பல்வேறு காரணங்களுக்காக இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையை பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு 835 சம்பவங்களே இடம்பெற்றன ஆனால் இந்த வருடத்தின்முதல் 11 மாதங்களில் 3596 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன- கடத்தல் சம்பவங்கள் அச்சம் தரும் விதத்தில் பெருமளவு அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.