முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.