை இப்போதுதான் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தால் இன்னும் துரிதமான முன்னேற்றத்தை இவ்விடயத்தில் அடைந்திருக்க முடியும்.

இருப்பினும் இந்த விடயங்களை சித்தார்த்தன் அவர்களும் இணைந்தே முன்னெடுத்திருந்தார் என்பதை மாவை சேனாதிராஜா நன்கு அறிந்திருந்தார்.

சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நாம் வரவேற்கிறோம்.

முன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு, பயங்கரவாத விசாரணை பிரிவினரால், (டி.ஐ.டி) இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவருக்கே, இவ்வாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 1ஆம்  திகதி, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 01ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்ட முகவரியில் அமைந்துள்ள 3ஆம் மாடிக்கு  சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஐ.தே.க. விலிருந்து விலகினார் அர்ஜூன

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது கட்சி உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஒரேநாடு ஒரேசட்டம்’ செயலணிக்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலி.தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் 44ஆவது சபை அமர்வின்போது கண்டன தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேசசபை உறுப்பினர் கந்தையா ஜெசிதனால் கொண்டுவரப்பட்ட இக்கண்டன பிரேரணையானது ஏகமனதான பிரதேசசபை உறுப்பினர்களின் வழிமொழிதலுடன் கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது .

மேலும் சிங்கள மக்களின் தனிபெரும்பான்மையோடு ஆட்சி பீடமேறியதோ அந்த சிங்கள மக்களிடமும் வீழ்ந்து வரும் தனது செல்வாக்கை தூக்கி நிமிர்த்தவே, இனவாத பிக்குவின் தலைமையில் மக்களின் கவனங்களை வாழ்வியல் சமூக பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பிடவே இந்த செயலணியை அரசாங்கமும் ஜனாதிபதியும் பயன்படுத்துகின்றனர் என தமது காரசாரமான கருத்துக்களை சபையின் உறுப்பினர்களான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ, லோ.ரமணன், சி.அனுசன் ஆகியோர் முன்வைத்தனர்.

இதேவேளை இந்த அரசினது இவ்வாறான ஜனநாயக விரோத போக்குகளை சுட்டிக்காட்டிட முனையாத அரசிலுள்ள தமிழ் பங்காளி கட்சிகளின் தலைவர்களிற்கு கண்டனமும் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பண்டையகாலம் முதல் கண்டியசட்டம், கரையோரச்சட்டம், தேசவழமைசட்டம் என இந்நாட்டில் நிலவிவந்த சட்டங்களை ஒழித்து, குழப்பநிலையை உருவாக்க நினைப்பது ஏற்கமுடியாதது என பிரேரணையை முன்மொழிந்த உறுப்பினர் ஜெசிதன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது ஈ.பி.டி.பியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியே சென்று தீர்மானம் நிறைவேறிய பின்னரே மீண்டும் சபைக்குள் பிரசன்னமானர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் பாரிய தொகை கடனை பெறும் இலங்கை!

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் திட்டத்தின் கீழ் பெறுகிறது.

இந்தநிலையில் பெற்றோலியம் தொடர்பான கடன்களுக்காக மேற்கு ஆசியா மற்றும் பிராந்திய பொருளாதார அமைப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.

இந்தநிலையில் 120,000 மெற்றிக்தொன் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டபோது சிங்கப்பூரின் ஏலத்தாரா் ஒருவர் மாத்திரமே முன்வந்துள்ளார்

இறக்குமதிக்கான கடன் கடிதங்களை தற்போது சர்வதேச வங்கி ஒன்றிடம் இருந்தே பெறவேண்டியுள்ளமையே இதற்கான காரணமாகும்.

அத்துடன் சர்வதேச வங்கியிடம் கடன் கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக 3 வீத வட்டியை செலுத்தவேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் அண்டை நாடுகளில் இந்த வட்டிவீதம் 0.5 ஆக இருக்கிறது. இதற்கிடையில் இந்த 3வீத வட்டியை செலுத்தமுடியாது போனமைக் காரணமாக அண்மையில் நிலக்கரிக்கான இரண்டு முக்கிய ஏலங்கள் ரத்துச்செய்யப்பட்டன.

நாட்டில் நடப்பது இராணுவ ஆட்சி : சஜித் அணி கடும் கண்டனம்

மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

”நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“வடக்கில் மக்களை மட்டுமல்ல ஊடகவியலாளரையும் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதேவேளை, சிலர் கைதுசெய்யப்படும் உள்ளனர். இந்த அராஜக நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றோம். இறந்தவர்களை நினைவேந்த அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் இன, மத, மொழி வேறுபாடு காட்டக்கூடாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டில் தற்போது நடப்பது காட்டாட்சி என்பதை வடக்கு, கிழக்கில் நேற்று அரச படைகள் நடந்துகொண்ட விதம் எடுத்துக்காட்டுகின்றது. போரில் இறந்தவர்களை அமைதியாக நினைவேந்த பல இடங்களில் நீதிமன்றமே அனுமதி வழங்கிய நிலையில் அதையும் மீறி இராணுவத்தினருடன் சேர்ந்து பொலிஸார் நடந்த கொண்ட விதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாட்டில் இன ரீதியில் – மத ரீதியில் – மொழி ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களை உள ரீதியில் மேலும் காயப்படுத்தக்கூடாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க  இதன்போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு – மறைமுக சர்வதேச அங்கீகாரம் ; சீனா

Posted in Uncategorized

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும். நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர். புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஜெரால்ட் டார்மான் மேலும் தெரிவித்தார். முன்னதாக, பிரான்ஸ் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 31ஆக கணக்கிட்டனர்.
ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யப்பட்டது. ‘இந்த மரணத்தால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளதாக’ பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறியுள்ளார். மேலும், கடக்க முயற்சிப்பதில் இருந்து மக்களைத் தடுக்க பிரான்ஸுக்கு மேலும் அழைப்பு விடுத்தார். கடத்தல் கும்பல்கள் ‘கொலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றன’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரித்தானியா உள்நாட்டு ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். ஆங்கில கால்வாய், உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் நீரோட்டங்கள் வலுவாக உள்ளன. மனித கடத்தல்காரர்கள், மிகவும் உடையக்கூடிய, ஊதப்பட்ட படகுகள் மூலம் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்கின்றனர். இந்த படகுகள், அலைகளின் தயவில் பிரித்தானிய கரையை அடைய முயற்சிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான கடற்பயணமாகும்.

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- விசாரணையை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இணைப்பாளர் த.கனகராஜ் மேலும் கூறியுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் முல்லைத்தீவு தலைமைபொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன. மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

வடக்கு- கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர், இராணுவத்தினரால் தாக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேபோன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் படகு விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக்கருவிகளும் பறிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகிலனை விடுதலைசெய்ய வலியுறுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி ஊடக கடமையினை மேற்கொள்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை விடுதலைசெய், இராணுவமே ஊடகவியலளார்கள் மீது தாக்குதல் நடத்தாதே, கிண்ணியாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு, ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய இராணுவத்தினரை கைதுசெய், அரசே ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து, அரசே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்ற ஊடகவியலாளர்கள்,  காந்திபூங்காவில் காந்தி திருவுருவச்சிலைக்கு அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized