இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்தமொரகொட

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு, ஒரு வருடத்தின் பின்னரே அவர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

மிலிந்த மொரகொட அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிலிந்த மொரகொட மற்றும் அவரது மனைவி ஜெனிபர் மொரகொட ஆகியோரை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள்வரவேற்றுள்ளனர்.

இலங்கையின் நலன்களை முன்னெடுப்பதற்தும் இலங்கைஇந்திய இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்துசெயற்படுவதன் அவசியம் குறித்து பதவியேற்பு நிகழ்வில் மிலிந்த மொரகொட உரையாற்றியுள்ளார்.

Posted in Uncategorized

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசு  முயற்சிக்க வேண்டும் – கி. வீரமணி

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசும் எம்.பி.க்களும் முயற்சி செய்ய வேண்டும் என திராவிடர்கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் குடியுரிமை தொடர்பில் வீரமணி அறிக்கை வாயிலாக இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர, தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம்தருவது, மனிதாபிமான அடிப்படையில் மிக மிக முக்கியமானதாகும்.

தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்குமிடம் சரியான பராமரிப்பின்றி, அவர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகளைஅளிக்காது, முன்னைய ஆட்சியில் அவர்கள் எப்படியோ வாழ்ந்த நிலையை மாற்றுபவர் தமிழக முதல்வர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்று உரத்த குரலில் முழங்கியது நம்பிக்கையை ஊட்டிஇருப்பதாக அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணிக் காத்திட 317.40 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதற்கு வீரமணி வரவேற்புதெரிவித்திருக்கிறார்.

அகதிகள் முகாம் என்பதை மாற்றி மறுவாழ்வு விடுதிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதன்மூலம் முதல்வர் இலங்கைத் தமிழர்களுடனான நமது தொப்புள் கொடி உறவு என்றும் அறுக்கப்படக் கூடாத உறவு என்பதைஉறுதிப்படுத்தி உலகத்துக்கு அறிவித்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21ஐ பயன்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைக்க திட்டம் – ஜீ.எல். பீரிஸ்

ஏப்ரல் 21 தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டில் குழுவொன்று இயங்கி வருவதாக வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அர் இதனைக் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வளங்களை பயன்படுத்துங்கள் – அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் நிதியமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்து தொடர்பாகவும் விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை தொடர்பாகவும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே இதற்கான தீர்வு என தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரிஷாட்டின் மனைவியின் பிணை மனு நிராகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று உத்தரவிட்டார்.

மேலும் ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான  உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் – ஐக்கிய நாடுகள் சபை

இலங்கை மற்றும் உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் அவர்கள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு மத்தியில் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சில நேரங்களில் பல ஆண்டுகளாக, தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் பற்றிய செய்திகளுக்காக உறவினர்களும் குடும்பமும் காத்திருப்பதாகவும் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை உண்மையை கண்டறிவதற்கான தேடல் அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் கூறினார்.

குறிப்பாக குறித்த போராட்டத்தில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடும் நிலையில் அவர்கள் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா. வதிவிட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பின்மை உணர்வு காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் சமூகங்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தையும் பாதிக்கிறது என்றும் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் – பேராசிரியர் ஜி.எல். பீரிஷ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
எதிர்வரும் மாதம் நடைப்பெறவுள்ள மனித உரிமை மற்றும் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஷ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழகத்துக்குள் நுழைந்த இலங்கைக் குழு – கேரள கடல்பரப்பில் பாதுகாப்பு தீவிரம்

இலங்கையர்கள் குழுவொன்று தமிழகத்திற்கு மீன்பிடி படகுகளில் பயணம் செய்திருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து கேரள கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடலோர பொலிஸாருடன், கடலோர காவல்படையினர் இணைந்து இந்த ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தை அடைந்த பிறகு, அவர்கள் சாலை வழியாக கொச்சிக்கு செல்லலாம் என்று அறிகுறிகள் உள்ளன.
அதன்பிறகு கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி மீன்பிடி படகுகளில் வெளிநாட்டிற்கு பயணம் செய்வது அவர்களின் நோக்காக இருக்கும் என்றும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

18 வரை நீடித்தால் 7500 உயிர்களைக் காக்கலாம் – உலக சுகாதார நிறுவனம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் பேரை பாதுகாக்க முடியும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்றுடன் நிறைவடைந்த கடந்த 7 நாட்களில், இலங்கையில் மரண வீதம் 5.52 வீதமாக காணப்படுவதாக குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.

டெல்டா தொற்று வேகமாக பரவியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தாங்காது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை போன்ற ஒரு நாட்டை மூடுவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் சிறியதல்ல என்று குறிப்பிட்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை மேலும் மூடி வைப்பதை இலங்கையால் தாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையில் பாதி பேரைப் பூட்டுவதால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வது கடினம் என்று தெரிவித்த அவர், இது நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகத் துறையில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

நாடு பூட்டப்பட்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நாளாந்த இழப்பு ரூ .15 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை போன்ற ஒரு நாட்டை மூடுவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் சிறியதல்ல என்றும், முடக்கத்தைக் குறைக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.