இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினம் நியமிக்கப்படுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சபாநாயகர் தலைமையில் நடைபெறும் உயர் பதவிகளை நியமிக்கும் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வில் இவரது நியமனம் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டிலிவேர எதிர்வரும் 20 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.
இந் நிலையில் வெற்றிடமாகவுள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அவர் தற்போது சட்டமா அதிபர் துறையின் சிரேஷ்ட அதிகாரியாக உள்ளார்.