கோட்டடாபய ராஜபக்ஷ சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு தனது நாடு அனுமதியளித்ததன் மூலம் இலங்கையில் அமைதியான ஆட்சிமாற்றத்திற்கு உதவியுள்ளது என கருதுவதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்திற்கான அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
கேள்வி:- நல்லாட்சியும் ஊழல்இன்மையும்,இலங்கைக்கு மிகமுக்கியமான சொற்பதங்கள் முக்கியமான அபிலாசைகள். நானும் நீங்களும் பலதடவை இலங்கை குறித்தும் அதற்குள்ள ஆற்றல் குறித்தும் பேசியுள்ளோம்.
அமைச்சர் அவர்களே நாங்கள் மீண்டும் இந்த வருட ஆரம்பத்திற்கு திரும்பி செல்வோம் என்றால் ஏன் சிங்கப்பூர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுமதியளித்தது- புகலிடம் இல்லை அதனை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன்.
நான் இங்கு சந்தித்த இலங்கையர்களும் புலம்பெயர் தமிழர்களும் இந்த அனுமதி குறித்து கடும் அதிர்ச்சியும் சீற்றமும் வெளியிட்டிருந்தனர் – பிழையான செய்தியை இது சொல்லியதாக கருதினர்?
பதில் :- நான் இது குறித்து என்ன தெரிவிக்க விரும்புகின்றேன் என்றால் அதிகாரமாற்றம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி சிங்கப்பூரிற்கு வந்தவேளை அவர் அப்போதும் ஜனாதிபதியாக காணப்பட்டார், அவர் அதன் பின்னர் தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அவர் அதன் பின்னர் ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக விளங்கினார்,நாங்கள் அவரை ஒரு சாதாரண இலங்கை பிரஜையாகவே நடத்தினோம்.
அவர் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே சிங்கப்பூரில் தங்கியிருந்தார், எந்த இலங்கை பிரஜைக்கும் அதற்கான உரிமையுள்ளது.
நாங்கள் அவருக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை, விடுபாட்டுரிமையையும் வழங்கவில்லை,பாதுகாப்பையும் வழங்கவில்லை.
இது சட்டத்தின் ஆட்சி தொடர்பானது மிகவும் அவதானமாக நியாயமான முறையில் நடந்துகொள்வது தொடர்பானது நாங்கள் அதனை செய்தோம்.
இலங்கையில் அமைதியான முறையில் அதிகாரமாற்றத்திற்கு நாங்கள் உதவியுள்ளோம் என்றால் அது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றோம். அவர் மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.
நான் அந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும் என நம்புகின்றேன். நான் பல தடவை இலங்கைக்கு சென்றிருக்கின்றேன்,உலகம் முழுவதும் இலங்கை மக்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக திகழ்கின்றனர்,
இலங்கை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தீவு.ஆனால் அவர்களிற்கு அரசியல் அமைப்புமுறையொன்று அவசியம், நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு- இனம் மதம் மொழி
அனைத்து மக்களிற்கும் அவர்கள் தங்கள் ஆற்றலை பயன்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்கவேண்டும்,இது இலங்கைக்கு முக்கியமான விடயம் என நான் கருதுகின்றேன்.