தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை ஆலடி சந்திக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியின் முன்னால் கேக் வெட்டப்பட்டது.