கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் இரண்டாவது டேர்மினலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானிடம் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேக்கியுடனான சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்காக ஜப்பான் அளித்த ஆதரவிற்காக நன்றி உடையவராக விளங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியானதும் இரண்டாவது முனைய பணிகள் ஆரம்பமாகும் என ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.