மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாது அரசு – ஆளும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன்போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் COVID-19 நிலைமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரீஸ் தெரிவித்தார்.

கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான பாரிய பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்படுகின்ற போதும்,
தற்போதைய நிலையில் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் பரிந்துரை

இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினம் நியமிக்கப்படுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சபாநாயகர் தலைமையில் நடைபெறும் உயர் பதவிகளை நியமிக்கும் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வில் இவரது நியமனம் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டிலிவேர எதிர்வரும் 20 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

இந் நிலையில் வெற்றிடமாகவுள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அவர் தற்போது சட்டமா அதிபர் துறையின் சிரேஷ்ட அதிகாரியாக உள்ளார்.

AstraZeneca தடுப்பூசிகளை பெறுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபன தலைவருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom முயற்சிகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 வது ஆண்டு தினம் கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று  நடைபெற்றது.

மறைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் தின நிகழ்வு அவரை சுட்டுப் படுகொலை செய்த இடமான யாழ்.கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று வியாழக்கிழமை(06-05-2021) ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமானா நிரோஜ் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த தலைவர்,போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பொதுச்சுடர் ஏற்றி வைத்து எழுச்சி தினம் ஆரம்பமானது,தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்,செயலாளர் நாயகம் கருணாகரம்,பொருளாளர் விந்தன் கனகரத்தினம் மலர் மாலை அணிவித்தார்கள்.

நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளின் இறுதியாக கட்சியின் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோதரலிங்கம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

குறித்த நினைவேந்தல் தின நிகழ்வு முடிவடையும் தருவாயில் கோப்பாய்ப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தமையால் அப்பகுதியில் திடீர் பரபரப்புத் ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த கோப்பாய்ப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனரா? என நன்கு நோட்டமிட்டதுடன் தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் ஒன்றுகூடியிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.

அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற யாழ் மாணவன் தனராஜ் சுந்தர்பவனை ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் நேரில் சென்று கெளரவித்தார்

க. பொ.த. உயர்தர பரீட்சையில் 2020 புதிய பாடத்திட்டத்தில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற யாழ் சரசாலை மாணவன் தனராஜ் சுந்தர்பவனையையும், உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் 30 வது இடம் பெற்ற அவர் சகோதரி தனராஜ் தரணிகாவையும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினுடைய ஊடகப் பேச்சாளர் சந்தித்து கெளரவித்தார்.

அவருடன் நல்லூர் ரெலோ பிரதேச சபை உறுப்பினர் மதுசூதன்,ரெலோ சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜீதன் ஆகியோர் கலந்து டொண்டனர்.

வீழ்ச்சியடைந்த தமிழத்தின் கல்வியை அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்று எழுச்சியையும் இனத்துக்கு கெளரவத்தையும் பெற்றுத் தந்தவர்கள் தொடர்ந்தும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்தினார்.

Posted in Uncategorized
Telo Sri Anna 2021

தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்

தலைவர் ஸ்ரீசாபாவின் 35 வது நினைவு நாள் – 06/05/2021

“தமிழ் தேசிய ஒற்றுமை வாரம்”

(சித்திரை 29 – வைகாசி 06)

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்
விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை
குலைந்த,குலைக்கப்பட்ட நாள்!!
ஈழக் கனவு கலைந்த,கலைக்கப்பட்ட நாள்!!!
சுதந்திரத்துக்காக போராட
சுதந்திரம் மறுக்கப்பட்ட நாள்!!!
எம் மீதும் எம் தலை(வன்) மீதும்
துரோகம் சூட்டப்பட்ட நாள்!!!!

தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்

சுதந்திரம் எமது பிறப்புரிமை சுயாட்சி எமது கோரிக்கை

Posted in Uncategorized

கொழும்பு துறை முக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது

கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று (05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்குப் பின்னர், அந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900 த்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Telo Sri Anna 2021

தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு எழுச்சி

நாளைய தினம் 06/05/2021 காலை 10.00 மணிக்கு மறைந்த எம் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அவரை சுட்டு படுகொலை செய்த இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் நடைபெறும்.

நிகழ்வுகள்,

01,மறைந்த தலைவர்,போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி,
02,பொதுச்சுடர் ஏற்றுதல்,
03,தலைவரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தல்,
04,திருவுருவ படத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்துதல்.

நாட்டின் கோவிட் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 06-05-2021 அன்று எளிமையான முறையில் நடைபெறும்.