குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்-சி.வி.விக்னேஸ்வரன்

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுகிறேன். ஆகவே குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது.

22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. அமைச்சரவை நியமனம், அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

ஒருசிலரின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும்.

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் சாதக மற்றும் பாதகமான விளைவுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஒட்டுமொத்த மக்களாலும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொறுப்பு கூற வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுவது அவசியமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்தளவுக்கு காப்பீடாக அமைந்தது என்பது கேள்விக்குறியானதே.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள பின்னிணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால் 13ஆவது திருத்தம் ஊடாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் கூட இல்லாமல் போகும்,ஆகவே 13ஆவது திருத்தம் குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆகவே 20ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.

 

Posted in Uncategorized

எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 இல் தங்கியுள்ளது – விஜயதாச ராஜபக்ஷஎதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 இல் தங்கியுள்ளது – விஜயதாச ராஜபக்ஷ

எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன.

எனினும் தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி ஏனைய நாடுகளின் ஆதரவு மற்றும் ஜி எஸ் பி வரிச்சலுகை போன்றவை இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்!

அண்மையில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.

இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.

எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.

எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது பிரிட்டன் அரசியலின் மிகப் பெரிய குழப்பமாகப் பார்க்கப்படுகிறது.

லிஸ் டிரஸ்சுக்கு அடுத்தது ஒரு பதவி ஏற்றால் இந்த ஆண்டின் மூன்றாவது பிரிட்டன் பிரதமராக அவர் இருப்பார்.

கன்சர்வேட்டிவ் கட்சியால் அடுத்து ஒரு பிரதமரை தேர்வு செய்ய இயலுமா? அதன் மூலம் அந்தக் கட்சியால் நாடு பொதுத் தேர்தலை சந்திக்காமல் தடுக்க முடியுமா? என்பது இப்போது கேள்வியாக உள்ளது.

இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

புனர்வாழ்வு சட்டமூலம்:உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு-செய்திகளின் தொகுப்பு

வன்முறையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புனர்வாழ்வு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலமானது, நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்து கணிப்பு ஆகியவற்றின் பின்னர், சரத்துகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, அதனை அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை நீண்ட காலம் முகாம்களுக்குள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கையில் ஐந்தில் ஒரு பகுதி மக்களே போஷாக்கான உணவை உட்‍கொள்கின்றனர்

இலங்கையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மாத்திரமே போஷாக்கான உணவை உட்‍கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழு கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களாக நாட்டில் நிலவும் போஷாக்கின்மை நிலைமை, தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்துள்ள நிலையில், இந்நிலைமையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில்கூடிய போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, உரங்களின் தேவை, எதிர்காலத்தில் விளைச்சல் குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் குழு நாட்டில் கடன் மறுசீரமைப்பு மற்றும் மருந்து பாவனை தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களையும் ஏற்கனவே கேட்டிருந்தது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணைகளிற்கு உதவ தயார் என பிரிட்டன் கருத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் -அந்த வேண்டுகோள் பொருத்தமானதாக சட்டபூர்வமானதாக அவசியமானதாக காணப்பட்டால் அதனை பரிசீலிக்க தயார் என பொதுச்சபைக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகளிற்கு உதவுவதற்காகவும் கொல்லப்பட்ட பிரிட்டிஸ் பிரஜைகளின் உடல்களை அனுப்புவதற்கு உதவுவதற்காகவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவு தனது நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் உதவுவதற்காக மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் இன்னமும் எவரையும் நியமிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உரிய விசாரணைகள் இடம்பெறாததால் இந்த விடயத்திற்கு இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை என கடந்த ஜூலையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

மேலும் விசாரணைகள் பூர்த்தியடையாததால் நான் பிரிட்டனின் உதவியை நாடுவேன் என ரணில் அவ்வேளை தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக  நன்றியும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவார்.

இவ்வாறு விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வெளியிட்டார். அவர்களின் பெயர்கள் வருமாறு,

01) வரதராஜன்

02) ரகுபதி சர்மா

03) இலங்கேஷ்வரன்

04) நவதீபன்

05) ராகுலன்

06) காந்தன்

07) சுதா

08) ஜெபநேசன்

அன்று சிங்களம் மட்டும் இன்று ஆங்கிலம் மட்டுமா – நீதி அமைச்சரிடம் மனோ கணேசன் கேள்வி

1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததைப் போன்று, இன்று ஆங்கிலம் மட்டும் சட்டம் கொண்டு வருகின்றீர்களா? அதென்ன எதையெடுத்தாலும் “மட்டும்” என்கிறீர்கள்?” என இன்று நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டக்கல்லூரி பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்படுவது என்ற புதிய விதி பற்றிய சர்ச்சை நாடாளுமன்றத்தில் எழுந்த போது அதில் தலையிட்டு மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது,

“இலங்கையில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மற்றும் ஆட்சி மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். இந்த மூன்றில் விரும்பிய ஒரு மொழியில் பரீட்சை எழுத சட்டக்கல்லூரி மாணவர் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆங்கிலம் அவசியம்தான். ஆனால், ஆங்கிலம் மட்டும் என்றால் அது கொழும்பில் உள்ள ஒரு வகுப்புக்கு மட்டுமே உதவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று 19.10.22 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிதி ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது தடையவியல் காவல்துறையினர், மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி ஆர்.றொஹான் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் பகுப்பாய்வு நடத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

Posted in Uncategorized

எனது அன்பு பூமியின் மிகவும் அழகான இலங்கை தேசத்திற்கானது-எரிக்சொல்ஹெய்ம்

எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக பல வருட சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமாக நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக உறவை வளர்த்துக்கொண்டேன் ஆனால் பலர் கருதுவதற்கு மாறாக ஏனைய இலங்கை அரசியல்வாதிகள் பலருடன் எனக்கு சிறந்த உறவு உள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவை சந்தித்தேன். பரஸ்பரம் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம். சம்பந்தன் சுமந்திரன் போன்ற பல தமிழ்தலைவர்களை எனக்கு தெரியும், ஆகவே எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது .

என்னால் உதவிவழங்க முடியுமா என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார் என்னையும் மாலைதீவின் முகமட் நசீட்டையும் அவர் கேட்டுக்கொண்டார் என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.