மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.