யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதால் தூண்டப்பட்டு 40 வருடங்களிற்கு முன்னர் இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது என வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்
கறுப்பு ஜூலை குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
40 வருடங்களிற்கு முன்னர் இன்று கறுப்புஜுலை என அழைக்கப்படும் தினத்தில் இலங்கை தனது சமீபத்தைய வரலாற்றில் மிக மோசமான அத்தியாயத்தை சந்தித்தது.
யாழ்ப்பாணத்தில் 13 படையினர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் இது தூண்டப்பட்டது. தீவிர காடையர் கும்பல் நாட்டின் தென்பகுதியில் வாழும் தமிழ் மக்களை அர்த்தமற்ற விதத்தில் பழிவாங்கின.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த -மேலும் மூன்று தசாப்தகாலமாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாதம் வன்முறையில் உயிரிழந்த அனைத்து மக்களையும் நாங்கள் நிவைவுகூறுகின்றோம்.
மோதலின் போது 28000க்கும் மேற்பட்ட படையினரும் சட்டஅமுலாக்கல் பிரிவினரும் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காக உயிரிழந்தனர்.இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டினர்.
எனினும் வன்முறை தீவிரவாதம் அந்த மோதலுடன் முடிவிற்குவரவில்லை நாங்கள் மேலும் துயரம் தரும் பயங்கரவாத தாக்குதல்களையும் தொடர்வன்முறைகளையும் சமீப வருடங்களில் எதிர்கொண்டுள்ளோம்.
இலங்கை ஜனாதிபதி தனது 75வது சுதந்திர தின உரையில் நாங்கள் கடந்தகாலங்களை ஆராய்ந்து பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் இதன் மூலம் அனைத்து இலங்கையர்களும் இனமத பேதமி;ன்றி அமைதி சமாதானம் கௌரவத்துடன் நாட்டின் எந்த பகுதியிலும் வாழக்கூடிய ஐக்கிய இலங்கை அடையாளத்தை கட்டியெழுப்பலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்துடன் நல்லிணக்கத்தில் முன்னோக்கி நகர்வதற்காக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,இது தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்களை ஆற்றுவதற்கும் உண்மையை கண்டறிவதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்.
அதேவேளை இதற்கு சமாந்திரமாக இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கிய எதிர்கால பாதையில் உள்ளது,இது வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பலனளிக்கும்.
வடக்குகிழக்கிற்கான அபிவிருத்தி திட்டங்களில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நல்லிணக்க நடவடிக்கைகளிற்கு அப்பால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான தனது நேர்மையான நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி 13 வது திருத்தம் உட்பட முழுமையான யோசனைகளை வடக்குகிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும்.
நல்லிணக்கத்திற்கான ஒரு சமிக்ஞையாக 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சார்பிலும் அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கையின் அனைத்து பிரஜைகள் ஆகிய எங்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கும் பொறுப்பை நான் நிறைவேற்றுகின்றேன் என தெரிவித்திருந்தார்.
இது தாமதமானது என்றாலும் இன்னமும் இதற்கான நேரம் உள்ளது ( மன்னிப்பு கோருவதற்கு) என தெரிவித்திருந்த அவர் நாங்கள் ஒரு தேசமான குறிப்பாக இலங்கை அரசாக நாங்கள் முதிர்;ச்சியடையவேண்டும்,தேசிய மன்னிப்பை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
முதலில் கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் முழு நாட்டிற்கும் நாங்கள் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுமிகவும் முக்கியமான நடவடிக்கை ஆனால் இதுவே போதுமானது இல்லை.
உலகின் அனைத்து பகுதிகளையும்போல மக்களை துருவமயப்படுத்த பிரிக்க நினைக்கும் சமூகமொன்று காணப்படும்.
ஆனால் இந்த நாட்டின் மக்கள் ஐக்கியப்பட்டு அமைதி ஐக்கியத்திற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது உரிய செயலாகும்.