அநுர மீது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்க தயாராகும் இந்தியா!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு இந்தியா தயாராகி வருவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.

தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவும் வீழ்ச்சியடையவும் விரும்பாத இந்தியாவின் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி அநுர எட்டியுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என கருதியே தற்போது அநுரகுமார திஸாநாயகவை வெற்றியடைய செய்ததாக ஆய்வாளர் அரூஸ் கூறினார்.

இதேவேளை, பூகோள அரசியலில் இருந்து அவர் தப்பி பிழைப்பதே அநுரவின் அடுத்த சவால் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அநுர அரசின் அதிரடி : முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

இதன்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் அரசியலமைப்பு பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்படும்.

வழக்கமான முறைப்படி, அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைக்கு உரிமை உண்டு.

அமைச்சுப் பணியாளர்களின் விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்து
கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் அல்லது கணவர்கள் அதே உரிம சிறப்புரிமைக்கு உரிமையுடையவர்கள்.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு திணைக்களம் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Posted in Uncategorized

சந்திரிக்காவின் பரிதாப நிலை : காணிகளை விற்று வாழும் அவலம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் போது தனது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அநுர குமார தலையைிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் பேசிய குமாரதுங்க,

தாம் அரசாங்கத்திடம் இருந்து எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

தனக்கு ஒன்பது வருடங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரிடமிருந்தும் எதையும் வாங்கி சாப்பிடவில்லை. எங்களிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுத்தோம். நான் ஜனாதிபதியாக இருந்து வீட்டிற்குச் சென்றபோது, ​​​​என் வங்கிக் கணக்கு உண்மையில் ஓவர் டிராஃப்ட் ஆனது, பின்னர், நான் நிலத்தை விற்று வாழ்கிறேன்.

எனக்கு அரசாங்கத்திலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியின் ஒன்பது வருடங்களில் எனக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை, நான் மின்சார கட்டணத்தை செலுத்துகிறேன். என்னிடம் நான்கு வாகனங்கள் உள்ளன, மேலும் 4 கார்கள் உள்ளன என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் : பீதியில் ஊழல் அரசியல்வாதிகள்

சட்டவிரோதமாகவும் மற்றும் முறைக்கேடாகவும் மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனைவரும் சீக்கிரத்தில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை தனியார் ஊடகம் ஒன்றின்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தண்ணீர் காட்டுவதாக சில சூழ்ச்சிக்காரர்கள் சவால் விட்டுகொண்டு இருக்கின்றனர்.

நாட்டில் நடைபெற்ற ஊழல் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் போது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டியவர்களின் பட்டியல் வெளியிடப்படும் அப்போது மக்களுக்கு தெளிவு கிடைக்கும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதையடுத்து எமது கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! விஜேதாச ராஜபக்‌ச அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

நீதி மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்‌ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டார்.

இந்நிலையில் எதி்ர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதற்குப் பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (ஜாதிக பிரஜாதந்திரவாதி பெரமுண) பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அதன் உபதலைவர் கோமிக யஸஸ் விஜேசிர அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியால் முப்படையினர் அழைக்கப்பட்டமை குறித்து விளக்கம்!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும்.

அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படையினரை வரவழைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

இது முற்றிலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் வழமையான வர்த்தமானியாகும். இருப்பினும் சமூக வலைதளங்களில் இது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான அச்சுறுத்தல்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்பத் துயகொண்டா, பொதுமக்கள் தற்போது பல வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமைச்சரவை பேச்சாளராக விஜித ஹேரத் நியமனம்!

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (30) மாலை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்த குழுமத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்க விரும்புகின்றனர் அதே நேரம் தமிழ் தேசிய இனம் தன் உரிமைகளை இன்னும் இத்தீவில் பெற்று கொள்ளாத நிலையில் தியாக வேள்வியை கடந்து இன அழிப்பிற்கு உள்ளாகி பரிகார நீதியையும் நிரந்திர சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் கோரி நிற்கின்ற சூழலில் கட்சி அரசியலை தாண்டி தமிழ்த் தேசியக்கொள்கை அரசியல் தளமே முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழிகாட்ட நிபுணத்துவமும் பல் பரிணாம ஆளுமையும் தமிழ்த் தேசிய பற்றுறுதியும் கொண்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் அணி வடகிழக்கில் களம் காண வேண்டும் என்பது இன்று தமிழர்கள் அனைவரது வேணவாக இருக்கின்றது.

கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பொதுச்சபை என்பவற்றின் கருத்தாணைகளை தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர்.

இதற்கான வடகிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதிவாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அனைத்து தமிழ் மக்களிற்கும் அறைகூவல் விடுகின்றது.

கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பொதுச்சபை என்பவற்றின் கருத்தாணைகளை தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர்.

இதற்கான வடகிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதிவாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அனைத்து தமிழ் மக்களிற்கும் அறைகூவல் விடுகின்றது.

Posted in Uncategorized

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தவர்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படும் அபாயம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் மற்றும் பெயரில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுதேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்காமல், பொதுக்கட்டமைப்புடன் அரசியலை தொடரும் நபர்கள் நிபந்தனை இன்றி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் சுமந்திரன் அறிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்றைய தினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சிகளுக்கு அழைப்பு
”நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும், இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.

அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.

ஆகவே நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகுவிரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம்” என கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பொதுத் தேர்தலில் களமிறங்க தீர்மானம் – சுமந்திரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவதற்கு கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அழைப்பை ஏற்று பங்காளிக் கட்சிகள் இணையாவிட்டால் தமிழரசுக் கட்சியாக தனித்துப் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடக்கு கிழக்கு தவிர தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் போட்டியிட பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized