2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தற்போது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும்.
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரசாங்கத்தின் செலவீனத்திற்கு 7,885 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.
இளைஞர், யுவதிகளின் சிறந்த நாளைய தினத்திற்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பணிநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளைத் தாண்டி புதிய அணுகுமுறை மற்றும் புதிய வேலைத்திட்டம் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்.
- 8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது.
- சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையினூடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியன் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது.
- போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும்.
- புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும்.
- 52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.
- பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன.
- இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
- இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம்.
- பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
- 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
- மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் நம்பிக்கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மீண்டும் நெருக்கடியில் வீழ்த்தி விடாமல் இருக்க நாம் சிந்தித்து செயற்ப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
- பரிட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
- இந்த வரவு – செலவுத்திட்டம் சம்பிரதாய வரவு – செலவுத்திட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்.
- வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயுள்ளமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.
- சர்வதேச வர்த்தகத்திலிருந்து இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
- சர்வதேச மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர்ச்சியான வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்கவும் கலந்துரையாடவும் எதிர்பார்க்கிறோம்.
- முதலீட்டுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது அவசியமாகவுள்ளது. இதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- விவசாயத்துறைக்கு தனியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்குள் தொழிற்சங்கங்கள், தனியார் உாிமையாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவர்.
- நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
- எண்மாண தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
- கறுவா உற்பத்தி மேம்பாட்டுக்கு தனியான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்படும்.
- சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
- அரச மற்றும் தனியார் துறையில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களின் பங்குபற்றலுடன் புதிய தேசிய அபிவிருத்தி குழு நியமிக்கப்படும்.
- சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு 130 மாகாண பாடசாலைகள் மற்றும் 20 தேசிய பாடசாலைகளுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- வரிச்சலுகையின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றுப் பொறிமுறையொன்றை கட்டியெழுப்ப 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
- தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- புகைத்தல் பொருட்கள் சார் வரிவிதிப்பின் படி பீடிக்கு 2 வீத வாி அறவிடப்படும்.
- விசா மற்றும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 20% அதிகரிக்கப்படும்.
- அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வருட இடைநடுவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதுடன் 2023 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
- இரத்தினக்கல் விற்பனையை மேம்படுத்துவதற்காக புதிய வலயம் உருவாக்கப்படும். இதற்காக புதிய தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7%-8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
- சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் ஊடாக மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தை 100%க்கு மேல் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
- உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் எண்மாண பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்படும்.
- ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம் உருவாக்கப்படும்.
- தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.
- வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படும்.
- உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும்.
- தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
- 2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
- அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
- அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
- முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட நிவாரணம்.
- சிறுவர்களின் போசாக்குக்காக தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மதுவரித் திணைக்களத்துக்கு பாிசோதனைகளுக்கென நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூாிய சக்தி கட்டமைப்புகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- சிறைச்சாலைகளில் கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
- பதுளை, குருநாகல், பொலன்னறுவை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக மாற்றப்படும்.
- தொழிலாளர் சந்தைக்கான புதிய கொள்கைகள் காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்கப்படும்.
- விவசாய ஏற்றுமதிக்கு காணி வழங்கப்படுவதுடன், குறைந்த பயன்பாடுள்ள பயிரிடப்படாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக தொழின்முனைவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தேசிய அபிவிருத்திக்காக கனிம வளங்களை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- எங்களிடம் மக்கள் சவால்களை முன்வைத்திருக்கிறார்கள். முகங்களை மாற்றும் அரசியலைத் தவிர்த்து முறைமையை மாற்றும் பொறிமுறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- நாட்டை உயர்த்தும் புதிய முயற்சிக்கு செயல்வடிவிலான பங்களிப்பை வழங்குமாறு அனைவாிடமும் கோருகிறேன்.
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரை நிறைவுக்கு வந்தது.