மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல்

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது ஆண்டு  நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது.

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது ஆண்டு  நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வுக்கு முன்பாக அன்னாரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் சார்ள்ஸ் மண்டபம் வரையில் கைகளிலும் கழுத்திலும் கறுப்பு பட்டியணிந்து ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட புனித மரியால் பேராலயம் வரையில் வருகைதந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.