டைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தற்போது கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.