இந்திய உயர்ஸ்தானிகர் நயினாதீவுக்கு விஜயம்

நயினாதீவில் முன்னெடுக்கப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம்(16) நேரில் சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றையதினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றையதினம்(16) காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

அதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் நயினாதீவுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் நயினாதீவில் முன்னெடுக்கப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன் நயினை ஆலயம் மற்றும் நயினாதீவு நாகவிகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.