மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று (13) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது அம்பிட்டிய சுமண தேரர் தனது அறையில் இருந்தார் என்றும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.