சீனாவின் எட்டு நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா

டி.ஜே.ஐ டிரோன் (ஆளில்லா விமானம்) நிறுவனம் உட்பட, எட்டு சீன நிறுவனங்கள் மீது சில புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களின் பங்குகளை குடிமக்கள் வாங்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

டி.ஜே.ஐ ஆளில்லா விமான தொழிநுட்ப நிறுவனத்தின் ஆளில்லா விமானங்கள்இ சீனாவில் உள்ள வீகர் இஸ்லாமியர்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இது ஓர் அடையாள ரீதியிலான தடையாகவே கருதப்படுகிறது. காரணம் டி.ஜே.ஐ பொதுவெளியில் வர்த்தகமாகும் நிறுவனமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்கள் டி.ஜே.ஐ நிறுவனத்தின் ஆளில்லா விமானங்களை வாங்கலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமென்னவெனில்இ 900-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் உள்ள பொது பாதுகாப்பு முகமைகள் டி.ஜே.ஐ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றன.

இதில் நியூயார்க் நகர காவல்துறையும் அடக்கம். கடந்த ஆண்டுஇ அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஆளில்லா விமான சந்தையில் கிட்டத்தட்ட 80மூ சந்தையை பிடித்துள்ளது டி.ஜே.ஐ என துறை சார் தரவுகள் கூறுகின்றன.