பாதிக்கப்பட்ட மக்கள் வன்னி மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளார்கள் அரசாங்கம் உங்களது கவனத்தை செலுத்துங்கள்

22/11/2025 சனிக்கிழமை பாரளுமன்ற அமர்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்தின் சார்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஆற்றிய உரை.

ஊடகத்துறையில் தமது அர்பணிபான ஊடக தர்மத்தை கொண்டிருந்த சிவராம்,நடேசன் ,சுகிர்தராஜன் மற்றும் ஊடகத்துறையில் தமது உயிரை அர்பணித்த எமது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஊடகத்துறையானது, அரசியல்வாதிகள் ,அரசாங்கம் , மற்றும் பொதுவான வர்த்தகதுறை சார்ந்ததாக இருப்பினும் அவற்றுக்கு இன்றியமையாததாக காணப்படுவதுடன் ,இவ் ஊடகத்துறையானது எமது விடயங்களை மக்கள் மத்தியில் அதன் உண்மை தன்மையுடன் கொண்டு செல்கின்ற தார்மீக பொறுப்பை கொண்டுள்ளது.இவற்றுள் சரியானதாகவும் , உண்மையை வெளிக்கொணரும் ஊடகங்களும், உண்மைக்கு புறம்பானதாக செயற்படும் சிலதும் காணப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகிறது ,குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத்திட்ட வசதிகள் இல்லை, நிரந்தர வருமானத்தை தீர்மானிக்கும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் ,அவர்களது ஊதியங்கள் வழங்கப்படவேண்டும்.முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும். ஊடக துறை சாந்தவர்களுக்கான வங்கிகளில் கடன் மறுக்கப்படுகின்ற நிலை மாற்றப்படவேண்டும்.

அடிப்படை மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கின்ற இந்த அரசாங்கம் அடிப்படை மக்கள் அடிப்படை மக்களுடைய தேவைகளை கண்டுகொள்கின்ற இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அதனை உணர்ந்த அரசாங்கம் என்றதன் அடிப்படையில் இந்த ஊடகத்துறையில் தங்களது கவனம் அவசியம் இருக்கவேண்டும் .

சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் எமது வன்னி மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முக்கியமாக நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு உள ரீதியான பாதிப்புக்குள்ளான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது பிரதேசங்களில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் மந்தகதியில் இயங்குவதை அமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

குறிப்பாக முல்லை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள மாவட்ட ஆதார வைத்தியசாலைகள் மக்களது சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைகள் காணபாபடுகிறது.வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள்,தாதியர் மற்றும் ஊழியர்கள் மிகுந்த அர்பணிப்புள்ள சேவையை வழங்கிவரும் நிலையில் வைத்தியசாலையில் பெளதீக வழங்கள் ,மருத்துவ உபகரணங்கள் ,தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் மற்றும் பரூந்துபொருட்கள் என்பன அற்ற நிலைகளே தொடர்கின்றது.

இந்த விடயத்தில் எமது பிரதேச வைத்திய சாலைகளில் உள்ள சில விடயங்களை சுட்டிக்காட்ட விளைகிறேன் அந்த வகையில் ஆளனி பற்றாக்குறை ,கட்டடங்களது தேவைகள் ,மருத்துவ சேவைக்கான முக்கிய இயந்திரங்கள் அற்ற நிலையே காணப்படுகிறது.எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் உயர்ஸ்தானிகராக இருக்கலாம் ,வன்னி மாவட்டங்களுக்கு,வருகைதருவது மிக மிக குறைவாகவே காணப்படுகிறது.அமைச்சர்கள் ,அரசாங்க பிரதிநிதிகள் வன்னி மாவட்டங்களை வந்து அவற்றின் தேவைகளை ,குறைகளை நீக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் எமது வன்னி மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளார்கள்.A9 வீதியூடாக யாழ்ப்பானத்திற்கு,விஜயம் மேற்கொள்ளும் அரசாங்க அமைச்சர்கள்,உயர்ஸ்தானிகர்கள் எமது வன்னி மாவட்டங்களுக்கு வருகைதரூவது மிகக்குறைவாகவே காணப்படும் நிலை தொடர்கிறது.அமைச்சர்களுடைய வருகை அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளூமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலே நடைபெறுகிறது அமைச்சர்களது வருகை தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
வைத்தியசாலைகளில் மனித வளங்களை எடுத்து,நோக்குவோமாக இருந்தால் எமது வைத்தியசாலையில் மயக்கவியல் நிபுணர் சம்மந்தமாக பலமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தும் மயக்கவியல் நிபுணர்கள் மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் இரண்டு பிரதேசங்களில் பணியாற்றுகிறார்கள் அங்கிருந்து மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் இன்றுவரை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்கவில்லை வைச்சிய கலாநிதி, .M.D.D சில்வா அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் வைத்திய கலாநிதி ,D.K.R.கனங்கரா எம்பலப்பிட்டியவிலிருந்தும் வருகைதரவில்லை.

எமது,முல்லை,மன்னார் போன்ற பிரதேசங்களில் Ambulance நோயாளர் அவசர காவு,வண்டிகளின் பற்றாக்குறை, என்பது காலம்காலமாக தீர்க்கப்படாமலே காணப்படுகிறது.குறிப்பாக கற்பிணி தாய்மாரின் குழந்தை பேற்றுக்காக அவர்களை யாழ்பாபாணம்,மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தால் சுமார் 2 மணி நேரம் எடுக்கும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளரின் நிலை மிகவும் அச்சத்திற்கு உரியதாக காணப்படுகிறது. ஆகவே எமது மாவட்ட வைத்திய சாலைகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீராத்துவையுங்கள்.
எமது வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட வைத்தியர்கள். இற்றைவரை வந்து பணிப்பொறுப்பை ஏற்கவில்லை. கடந்த முறை அமைச்சர் அவர்களே உங்களது மன்னார் விஜயத்தின் போது CCT SCAN இயந்திரம் ஒன்றை தருவதாக அந்த CCT உறுதியளித்திருந்தீர்கள் ,ஆனால் அந்த இயந்திரத்திற்கான கட்டடம் இருந்தும் அது எமக்கு நிரந்தரமாக வழங்கப்படாத குறை உள்ளது. CCT SCAN இயந்திரத்தை நிரந்தரமாக பெற்றுதாதருவதாக உறுதியளித்துள்ளீர்கள். அத்தோடு எமது வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகளை வழங்கி முல்லை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களது கவனத்தை செலுத்துங்கள்.

உண்மையிலே எமது வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையை பாராட்டுகிறேன். மன்னார் வைத்தியசாலையில் மக்கள் போக பயன்படுகிறார்கள் ,தயங்குகிறார்கள். வைத்தியசாலையில் உயிரோடு அனுமதிக்கப்பட்டால் பிரதேமாகத்தான் வரவேண்டும் என்று அச்சப்படும் நிலை தொடர்கின்றது. உயிரற்ற உடலாக வந்துவிடுவோமோ என்ற அவநம்பிக்கை அங்கே நிலவுகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தேறும் நேரத்தில் வைத்தியசாலையையும், பணிபுரியும் வைத்தியர்களையும் மக்கள் சூழ்ந்துகொள்ளுகிறார்கள். தவறுக்கான காரணங்களை கேட்கிறார்கள். ஆனால் வைத்தியசாலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாதிருக்கின்ற முல்லை மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் எப்படி தத்தமது கடமைகளை சிறப்பாக ஆற்ற முடியும்?

உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் இருந்து தமிழ் மொழி தெரியாத சிங்கள வைத்தியர்கள் எமது பிரதேசங்களில் மனமுவந்து ஆற்றும் சேவைக்காக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். ஆனால் தமிழ் வைத்தியர்கள் தத்தமது பல்கலைக்கழக பட்டம் பெற்றதன் பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லுகிறார்கள். இந்த நிலையில் சிங்கள வைத்தியர்கள், தாதியர்களுக்கு எனது பாராட்டுகள்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிற வைத்தியசாலையாக அது இனம்காணப்பட்டுள்ளது. சேவை செய்ய பனிக்கப்படுகின்ற வைத்தியர்கள் அங்கே சென்று 6 மாதங்கள் அல்லது 1 வருட காலப்பகுதியிலோ மாற்றத்தை பெற்று திரும்பி செல்லுகின்ற நிலை மன்னார் வைத்தியசாலையில் காணப்படுகிறது. ஆகவே கஸ்ரப்பிரதேசத்தில் இருந்து அந்த வைத்தியசாலை நீக்கப்பட்டு சகலவசதிகளோடும் இயங்கும் போதுதான் சேவையாற்ற நிரந்தரமாக வைத்தியர்கள் வருகைதரும் சந்தர்ப்பங்கள் காணப்படும். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றம் கேட்டு அதனை பெற்று விலகிச்செல்லுகிறார்கள். இவ் ஆளனி விடயங்கள் சம்பந்தமாக கெளரவ அமைச்சர் அவர்களது கூடுதல் கவனம் இருக்கவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
இந்திய அரசாங்கத்தால் முல்லைத்தீவு மற்றும் மன்னார் அரச வைத்தியசாலைகளுக்கு உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. மன்னாரில் இறுதியாக பிரதம செயலாளர் கையொப்பமிட்டுள்ள வகையில் காலதாமதம் செய்யாமல் அதனை உடனே அமுல்படுத்தவேண்டும் என்று அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அமைச்சர் அவர்களே ஆண்டுதோறும் அண்ணளவாக 2208 நோயாளர்கள் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்ற அபாயநிலை காணப்படுகிறது. ஆகவே இந்த விடயத்திலே கூடுதலான கவனத்தை எடுக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு அதாவது ,JVP ,NPP அரசாங்கம் என்பது அடிப்படை மக்கள் மத்தியில் இருந்து உருவாகிய ஒரு ,நீங்கள் ஒவ்வொருவரும் கட்டமைப்போடு உருவாகியவர்கள் நீங்கள் ஆகவே எமது மக்கள் வைத்தியசாலைகளுக்கு அதிகாலை 05:00 மணிக்கு வருகிறார்கள் அவர்கள் தமது உணவைக்கூட உண்ண முடியாத நிலையில் மதியம் 01:00 வணி வரை தத்தமது மருந்துப்பொருட்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை பரிசோதனை செய்யாமலேயே எழுதப்பட்ட மருந்துகளை வழங்குவது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. ஆகவே இந்த விடயத்திலும் அமைச்சர் அவர்களே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். எமது முல்லைத்தீவு மற்றும் மன்னாரையும் நீங்கள் உங்களது இரு கண்களாகவே பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இறுதியாக உண்மையிலே ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதாவது இங்கே பலபேர் உண்மையில் எனக்கும் உளரீதியான உடன்பாடில்லை. ஏனென்றால் நான் ஆயுதமேந்தி போராடியவன் என்ற அடிப்படையிலே இந்த மாகாண சபைக்குள்ளான வைத்தியசாலைகள், நடுவன் அரசுக்கு செல்லுவது என்பது பலபேரும் எதிர்த்துக்கொண்டிருக்கிற இந்த நிலையிலே எங்களது மன்னார் மாவட்ட மக்களுடைய அவநம்பிக்கை இந்த மாகாண சபை இப்பொழுது இருக்கின்ற இந்த மாகாண சபையினூடாக நிதிகள் கொடுக்கப்படும் விடயங்கள் கூட காலதாமதமாகி கவனிப்பாரற்ற ஒரு சூழலை காணுகின்ற அந்த நிலையிலே மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளை நடுவன் அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நடுவன் அரசு தனதாகாகிக்கொள்ளும் நிலையில் தான் மக்களது அடிப்படை எதிர்பார்ப்பு அதாவது வைத்தியசாலையில் இருந்து உயிரோடு திரும்பிவருவோம் என்ற அந்த நம்பிக்கையை நீங்கள் உண்டுபண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.