வறிய நாடுகளிற்கு கடன்வழங்கியவர்களின் மாநாட்டிற்கு முன்னதாக இலங்கைக்கு சீனா ஆதரவை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள வறிய நாடுகளிற்கு கடன்வழங்கியவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக இலங்கைக்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
எனினும் இலங்கையை பெரும் பொருளாதார அரசியல் நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பலமில்லியன் கடன்தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து சீனா எதனையும் தெரிவிக்கவில்லை.
இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சாதகமான பங்களிப்பை வழங்குவதற்காக சீனா உரிய நாடுகள் மற்றும் நிதியமைப்புகளுடன் இணைந்து செயற்படும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் கடனிற்கு இலங்கை விண்ணப்பித்துள்ளமைக்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.