தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம் – பா.உ. இராகிருஷ்ணன்

மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்படும் என பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக அம்சம். எனவே, தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். ஆதரவையும் வழங்குவோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராகிருஷ்ணன்கூறினார்.

நுவரெலியா, தலவாக்கலையில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனாலும் அவ்வாறு இல்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். எம்மை பொறுத்தமட்டில் சர்வதேச அழுத்தத்தாலேயே தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இந்த அரசாங்கம் பல கபளிகரமான விடயங்களை செய்துவருகிறது முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது உதாரனமாக எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்ற பொருட்களுக்கு தட்டுபாட்டை ஏற்படுத்தி சந்தையில் அதனை இல்லாது போல் செய்து அந்த நிருவனங்களின் ஊடாக குறித்த பொருட்களை அதிக விலைக்கு விற்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது.

மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர விலையஅதிகரிப்பை பற்றி சிந்திப்பதில்லை சில பொருட்களுக்கு கட்டுபாட்டு விலை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது

இன்று அரிசிக்கு கட்பாட்டு விலை கிடையாது, எரிவாயிக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது. பால்மாவுக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது, அரசாங்கம் அவர்களுக்கு கீழ் செயற்படுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் இன்று அனைத்து பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அனைத்து பொருட்களையும் இந்த அரசாங்கம் கொண்டுவர நினைத்தாலும் அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை டொலர் இல்லாவிட்டால் மீண்டும் பால்மா, கேஸ், சீமெந்து ஆகிய விலைகள் அதிகரிக்கும், வாழ்க்கை செலவு இனி குறையாது இதற்கு கடவுளை நம்பவும் முடியாது அன்று ஐந்து ரூபாவுக்கு ஒரு ராத்தல் பானை கொள்வனவு செய்த காலத்தை மீண்டும் திரும்பி பார்க்க முடியாது.

நாட்டில் உரத்திற்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் தேயிலைக்கு கூட போதுமான உரம் கிடைப்பதில்லை இவ்வாறு சென்றால் தேயிலைதுறையும் விழ்ச்சியடையும் பெருந்தோட்ட நிருவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் வாசுதேவ நானயகாரவும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறார் அவ்வாறு இறங்கினால் நாங்களும் அவருக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்குவோம் மாகாணசபை தேர்தல் பலய முறையில் நடாத்தப்பட வேண்டமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை மற்றும் 13வது திருத்தத்தை வழுபடுத்தவும் இந்த மாகாணசபை தேர்தல் முக்கியமானதாகும். இதில் இந்தியாவின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும் என குறிப்பிட்டார்.

அதேவேளை, முன்னரெல்லாம் வரவு – செலவுத் திட்டம்வரும்போதுதான் பொருட்களின் விலை மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு என்றார்.

சினிமோவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலப்பகுதியில் பாணுக்கு வரிசையில் நின்ற நாட்டுமக்கள் இன்று 40வருட த்திற்கு பிறகு இன்று பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.