ஜனாதிபதியின் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகிக்கும் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி நாட்டில் இருந்து வௌியேறியுள்ள காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோனும், நிதி, பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளின் பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக கீதா குமாரசிங்கவும், தொழிநுட்ப பதில் அமைச்சராக கனக ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.