இலங்கை அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படுவதாக கூறப்படும் சித்திரவதைகள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்து காவல்துறை, இலங்கையின் காவல்துறையினருக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என ஐ. நாவின் முன்னாள் மனித உாிமை சிறப்பு அறிக்கையாளா் பேராசிாியா் Manfred Nowak தெரிவித்துள்ளதாக ‘The Sunday Post’ தொிவித்துள்ளது.
மேலும் குறித்த செய்தியில்,இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்த அகதிகள் இலங்கை காவல்துறையினரின் ஈவிரக்கமற்ற தன்மை குறித்து தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அகதிகள் தெரிவித்தது உண்மை என்பது உறுதியானால் இலங்கை காவல்துறையினருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கும் பயிற்சியை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.