வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர்.
பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சராகவும் இதேவேளை ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சராகவும் நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விதுர விக்ரமநாயக்க – கலாசாரம், டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இலங்கையில் “எரிபொருள்,எரிவாயு மற்றும் உணவு ,மருந்துப் பொருட்களை பெறுவதற்கு மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.
இதனால் கடந்த 9 ம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.
நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒரு தகப்பனாக அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடியும். கோட்டாபாய ராஜபக்ச இதைப் படித்து, ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால், இந்த நிர்வாகத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் நேரடியாகப் பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூலம், அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இரட்டை குடியுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாக்கும் வகையிலும், பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசமைப்புத் திருத்தம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவ முன்வரா விட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம் என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றிபெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
அவுஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் மூலம் அந்தோனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.
மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அத்தோடு பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பினை காட்டி போராட வேண்டும் என்றும் முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.
ஆரியகுளத்தை புனரமைக்கும் போது அருகிலிருந்த விகாராதிபதியுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போராடிக்கொண்டிருந்ததை மக்கள் அறிவார்கள் எனவும் ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனமான ஸ்கைநியூஸுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் நெருக்கடி நிலைமைக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் கூறினார்.
நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயத்திற்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் மூன்று மாதங்களில் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும் என்று ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது.எமக்கு தற்போது டொலரும் இல்லை. ரூபாவும் இல்லை.
தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது குறித்து ஸ்கைநியூஸ் ஊடகவியலாளர் இதன்போது சுட்டிக்காட்டிய போது, இளைஞ்கள் தமது எதிர்காலம் பறிக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.இதேபோன்று வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்னர். நடுத்தர வகுப்பினர் தமது வாழ்க்கை நிலை சீர்குழைந்திருப்பதாக காணுகின்றனர். விவசாயத்துக்கான போதிய உரம் இல்லாமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாம் எதிர்கொண்டுள்ள சுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமையினாலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
உக்ரேன் போர் இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? இது குறுகிய காலத்திற்குள் மோசமான நிலையை அடையுமா? என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உண்மையிலேயே நாம் ஸ்திரமான நிலையில் இல்லை விவசாயத்துக்கான போதிய உரம் இல்லை இதனால் எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் காணப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நாம் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது என்பதில் கவனம் செலுத் வேண்டும் என்றும் தெரிவித்தார்..
தற்போதைய நிலையில் உதவி வழங்க முன்வரும் நாடுகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன? என்ற கேள்விக்கு பிரதமர் ரணில்விக்கிமசிங்க பதில் அளிக்கையில் ” நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு பணமில்லை. இது குறித்து வெட்கப்படவேண்டும்.இதுதான் யதார்த்தம் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இதற்கு சில காலம் செல்லும்” என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.