இலங்கை மீது ஐநா விசேட அவதானம்!

இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுடன் தாம் ஒன்றிணைந்து இருப்பதாகவும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அமைதியைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகலை அறிவிப்பதில் தாமதம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எங்கே போவதற்காக மாலைதீவு சென்றாரோ அங்கே சென்ற பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

”ரணில் பதவியில் இருந்து விலக வேண்டும்”: மைத்திரி கோரிக்கை!

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்​டை தொடர்ந்து அராஜகம் செய்யாமல் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

பிரதமர் அதிரடி உத்தரவு! ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு

மேல்மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்கா தனது தூதரகத்தை மூடியது.

இலங்கையில் இடம்பெறும் நிலைமையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது.

இதற்கமைய அடுத்த இரண்டு நாட்களுக்கு தனது சேவையை  ரத்து செய்துள்ளது என தூதரகம் இன்று அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் 13 கோரிக்கைகள்.

காலிமுகத்திடல்  போராட்டக்காரர்கள் 13   கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய தற்போது ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்தியுள்ள நிலையில் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாக

கோரிக்கைகள்

  1. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ,ராஜினாமா செய்வதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை, பதவி விலக வேண்டும்.
  2. கோட்டா- ரணில் அரசாங்கம் பதவி விலகியவுடன், மக்களின் போராட்டத்துடன், பொருளாதாரம், சமூக, அரசியல் நோக்கங்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  3. இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில், மக்கள் கவுன்சில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  4. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தை செயற்படுத்த வேண்டும். எரிபொருள், எரிவாயு மற்றும் கல்வி, பொது போக்குவரத்து சேவை வினைத்திறனாக்கல், நுண் கடன் மற்றும் விவசாய கடன்களை ,ரத்து செய்யப்படுவதுடன், லீசிங், சிறு வியாபார கடன்களை ,இரத்து செய்தல் அல்லது மீள் செலுத்தலுக்கான கால அவகாசம் வழங்கல்.
  5. தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள் உட்பட, சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
  6. கொலை, காணாமல் ஆக்கபட்ட விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, விசேட பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும்.
  7. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ராஜபக்ஷர்களால் மோசடி செய்யப்பட்ட அரச நிதி, முறையான விசாரணைகளுடன் அரசு உடமையாக்கப்படுவதுடன், மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடான முறையில் சேகரித்துள்ள சொத்துக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  8. தற்போதைய வரி முறைமை மாற்றி அமைக்கப்பட்டு, நேர் வரியை அதிகரித்து, மறைமுக வரியை குறைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சாதகமான முறையில், வரி கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  9. கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.
  10. மக்கள் வாக்கெடுப்புடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையாகவும், நிறைவேற்று அதிகாரம் இரத்துச் செய்தல், நீதியான தேர்தல் இடம்பெறும் முறையான பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
  11. மக்களுக்கு பொறுப்புக் கூறாத அரசியல்வாதிகளை மீளழைக்கும் உரிமை உறுதிப்படுத்தும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். சட்டவாக்கத்தில் மக்கள், மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து பங்குபற்றும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
  12. இனவாதம், தேசிய ரீதியான அழுத்தங்களை முழுமையாக இல்லாதொழித்து, சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், சகல இ னங்களினதும், மதம், மொழி, பால் மற்றும் ஏனைய கலாசார தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்புடைய வகையில், அடிப்படை சட்டம் பலப்படுத்தப்பட வேண்டும்.
  13. இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படை நோக்கங்களாக, மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கம், 12 மாத காலப்பகுதியில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதுடன் நிறைவடைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
Posted in Uncategorized

கோத்தா மாலைதீவிற்கு தப்பிச் சென்றார்; மாலைதீவில் எதிர்ப்பு

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராயபக்சா இன்று அதிகாலை விமானப்படை விமானத்தில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதனை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய அரசின் ஒப்புதலுடனேயே அதனை வழங்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டின் குடிவரவு குடியகல்வுச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியும் அவரது மனைவியும் இரு பாதுகாப்பு உத்தியோகத்நர்கள் மட்டுமே அந்த விமானத்தில் பயணித்துள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.

விமானப்படைக்குச் சொந்தமான அன்ரனோவ் 32 ரக விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு மாலை தீவுக்குப் புறப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஓடு தளத்தில் இருந்தே இந்த விமானம் புறப்பட்டுள்ளது. இதேநேரம் கோட்டபாயவுடன் அவரது சகோதரன் பசில் ராயபக்சாவும் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றபோதும் உறுப்படுத்த முடியவில்லை.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் இருந்து இலங்கை மக்கள் கோட்டபாயவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதே நேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இவ்வாறான நிலையில் மாலைதீவின் சுற்றுலாத்துறை சார் அதிகாரியின் அழுத்தமும் வெளியாகி உள்ளது.

மகிந்த – பஸில் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொது மக்களுக்கு தெரிவதில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிவில் அமைப்புகளை சேர்ந்த சிலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும் – காலிமுக போராட்டக்காரர்கள் மத்தியில் மனோ கணேசன்

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த வேண்டாம். ஆகவே, இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக வேண்டும். அதுபோல் மதசார்பற்ற நாடாகவும் வேண்டும். இந்த கருத்துகள் நாட்டின் அரசியலமைப்புக்குள், சட்ட வரையறைக்குள் வர வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி கூறினார்.

காலிமுக போராட்டக்காரர்கள்  அரசியல் கட்சிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது;    

எம்பிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில், நாட்டுக்கும், பதவிக்கும் சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள். உண்மையில் நாட்டுக்கும், பதவிக்கும் தாம், ஒருபோதும் சொந்தக்காரர்கள் இல்லை, தெரிவு செய்யப்பட்ட சில காலத்துக்கான குத்தகைகாரர்கள்தான் என்பது சிலருக்கு மறந்து விடுகிறது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கண்காணிக்க நிரந்தரமாக மக்கள் சபைகள் தேவை. ஆகவே உங்கள் மக்கள் சபை என்ற பிரேரணையை வரவேற்கிறேன்.

ஆனால், மக்கள் சபை என்ற பிரேரணையை சும்மா வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அது நாட்டின் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு சட்ட வலு கிடைக்கும். அதேபோல் இன்னமும் சில அடிப்படை விடயங்கள்  நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும்.

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதை தீர்க்காமல் ஒன்றும் நடக்காது. உங்கள் போராட்டம் சிங்கள போராட்டமல்ல என நினைக்கிறேன்.   தமிழ் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன். முஸ்லிம் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன்.  அது சிங்கள,தமிழ், முஸ்லிம் போராட்டம் என நினைக்கிறேன்.

இந்த கருத்தும், போராட்டக்களத்தில் இருந்தால் போதாது. அதுவும் நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும். எப்படி?  இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம்,நாடு என்பதும், மதசார்பற்ற நாடு என்பதும் நாட்டின் அரசியமைப்பில் சட்டப்படி இடம்பெற வேண்டும்.

இந்நாடு ஒரு இனத்துக்கும், மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்தப்படக்கூடாது. இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும். இது எமது போராட்டம்.

கோட்டாவுக்கு அமெரிக்கா விசா மறுப்பு; தரை இறங்க இந்தியா மறுப்பு; வெளியேறும் பல முயற்சிகள் தோல்வி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் 15 வரையிலான அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. அதேவேளை, அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஜனாதிபதி விசா விண்ணப்பித்த போதிலும் அமெரிக்க அதனை மறுத்துள்ளது. அதேவேளை, இலங்கை விமானபப்டையின் விமானங்கள் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் விமான நிலைய அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்திருந்த ஜனாதிபதி மற்றும் உறவினர்கள் , நேற்று திங்கட் கிழமை இரண்டு பெல் 412 ரக உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு ரத்மலான விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அங்கே, முப்படையினரின் தளபதிகளை சந்தித்துவிட்டு, மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL225 ஊடாக டுபாய்க்கு அவர்கள் ஜனாதிபதியும் அவரது உறவினர்களும் அனைவரும் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்களை குடிவரவு பகுதிக்கு அவர்களின் கடவுசீட்டுக்களை ஸ்டாம் பண்ணுவதற்கு வருமாறு குடிவரவு அதிகாரிகள் நிர்ப்பந்தித்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அந்த பகுதிக்கு செல்வதற்கு அவர்கள் மறுத்தனர். அதேநேரம் , விசேட மற்றும் அதி விசேட அதிதிகள் செல்லும் குடிவரவு பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு முதல் தமது பணிகளை இடை நிறுத்தி இருந்தனர்.

அதேசமயம், ஜனாதிபதியை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN32 என்ற விமானம் இந்திய விமானம் நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, இலங்கை விமானப்படை முகாம் ஒன்றில் ராஜபக்ஸ நேற்றைய இரவை கழித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டபாய திறந்திருந்ததால், அமெரிக்க செல்லுவதற்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் இன்னமும் அமெரிக்க பிரஜைகளே. ஆனால், அவர்கள் இன்னமும் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனர்.

அமெரிக்க குடியுரிமையை திறந்த ஒருவருக்கு மீண்டும் விசா வழங்க முடியாது என்றும் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவரின் மரணம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே விதிவிலக்காக விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க தூதரகம் விளக்கம் அவருக்கு அளித்துள்ளது.

அவருக்கு விசா இல்லை என்பது மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தலைவராக அவர் அங்கு செல்லலாம். ஆனால், தற்போதைய நிலைமைகள் வேறு ” என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ அண்மையில் அவரது அமெரிக்க கடவு சீட்டை தொலைத்திருந்த நிலையில் புதிதாக கடவுசீட்டை பெறுவதற்கு அமெரிக்க தூதரகம் உதவியிருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகம் ஆர்பாட்டக்காரர்களினால் முற்றுகை இடப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியும் பசிலும் தப்பி சென்றிருந்த நிலையில், பசில் அவரது கடவுசீட்டை அங்கு விட்டு சென்றிருந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் சில்க் பாதை ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பசில் மேற்கொண்ட முயற்சி குடிவரவு அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டது.

Posted in Uncategorized