கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்- சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

இலங்கையில் அமைதியாக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தும் சட்டம் பிரயோகிக்கப் பட்டிருப்பதானது, கருத்து சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன் படுத்துவதை வெளிப்படுத்தி இருக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் பல இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு போராட்டங்களை நடத்துபவர்களை கைது செய்யும் காவல் துறையினர், நீதி மன்றம் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தாலும், அந்த உத்தரவை மீறி தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப் படுவது இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்தப் படுவதை வெளிப்படுத்தி இருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை சாடியுள்ளது.