நாட்டை முன்கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
“ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது எனவும் இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவினால் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.