தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சமர்ப்பித்திருந்தார்.
இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் ஆட்சேபனைகளை பதிவு செய்துகொள்ளுமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டமூலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தங்கள் சபையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.