ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2024 வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய் பெற்றுக்கொண்டார்.
“நான் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பசறையில் உள்ள இளைஞர்களுக்காக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் அரசியலில் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள்,” என்றார்.