ஐ.நாவிற்கு பறந்த கூட்டமைப்பின் போலி அறிக்கை! அம்பலமாகும் இரகசியம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் அங்கத்துவ கட்சியைச் சார்ந்த எவரும் கையொப்பமிடவில்லையெனவும், அவை கூட்டமைப்பின் போலி அறிக்கையாகவே கருதப்படுமெனவும் ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளரும், முகாமைத்துவ ஆலோசகருமான சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கட்சியின் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் தலைவர்கள் கையொப்பமிடாமையினால் கூட்டமைப்பின் அறிக்கையாகவே கருத முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த அறிக்கைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே பொறுப்பு கூறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தற்போதைய உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன? ரெலோ அமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,