கொழும்பு 7 இல் உள்ள வீடொன்றின் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபையை சேர்ந்த ஊழியரின் கழுத்தை பிடித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளியே தள்ளிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டில் பாரிய தொகை மின்கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பது தொடர்பில் பல தடவை தெரியப்படுத்திய நிலையில், கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டிக்க சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவ்விடத்தில் நின்ற முன்னாள் அமைச்சர் மின்சார சபை ஊழியர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து, அவரை வெளியில் தள்ளியதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.