முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகம் பொலிஸாரால் தீவிர சோதனை!

பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகம் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்கள் வருகை தந்து அலுவகத்தை சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சி  கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

வௌ்ளை வேனில் அவர்கள் வருகை தந்து சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சி  கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

அவர்களில் சீருடையுடன் பொலிஸ் அதிகாரி ஒருவும் இருந்ததாக அவர் கூறினார்.

வௌ்ளை வேனுக்கு மேலதிகமாக நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான சில வாகனங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.