ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜதந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
மேலும், இலங்கை அரசாங்கமும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் சானக்க பண்டார தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த சானக்க பண்டார,
“தெற்காசியாவில் மத அடிப்படைவாதம் அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்தோம்.
நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதுடன், ஆப்கானிஸ்தானில் பெரும் போரட்டம் நடைபெற்றதுடன் ஜனநாயக நிலைமை இல்லாமல் போயுள்ளது.
அங்கு தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதாவது, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி 3 நாட்கள் எனும் சிறிய காலப் பகுதிக்குள் தலிபான் அமைப்பு புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டனர்.
இந்த கைப்பற்றுதலைத் தொடர்ந்து, தெற்காசிய அரசியல் வலயத்தினுள் தீவிரவாத அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை காணமுடிகிறது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்றும் எமக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்காசியாவில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதம் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசு மத அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதால் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் மத ரீதியாக ஜனநாயகத் தன்மையை இழக்க நேரிடும். ஆகவே, தெற்காசியாவில் அங்கம் வகிக்கும் நாடென்ற ரீதியிலும் எமது அயல் நாடான பாகிஸ்தான், எமது தெற்காசிய வலயத்தில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாகிஸ்தானுக்கு விசேட பொறுப்பு காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும் ஆராய வேண்டுமென்பது அவசியமாகும்.
ஆகவே, சமாதானத்தை விரும்பும் தெற்காசிய மக்கள் கூட்டமொன்று எமக்கு தேவை. அடிப்படை வாதத்தை ஒழித்துக்கட்டி, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதனை ஏற்படுத்துவதற்கு சகல நாடுகளிலும், வலய மட்டத்திலுமாக பொதுவான பொறுப்பு இருக்க வேண்டும். சமாதானத்துடனான ஆசியாவை உருவாக்க வேண்டும். அது போலவே, முழு உலகுக்கும் சமாதானம் கிடைக்க வேண்டும்.
ஒரு நாடு, ஒரு சட்டம் என கூறும் எமது ஜனாதிபதிக்கு இந்த நாட்டை கொடுத்திருப்பது, எந்தவொருஅடிப்படைவாதமும் இந்நாட்டில் தலைதூக்காமல் இருப்பதற்காகும்.
இந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மீண்டுமொரு யுத்தத்தை அல்ல. சமாதானத்தை ஆகும். இந்நாட்டில் காணப்படும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் ஊடாக அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னிற்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும். மேலும், இலங்கை அரசாங்கமும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தெற்காசியாவில் அமைதியையும், ஒற்றுமையைும் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் முன்னின்று செயற்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
ஆகவே, எதிர்கால சந்தயினருக்கு அடிப்படைவாத அடக்க முறை நிலைமைகளை கொடுத்துவிட்டுச் செல்லாமல், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழும் நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்” என்றார்.
TRENDING TODAY
- தமிழ் நாடு அரசினால் நடைபெறும் உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு
- பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் ;ரெலோ தலைவர் செல்வம்
- இனப்பிரச்சினை தீர்க்க அரசாங்கம் செயல்பட வேண்டும் நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் -ரெலோ
- முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் -ரெலோ
- இந்தியா காசி அமைந்துள்ள “centre for sanatan research சட்டத்தரணி துஷ்யந்தன் திருக்கோணேஸ்வர ஆலய ராஜகோபுர கட்டுமானம்தொல்லியல் துறையினரின் அத்து மீறல் தொடர்பாக வெளிப்படுத்தி இருந்தார்
- பிறந்திருக்கும் பாலக இயேசு அனைவருக்கும் சமாதானத்தையும், மகிழ்வையும் அளிப்பாராக.
- ஈழமக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் தனியாத ஈர்ப்புக்கொண்டு இதய தெய்வமாய் வாழ்ந்த எம் ஜி ஆர் அவர்கள் இறந்த தினம் இன்று
- புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய பிராந்திய பாராளுமன்ற பொதுக்குழு ஒன்றுகூடலில் ரெலோ தலைவர் செல்வம்
- தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன்
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ – தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடையே விசேட கலந்துரையாடல்
- தமிழ்தேசிய கட்சிகளை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகள்
- இவ்வார இறுதியில் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களை சந்திக்கிறார் கெளரவ கஜேந்திரகுமார்
- இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது ரெலோ தலைவர் செல்வம்
- வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி-ரெலோ தலைவர் செல்வம்
- நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி, பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா ரெலோ செயலாளர் ஜனா
- மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா? மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் கேள்வி?
- நாம்பல விலைகளை கொடுத்திருக்கிறோம் இனப்பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது ரெலோ தலைவர் செல்வம்
- எமது இலக்கை நோக்கிய இலட்சிய பயணம் இலக்கை எட்டும் வரை தொடரும் ரெலோ செயலாளர் கோவிந்தன் கருணாகரம் ஜனா
- நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது – இலங்கைக்கான சீன தூதுவர்
- சசிகலா ரவிராஜ் எதிராக யாழில் விசமபிரச்சாரம்
{"ticker_effect":"slide-h","autoplay":"true","speed":"5000","font_style":"normal"}