இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்ட உலக வங்கி!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பது முக்கிய காரணிகளில் ஒன்று என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூர் வருவாய் வழிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கவலையடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அறக்கையில் கூறப்பட்டுள்ளது.

”முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்”: வீரவன்ச!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீரக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் 113 ஆசனங்களை கொண்டு எதனையும் செய்ய முடியும் என்று ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டிருப்பது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புதிய பிரதமரின் கீழ், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும் என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கம் தொடர்பாக சர்வதேசத்தின் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லை – மைத்திரிபால சிறிசேன

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்பாக சர்வதேசத்தின் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லை என்றும் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டு, நாட்டு மக்கள் மகிழ்வுடன் இருந்தால் மாத்திரமே சர்வதேசம் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.(

இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட கூடாது – கரு ஜயசூரிய

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட கூடாது என முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை எந்தக் காரணத்திற்காகவும் நாட்டின் அமைதிக்கு பாதகம் ஏற்பட இடமளிக்காமல் பாத்துக்கொள்ளும் கடமை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் உண்டு என்றும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போராட்டங்களின் போது அவர்கள் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பாராட்டுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆகவே இளம் சமுதாயத்தினரின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் திருத்தங்கள் குறித்து பேசி நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விடயம் குறித்து தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Posted in Uncategorized

நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்னணி ஒப்பமிட்டது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்திட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அரசிற்கு எதிராக  முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையிலேயே  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாக தமது  கையொப்பத்தை இட்டனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துப்படுத்தி சிரேஷ்ட பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது இறுதி முயற்சி – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சியே நேற்றைய பிரதமரின் உரை. உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள். இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு நேற்று பிரதமர் ஆற்றிய உரை தொடர்பாக என் மனதுக்குள் உடன் எழுந்த எண்ணங்களை என் தமிழ்த் தேசிய உணர்வுகளுடன் பகிர்கிறேன்.

அரசுத் தலைமை, அரசாங்கத் தலைமை மக்கள் முன் இன்னொரு தடவை உரையாற்ற முடியாத நிலையில் அரசாங்கப் பதவியணியில் தன் தம்பியைக் காப்பாற்ற பிரதமர் உரையாற்றியுள்ளார்.

இரண்டரை வருடங்களாக அரசுத் தலைவர், அரசாங்கத் தலைவர் எனும் வகையில் மேதகு அவர்கள் உரையாற்றுவார். இடையிடையே, பிரதமர் தன் தம்பிக்கு முட்டுக்கொடுப்பார்.
பேசும் போதெல்லாம் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சிறகடித்துப் பறக்கும். அவர்கள் உடல் மொழிகளோ வித்தியாசமாக இருக்கும்.

நேற்றைய பிரதமர் உரையில், சிங்களமும் இல்லை. பௌத்தமும் இல்லை. அவர்களது வழமையான கம்பீர உடல் மொழியும் இல்லை. வார்த்தைகளில் கூட சுரத்து இல்லை. இன்னமும் கூட தமிழ் மக்கள் தம் உரிமைகளுக்காக போராடிய 70 வருட வரலாறுகள் தம்மை தக்க வைக்கத் தேவைப்படுகிறது.

யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. யுத்தத்தின் காரணங்கள் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் உணரப்படவில்லை. ராஜபக்ச குடும்பம் ஒட்டு மொத்த நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என்று நாம் கூறவில்லை. உங்கள் அரசின் 11 பங்காளிக் கட்சிகளே கூறுகின்றன. மொட்டுக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறுகின்றனர். அமைச்சர்கள் பலர் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் நீங்கள் இன்னமும் புலியை ஒழித்த பூனையைப் புடுங்கிய சிங்கங்கள் நாம் என்று புலம்புகிறீர்கள்.

மக்கள் எரிபொருளுக்கு கியூவில் நிற்கிறோம். எரிவாயுவுக்கு கியூவில் நிற்கிறோம். அத்தியாவசியப்  பொருளுக்காக அலைகிறோம். உரமின்றி வாடுகிறோம். உயிர்வாழ வழியின்றி இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதை உணர்கிறோம். அது உண்மை என்கிறோம். என்று கூறும் நீங்கள். உங்கள் அரச பதவிகளைத் துறவுங்கள். நீங்கள் அடித்த கமிசன்களை நாட்டின் திறைசேரிக்குத் தாருங்கள் என்பதனை  மட்டும் ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்.

உலகத்தில் எந்த ஒரு அரசுத் தலைவரும் உங்களைப் போல் புகழப்பட்டவர்களுமில்லை. உங்களைப் போல் இகழப்பட்டவருமில்லை. பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையால் வெற்றிக்களிப்பில் மமதை கொண்ட நீங்கள், அதே பேரும்பான்மை மக்களின் பெரும்பான்மையினரால் இன்று இகழப்படுகிறீர்கள். இத்தனைக்கும் எம் தமிழ் இளைஞர்கள் இன்னும் ஓரமிருந்து ஓரக்கணாணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரச ஊழியர்கள், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் வடக்கிலிரந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை யாவரும் உங்களுக்கு எதிராக கோசமிடுகிறார்கள். அதுவும் பெருமைமிகு உங்கள் குடும்பப் பெயரை சந்திக்கு இழுக்க வைக்க இன்னமும் விரும்புகிறார்கள்.

உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள்.

இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம். நேற்றைய உங்கள் உரை என் மனதில் தந்த உணர்வு இதுவே. அது தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சி. என்பதுவே!

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும்!

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக முடிவு எடுக்கும்போது அது பலமாக இருக்கும். எந்தவிதமான பிரேரணை கொண்டு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் நாங்கள் தனியாக தீர்மானிக்க முடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மக்களை மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி பாதித்திருக்கின்றது. ஆகவே, பொருளாதார பின்னடைவு நிச்சயமாக நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. இந்த நாட்டிலே யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்கள் அதற்காக பட்ட கடன்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சேர்த்தே பொருளாதார பின்னடைவுக்கு ஆரம்பிக்க காரணமாக உள்ளது.

போராட்டத்துக்கு ஜனாதிபதி சரியான பதில் ஒன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கூறியே மக்கள் போராடுகிறார்கள். அதனை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இணுவில் பகுதியில் இடம்பெற்ற புளொட் மத்திய குழுக் கூட்டத்தில் அண்மையில் உயிரிழந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அமரர் சு. சதானந்தம் அவர்களின் வெற்றிடத்திற்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

மத்திய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சிவநேசன் உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

நிபந்தனையின்றி ஆதரவளித்தால் வீதிகளில் இறங்குவோம் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய பிரதான மூன்று அணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரனை ஆட்சிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக கூட்ட அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப் போகின்றோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

எதுவும் மாறப்போவதில்லை. வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். சாதாரண பெரும்பான்மை மூலம் மாகாண சபை சட்டத்தின்படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு மாகாணங்கள் இணைக்கப்பட முடியும் என்று கூறப்படுகின்றது.

பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை மூலம் கூட இதனை நிறைவேற்ற முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் எந்தவித பொருளாதாரத்திற்கும் தீர்வும் கிடையாது.

அத்துடன் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமோ கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக உணர வேண்டும். ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை தான்.

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என்றார்.

அரசாங்கத்தை எதிர்க்கின்ற கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முக்கிய சந்திப்பு

அரசாங்கத்தை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமாரவெல்கம சம்பிக்க ரணவக்க , அனுரபிரியதர்சன யாப்பா எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள மத்தியில் ; முன்னோக்கி நகர்வது குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளதால் முன்னுரிமையளி;க்கவேண்டிய விடயங்களை அடையாளம் காண்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள கட்சிகள் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு விரும்பவில்லை,ஜனாதிபதி பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் அவர்கள் மத்தியில் கருத்துடன்பாடு இல்லை.

இதன்காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை அமைப்பது என தீhமானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 வது நாளாகவும் தொடரும் போராட்டம்

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக தெரியவருகிறது தெரியவருகிறது.

காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized