திருகோணமலையில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை(16) முற்பகல்-10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இந்த நிலையில் நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தத் தயங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 55 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 709 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.