விமல், கம்மன்பில இல்லாத மொட்டு இருக்கமுடியுமா?

விமலும் கம்மன்பிலவும் இல்லாத மொட்டு எவ்வாறானது? யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?ரட்டே ரால குறிப்பிடுவது பருப்பு இல்லாத ஹோட்டலை போன்று. உண்மையில் விமல் மற்றும் கம்மன்பில இல்லாமல் இருப்பது மொட்டுவுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அது மொட்டுக்கு சாதகமானதா பாதகமானதா ? அது தொடர்பில் நியாயமான ஒரு ஆய்வை மேற்கொள்வதாக இருந்தால் தற்போது மொட்டுவில் இருக்கக்கூடிய எண்ணிக்கையை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

சிறிய கட்சி கூட்டணியை விடுத்து அடுத்த எல்லாம் மொட்டுவினுடையமது என்று யாருக்காவது சொல்ல முடியும். ஆகையால் அதனை ரட்டே ரால ஒரு போதும் ஏற்றுக்கொள்வது கிடையாது. இதனுள்ளே இன்னும் பல பிரிவுகள் காணப்படுகின்றன. அதாவது வெறுப்படைந்த மொட்டு உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நிலையை தற்போது அளவிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று வெறுப்புணர்வோடு இருக்ககூடிய மொட்டுவின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் வாயை திறக்காவிடினும் அவர்கள் விமலிற்கும் கம்மன்பிலவிற்கும் நடந்ததை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது உறுதி. எங்களுக்கும் இதுதான் நடக்கும் என்ற பயத்தினால் அவர்கள் வாயை மூடி இருக்கின்றார்கள். அதற்குப் புறம்பாக ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டது ராஜபக்சக்களுக்கிடையே பிளவுகள் இருப்பதாக. தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிறிய கட்சி கூட்டணியின் ஊடக கலந்துரையாடலில் விமல் அதனை நிரூபித்திருக்கிறார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை அனுப்புமாறு கேட்டிருக்கின்றார். அப்போது மஹிந்த பைத்தியமா என்று எழுதிய அந்த பதவி விலகல் கடிதத்தை ஏதோ ஒரு அடிப்படையில் நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் மஹிந்த பைத்தியம் என்று குறிப்பிட்டது யாருக்கு என்பது இன்னும் தெரியவில்லை.

அதேபோன்று தொடர்ச்சியாக பெசில் அவருக்கு அவசியமான வகையில் கோட்டாபயவை வழி நடத்துகிறார் என்று விமல் குறிப்பிடுகின்றார். அப்போது எங்களுக்கு வெளிப்படையாக இதன் உள்ளே இரண்டு குழுக்கள் இருப்பதை காண முடிகின்றது. அவையாவன மஹிந்த, பெசில்,அடுத்தது பெசில் பலவந்தமாக வழிநடாத்தும் கோட்டாபய. தற்போது ரட்டே ரால தொடராக குறிப்பிட்டு வந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சக்களிடையே பிளவு உள்ளது. அடுத்ததாக பாருங்கள் அந்த பிளவு ஏற்பட்டது என்ன காரணத்திற்காக என்று? உண்மையில் இந்தப் பிளவானது ஏற்பட்டிருப்பது அதிகாரம் தொடர்பில் ஆகும். எதிர்கால அரசியல் பலம் தொடர்பில் ஆகும். விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் 2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் பெசில் மஹிந்தவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கேட்டுள்ளார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் வருவதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். அதற்கு விமல் இணங்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் விமலுக்கு பின்னர் மஹிந்தவும் இருந்திருக்க கூடும். அடுத்ததாக பொது ஜனபெரமுன என்பது பெசிலின் தனிப்பட்ட சொத்து என்று விமல் குறிப்பிடுகின்றார். கடந்த காலத்தில் மகிந்தவின் பிரதமர் பதவியை கழற்றுவதற்கு பெசில் பெரிய முயற்சி எடுத்தார் என்பது நாட்டுக்கு தெரியும்.

அவ்வாறாயின் ஒன்று வெளிப்படையானது. பெசில் இந்த அனைத்தையும் செய்வது 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு வர.ரட்டே ரால சொன்ன அனுமானத்தை தற்போது விமல் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். பெசில் மஹிந்தவை மீறி அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சி செய்த பல சந்தர்ப்பங்கள் இதனுள்ளே காணப்படுகின்றது. பெசிலுக்கு அதனை செய்வதற்கு முடியாது. எனினும் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் மஹிந்த தன்னுடைய அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தோல்வியடைய செய்துள்ளார்.விமல் அதற்கு அதிகம் உதவி செய்திருக்க கூடும். இன்றும் மஹிந்தவுக்கு அந்த தைரியம் காணப்படுகின்றது. உடலியல் ரீதியாக அவர் பலவீனமானராக இல்லையாயின் மஹிந்த தற்போதும் நல்ல ஒரு தைரியம் உடையவர் தான். எவ்வாறு இருப்பினும் பெசில் குடும்பத்தினரிடையே அதிகாரம் ஏலம்கோரப்பட்டுள்ளது என்பது வெளிப்படையானது. இருப்பினும் தற்போதைய பிரச்சினை ஏன் மஹிந்த பெசிலிற்கு இடம் வழங்காமை எப்பதாகும்.கோட்டாபயவிற்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பதில் நபராக வர பெசில் பொருத்தமானவரா,

ரட்டே ராலவிற்கு என்றால் எந்த ராஜபக்சக்கள் என்றாலும் ஒன்றுதான். பெசிலுக்கு மஹிந்த வழங்கவில்லை என்றால் மஹிந்தவிடம் option ஒன்று இருக்கிறது. அதாவது அது தினேஷ் குணவர்தன இருக்க முடியாது தானே.டலஸ்ஸோ விமலோ இருக்க முடியாது. அவசியம் எனின் எந்தவொரு சிறுபிள்ளைக்கும் மஹிந்தவின் option என்னவென்று தெரியக் கூடியதாக இருக்கும். அவ்வாறாயின் மஹிந்த பெசிலுக்கு வழங்காமல் கோட்டாபயவுக்கு வழங்கியிருப்பது ஏன். அவசியம் எனின் இன்னும் ஒரு தடவை வழங்கி 2030ஆம் ஆண்டு நாமலுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று. மஹிந்தவுக்கு தெரியும் கோட்டாபயவிற்கு வழங்கினால் மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்று.பெசிலுக்கு வழங்கினால் அதனை நினைத்துப் பார்க்கவும் முடியாது என்று. அதிகாரம் தொடர்பான விடயத்தில் பெசிலைப்போன்றே மஹிந்தவும். இருவரும் செத்த பிணங்கள். இருப்பினும் தற்போது கோட்டாபயவுக்கு பலவீனம் என்பதனால் 2024 ஆம் ஆண்டு வெற்றிடம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. இந்த நாட்டினுடைய மக்கள் மீண்டும் அதிகாரத்தை கனவில்கூட கோட்டாபயவிற்கு வழங்குவார்கள் என்று நினைக்க முடியாது. அதனால் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பெசில் முயற்சி செய்கின்றார். அதை நிரப்புவதற்கு முடியுமா என்பது இந்த இடத்தில் இருக்கக்கூடிய வேறு பிரச்சினையாகும்.

ஒரு மனிதருக்கு அவ்வாறான கனவு ஒன்று இருக்க முடியும். மஹிந்த வழங்கவில்லை என்றால் இதனை எவ்வாறாவது சரி செய்ய வேண்டுமல்லவா. பெசிலும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அவர் ஒரு மூத்த மனிதர் அல்லவா. பெசில் ப்ளேன் ஒன்றை செய்திருக்கின்றார். அது நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் 2030 இல் நாமலுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். மஹிந்தவுக்கு அது தெரியும். அதனால் தற்போது மஹிந்தவிடம் இருக்கக்கூடிய பதில்தான் 2030 க்கு நாமலை அனுப்புவதை விட 2024 இல் நாமலை அனுப்புவதே ஆகும். அதாவது பெசில் மஹிந்தவிடம் 2015 இல் இருந்து ஒரு சந்தர்ப்பத்தை கேட்டுவரும்போதும் மஹிந்த அதற்குரிய வழியை வழங்கவில்லை. தற்போது பெசிலுக்கு கோபம் வந்துள்ளது. தற்போது அவர் உருவாக்கிய அந்த திட்டத்தோடு நோக்கி செல்கின்றார். இந்த இடத்தில் விமல் குறிப்பிட்ட விடயம் சரியானதே. அந்த எண்ணத்திலேயே பெசில் மொட்டுவை உருவாக்கிறார். இன்று விமலுக்கு அது தெரிந்த போதும் அன்று விமலுக்கு அது தெரியவில்லை. தெரியவில்லை அல்ல தெரியாதது போன்று இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் விமல் 2017 குழந்தையானார்.

இல்லையெனின் பெசிலின் இந்த தேவையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்து பெசிலுக்கு உதவுமா?பெசிலுடன் இணைந்து விமல் அதனை செய்தார். இருப்பினும் பெசில் அதற்கு ஒத்துக்கொண்ட கணக்கை விமலிற்கு வழங்கவில்லை. விமல் கேட்டது பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை தமக்கு வழங்குமாறு. வழங்காமல் இருந்ததனால்தான் விமல் பெசில் முரண்பாடு ஏற்பட்டது. அந்த முரண்பாட்டின் உள்ளே உள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த அதனை நாமலுக்காக பயன்படுத்தினார். விமல் தெரிந்தோ தெரியாமலோ சுய விருப்பில் அவற்றை மேற்கொண்டார். அந்த நிலையில்தான் மொட்டுவின் ஒரு அதிகாரம் மிக்கவராக பெசில் வந்தார்.மொட்டுவின் முக்கிய நபர்களை தம்வசப்படுத்தினார். முக்கிய நபர்கள் மாத்திரமல்ல சிறிய கட்சியினர்களையும் தன்வசப்படுத்தினார். விமலின் கட்சியினுடைய நபர்களையும் அவர் தன் வசப்படுத்தினார். இன்று அந்த இடத்தில் விமலுடன் உள்ளவர்களையும் பிடித்து இருக்கின்றார். தேவையான சந்தர்ப்பத்தில் பெசில் அவர்களை வெளியே எடுப்பார். அவ்வாறான ஒரு நிலையில் தான் விமலை பற்றி நாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அடுத்ததாக இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தை கவனத்திற் கொள்ளல் வேண்டும். அதுதான் மொட்டுவின் உரிமையாளர் யார் என்பது? மஹிந்தவின் உடையதா அல்லது பெஸிலின் உடையதா? இந்த கேள்விகளுக்கு பதிலை தேடும்போது விமல், கம்மன்பில இன்னும் மொட்டுவில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதனை தீர்க்க முடியும். உண்மையில் மஹிந்தவின் Angele லில் நாங்கள் பார்த்தால் விமல் கம்மன்பில இன்னமும் மொட்டுவில் இருத்தல் வேண்டும்.மஹிந்தவின் இலக்கை நோக்கி செல்வதாக இருந்தால் விமல், கம்மன்பில உள்ளிட்ட சிறிய கட்சிகள் அவசியம். அந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எடுக்க முடியாமல் போகும். இருப்பினும் அடுத்தவர்களை எடுக்கக் கூடியதாக இருக்கும். அதாவது நாமலுக்கு கிரீடத்தை அறிவிப்பதற்கான அந்த project ற்கு விமல் போன்றவர்கள் அத்தியாவசியமாகும். இருப்பினும் பெசிலின் Angele லில் பார்த்தால் அவருடைய பயணத்திற்கு இருக்கக்கூடிய இரண்டு ஆணிகளாக காணப்படுபவர்கள் விமலும் கம்மன்பிலவும். ஏனென்றால் குறித்த இரண்டு பேரும் மஹிந்தவின் உடைய வழியிலே இருக்கின்றார்கள். அதனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெசில் முயற்சிப்பது அந்த இரண்டு ஆணிகளையும் பிடுங்குவதற்கு தான்:

விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் பெசில் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் அந்த விடயத்தை செய்து இருந்தார். பாராளுமன்றம் வருகை தந்ததன் பின்னரே கூடுதலாகக் காணப்பட்டது. அதாவது கடந்த காலத்தில் மொட்டுவின் அமைச்சர்கள் விமல் போன்றவர்களுக்கு நன்மைகளை தெரிவிக்காது நன்மைகளை பகிர்ந்தது பெசிலின் தேவைகளுக்கே. ரோஹித,ஜோனி,எஸ்எம்,குட்டி போன்றவர்களின் குரல்களுக்கு பின்னால் இருந்தது பெசிலே.இருப்பினும் இவையாவற்றின் இறுதி கொத்தணியாக மாறியது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே. தாம் அதிகாரத்துக்கு வருவதற்கு அதிகபட்சமாக உதவி செய்த இருவரதும் கழுத்தை வெட்டும் அளவுக்கு ஜனாதிபதி ராசியற்றவராக மாறியுள்ளார். உண்மையில் விமல் குறிப்பிடும் வகையில் கோட்டாபயவுக்கு கத்தியை கொடுத்தவர் பெசிலே. அதிலிருந்து எங்களுக்கு இவ்வாறு நினைக்க முடியும். கோட்டாபயவுக்கு இந்த அனைத்து விதமான வேலைகளுக்கும் கயிற்றை வழங்குவது பெசில் என்று.அதேபோன்று ரட்டே ரால இன்னமும் விசுவாசம் கொள்வது விமல் போன்றவர்கள் கடந்த 2ஆம் திகதி மேற்கொண்ட அந்த நாடகத்திற்கு பின்னால் இருப்பது மஹிந்த என்று.அதன் பிரதி மஹிந்தவின் உடையது.

வேலை பிழைத்ததற்கு காரணம் நடிகர் எழுதிக்கொடுத்த இருவகையான உரையாடல்களுக்கு மேலதிகமாக அந்த விடயத்தை சொல்ல முற்பட்டபோது தான். அதாவது அந்த மாத்திரையை கூடுதலாக எடுத்தது. ஓவர் ஓவர்டோஸ் ஆகியமை. ரட்டே ரால குறிப்பிடுவது மஹிந்த இந்த நிலையை நன்றாக நினைத்து மீண்டும் ஒரு திரைக்கதையை எழுதுவார். தற்போது நீங்கள் இருக்கக்கூடிய அந்த சூழ்நிலையை பாருங்கள் அவ்வாறு நடைபெறுகிறதா இல்லையா என்று. இருப்பினும் இந்த நடிகர் இருவரும் போராடுகின்ற நடிகர்களாக வர முடியாமல் உள்ளனர். ஏனென்றால் அது அந்த பரம்பரையின் 5 வது சபையாக இருப்பதாகும். உண்மையில் ரட்டே ரால குறிப்பிடுவது அந்தத் திரைப்படம் அண்மித்து அண்மித்து வரும்.coming துண்டுகள் தற்போது வருகின்றது.அதனை சரியாக செய்தால் அந்த இருவருக்கும் மீண்டும
ஒரு சான்சை ஒன்றை பெறமுடியாமல் இல்லை. இருப்பினும் தற்போது இருக்கக்கூடிய போராட்டத்தில் பெசில் வெற்றிபெற்றுள்ளார். பெசிலின் நிலைக்கேற்ப விமலையும் கம்மன்பிலவையும் துரத்துவது அவருக்கு நல்லது.பார்ப்போம் மஹிந்த வேறு ஏதாவது ஒரு புதிய போராட்ட அறிமுகத்தை கொண்டு வருகின்றாரா என்று. ஏனென்றால் விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு பெசில் குறிப்பிட்டிருப்பது விமலும் கம்மன்பிலவும் அமைச்சரவைக்கு வருவதாக இருந்தால் தான் வரமாட்டேன் என்று.

அதற்கிணங்க தான் கோட்டாபய அந்த வேலையை செய்துள்ளார். அவசியம் என்றால் மஹிந்தவுக்கும் சொல்ல முடியும் விமலும் கம்மன்பிலவும் இல்லாத அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன் என்று. ஏனென்றால் பெசிலைவிட மஹிந்தவுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்க முடியும்.ரட்டே ரால குறிப்பிடப்படுகின்ற இந்த எந்த ஒன்றும் செய்ய முடியாமல் இல்லை. நாமலுக்காக மஹிந்தவிற்கு அவ்வாறு செய்ய முடியாமலும் இல்லை. இதிலிருந்து இந்த நாட்டுக்கு கற்றுக் கொள்ளக் கூடிய பெரிய அரசியல் பாடம் ஒன்று இருக்கின்றது. முழு நாடும் சரியான பாதைக்கு என்று சொல்லி அவ்வாறு இல்லை என்றால் பெசிலை வர்ணித்து வருகின்ற எந்த ஒன்றும் அதிகாரப் போட்டிக்கே. அதன் உள்ளே இருப்பது மஹிந்த அல்லது பெசில். அடுத்ததாக மொட்டுவில் இருக்கக்கூடிய ராஜபக்சவாதிகளுக்கு இதன் மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் இதனுள்ளே காணப்படுகின்றது. வரலாற்றில் ஒருநாள் ரட்டே ரால விமலுக்கும் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். யாராவது ஒருவர் ராஜபக்ஷக்களுக்கு தலையை பணித்தால் அவர்களது தலையை கீழ்படும் அளவுக்கு பணியச்செய்வார்கள். இறுதியில் நிலத்தில் வைத்து காலால் உதைத்து சும்மா விடுவார்கள்.

இதனை மஹிந்த செய்வது வேறு அடிப்படையில். அதாவது நோகாதவாறு.பெசில் நேரடியாக கால் பூட்டு போடவதுபோல் செய்துவிடுவார். இருவரும் செய்வது ஒரே வேலையைத்தான். இருப்பினும் அவை இரண்டு வகையான முறை அதுதான் வேறுபாடு. அதற்குத்தான் சிறந்த உதாரணம்தான் விமல் மற்றும் கம்மன்பில. இந்த இடத்தில் ஒரு விடயம் உறுதிபடுகின்றது. ராஜபக்சக்களை உயர்த்துவதற்கு கைகொடுத்தவர்கள் எழும்போது ராஜபக்சக்கள் அடிப்பார்கள். உதவி செய்தவர்களுக்கு வரும்போதே தாக்கும் அளவு தன்மை கொண்ட ராஜபக்சக்களைப்போன்ற நல்ல மனிதர்களை ரட்டே ரால இந்த நாட்டில் இன்னும் காணவில்லை. அதே போன்ற தன்மை விமலிடமும் காணப்படுகின்றது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மையாகும்.

அப்படியாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

Posted in Uncategorized

சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் – சந்திமா விஜேகுணவர்த்தன

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் நாட்டுக்குள் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என சிறிலங்கா மனிதநேய கட்சியின் தலைவி கலாநிதி சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு கலந்துரையாடி வருகின்றது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுவருவால் ஐராேப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்திவருவதன் மூலம் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பைவிட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தால் பலமடங்கு பாதிப்பு ஏற்படும்.

அதனால் அரசாங்கம் நாட்டுக்குள் சிறியளவிலான தவறும் ஏற்படாமல் செயற்படவேண்டும். குறிப்பாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணி வரவேண்டும்.

மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்படுதல், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்படல் மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை முறையாக செயற்படுத்திவருவது இந்த காலத்தில் மிகவும் முக்கியமாகும்.

ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 196 அங்கத்துவ நாடுகள் இருக்கும் நிலையில் பேரவையின் இரண்டாவது தினத்திலேயே, மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதான் மூலம் வெளிப்படுத்தப்படுவது, இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய பலம் தங்களிடம் இருப்பதையே காட்டுகின்றது.

அந்த பலத்தை இல்லாமலாக்குவதற்கு இலங்கையில் வாழும் மக்கள் ஜனநாயக உரிமைகளுடன் செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் தங்கள் மத, கலாசார உரிமைகளுடன் வாழ்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும். குறிப்பாக நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

அத்துடன் நாடுபொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி பொருட்கள் இல்லாமையால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்திவரும் மின் துண்டிப்பு பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதேபோன்று மின் துண்டிப்பு காரணமாக அதி குளிரூட்களில் உணவுப்பொருட்களை பாதுகாத்துவைக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 7,8 மணி நேரம் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவது சாத்தியமில்லை.

அதனால் செலவு அதிகரிக்கும். இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதற்கு யாராவது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அது இலங்கையை வீழ்ச்சியடையச்செய்ய செய்யும் சதித்திட்டமாகும் என்றார்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – ஜனா எம்.பி.

ஐந்து தமிழ்க் கட்சிகளினால் அனுப்பப்பட்ட கடிதத்திலுள்ள பெரும்பாலான விடயங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. அதுதான் தற்கால பேசுபொருளாகவும் இருக்கின்றது. இலங்கையில் பொறுப்புக்கூறலானது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

ஓவ்வொரு முறையும் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத்தொடர்களிலும் பாதிக்கப்பட்ட எமது தமிழர் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்பர். கடந்த சில தவைகளில் நேரடியாகப் பங்குபற்றாமல் இங்கிருந்து மெய்நிகர் வழியாக இங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை கடிதம் மூலமாக அனுப்பி வைக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் கூட தற்போதைய கூட்டத் தொடருக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதேபோன்று விபரமாக இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்புகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக நடைபெறும் கைதுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து விபரமான அறிக்கையை அனுப்பியிருந்தார்கள்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மெய்நிகர் மூலமாக இந்த ஐந்து கட்சித் தலைவர்களுடன் உரையாடியிருந்தார்கள். இந்த ஐந்து கட்சிகள் அனுப்பிய விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான அறிக்கையில் உள்ளடங்கியிருக்கிறது. ஆணையாளரினால் அங்கத்துவ நாடுகளுக்கு 13 பக்க அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையில் ஐந்து கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தருகின்றது.

மனித உரிமை ஆணையாளரின் குறுகிய அறிக்கை நிமித்தம் மெய்நிகர் மூலமாக உரையாடிய அதிகாரிகள், இலங்கையில் பொறுப்புக்கூறல் முறையாக நடைபெறவில்லை. இலங்கையில் சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியிருக்கின்றார். அத்தோடு இந்திய அரசாங்கத்தின் சார்பில் பங்குபற்றிய அதிகாரி, 13வது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் சமத்துவமாக, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு கொண்டு வரப்பட்டு மிக விரைவாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எமக்கான தீர்வு மிக விரைவில் வரும் என்பதில் ஓரளவுக்கு நிம்மதியடையக்கூடியதாக இருக்கின்றது.

இந்த அளவில் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஒருகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, அரசியல் ரீதியாக போராடிய கட்சிகள் 2009களுக்குப் பிற்பாடு இக் கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பிளவுபடுவதற்கான காரணங்கள் ஓரளவுக்கு தெரியாமலில்லை. இந்த விடயத்தில் நாங்கள் நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாகத்திற்கு கடிதம் எழுதியது போன்று ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோhக இருந்தால் இன்னமும் விரைவாக, கூடுதலான பெறுபேறுகளைப் பொற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை அனைத்துக் கட்சிகளிடமும் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

அசிங்கமான அமெரிக்கர் சிறிய கட்சி கூட்டணியை விழுங்குவாரா?

சிறிய கட்சி கூட்டணி தங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வேலை தொடர்பில் நேற்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்கள். வேலை ஆரம்பிக்கப்பட்ட இடமே லொக் போல. 2ஆம் திகதி முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்று குறிப்பிட்டு அந்த மேடையில் இருந்த அனைத்து கட்சிகளது தலைவர்களும் நேற்று காணப்படவில்லை. சிறு கட்சி கூட்டணியின் முக்கியமான பங்குதாரராக இருக்கக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கத்திலிருந்து அனுப்பியிருந்தது ஒரு முன்னாள் மாகாண சபை உறுப்பினரே. அவர்கள் அந்த வேலை தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.

எவ்வாறு இருந்த போதிலும் இந்த போராட்டத்தின் இறுதி பிரதிபலனாக நடைபெற்றது முழு முழு நாடும் சரியான பாதை என்பது, இருப்பினும் சிறிய கட்சிகளின் கூட்டணி இடையே இது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அவ்வாறு ஏற்பட்டது ஏன்? அதனை மேற்கொண்டவர்களுக்கு அடுத்த செயற்பாடொன்றை எடுக்க முடியாத தற்கான காரணம் என்ன? அதற்கு பிரதான காரணமாக அமைவது சிறிய கட்சி கூட்டணிக்கு எவ்விதமான ஒரு நோக்கமுமல இல்லாமல் இருப்பதாகும். உண்மையில் சிறிய கட்சி கூட்டணியின் நோக்கம் முழு நாடும் சரியான பாதைக்கு கொண்டு செல்வது அல்ல. அது அவ்வாறு இல்லையெனின் இந்த கட்சிகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் நடந்து கொண்ட விதம் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. அதனை சரியாக சொல்லவதாக இருந்தால் இவர்கள் ராஜபக்ஷக்களுக்கு பின்னால் சென்றது எவ்வித ஆடையும் இல்லாமலே. இருப்பினும் இவர்கள் கொக்கரிக்க ஆரம்பித்தது தாங்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற காரணமாய் அமைந்த 20ஆவது திருத்தத்துக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பின்னர் ஆகும். சுருக்கமாக சொன்னால் பெசில் பாராளுமன்றம் வருகை தந்ததன் பின்னரே.

இது நடைபெறுவது பெசில் மற்றும் இவர்களுடைய நோக்கங்களிடையே ஒருமித்த தன்னை இன்மையே. பெசிலிற்கு 2024 ஆம் ஆண்டு நாட்டினுடைய ஜனாதிபதிக்கான பயணம் இருக்கின்றது. இவர்களிடம் இருந்தது மஹிந்த பெயர் குறிப்பிடுகின்ற அல்லது நாமலோடு உரிய பயணம். அந்த இரண்டுக்குமிடையிலான முரண்பாடே தற்போது வெளியிலே வந்துள்ளது. இருப்பினும் மஹிந்தவோ, பெசிலோ வேறு ராஜபக்ஷக்களோ அதுகுறித்து வெளியில் கதைக்கவில்லை. அந்த முரண்பாட்டுக்கு இரண்டு பக்கமும் அரசியல் வேட்டை நாய்கள் இருந்தது. அந்த இரு அணிகளிலும் பெசில் அணி முக்கியமானது. அதன் முன்னே விமல், கம்மன்பில,வாசு போன்றோர் மிகவும் கஷ்டப்பட்டதுடன் அதிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்படுத்திய ஒரு பபர்தான் சிறிய கட்சி கூட்டணி. உண்மையில் அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய உடலில் ஏற்படுகின்ற அழுத்தத்திற்காக வேண்டியே ஒழிய நாடு எதிர்நோக்குகின்ற அழுத்தத்திற்கான ஒன்றல்ல. உண்மையில் இது ஒரு தனிப்பட்ட நோக்கமே ஒழிய பொது நோக்கம் ஒன்று இதில் காணப்படவில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளது.

அரசாங்கம் விமலையும் கம்மன்பிலவையும் நீக்க எடுத்த செயற்பாடு அவர்கள் இருவருக்கும் மாத்திரமானது அல்ல. கருத்துப்போனது அவர்கள் இருவருக்கும் ஆக இருந்தாலும் அந்த செயற்பாடு பொறிமுறை எடுத்திருப்பது சிறிய கட்சி கூட்டணியின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் எதிராகவே. அதனால் அவர்கள் பொது நோக்கத்தில் இருந்தால் தற்போது அடுத்த செயற்பாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சரியாக அந்த இடத்தில் தன்னுடைய அமைச்சுப்பொறுப்பிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். தற்போது புதுமையான ஒரு பைலா அடிக்கின்றார். அதுவும் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து சுகாதார சேவைப்பிரிவின் வேலைநிறுத்தத்தைப்போன்று.வாசு அமைச்சின் வரப்பிரசாதங்களுக்கு முன்னால் உள்ளவைகளை அரிவாளாலும் சுத்தியலாலும் அவற்றை மறைக்க முடியாது. உண்மையில் வாசு எனபவர் கருத்தியல் ரீதியாக உறுதியானவரன்று. அதாவது பச்சை திரவம் போன்ற ஒரு நபராவார். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றது வாசு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒரு நாள் அவர் கூறிய விடயம் கோட்டாபய என்பவர் மிலிட்டரி மனதுடையவர் என்று .அந்த இரும்பு செருப்புக்கு நாட்டை கீழ்நிலைப்படுத்த முடியாது என்று.

அவ்வாறு குறிப்பிட்ட வாசுக்கு ஒரு கிழமைகழிந்த பின்னர் கோட்டாபய சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். அதனால் ரட்டே ரால நினைப்பது அடுத்த பக்கத்தில் தற்போது வாசுக்கு சொட் வைத்துள்ளார்கள் என்று . வாசு பெசில் தான் அடுத்த ஜனாதிபதி அபேட்சகருக்கு பொருத்தமானவர் என்று சொன்னால் அது தொடர்பில் ரட்டே ரால புதுமை அடைவதில்லை .

அடுத்ததாக தேசிய சுதந்திர முன்னணியில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இதுவரைக்கும் அவருடைய பதவி விலகல் கடிதத்தை வழங்கி இருத்தல் வேண்டும் .ஆனால் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி அவர் சுகயீனமாக இருக்கின்றாராம். சிறிய கட்சி கூட்டணி அல்ல குறைந்தபட்சம் தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பாடுகள் கூட ஒரு பக்கத்தில் செல்ல முடியாது உள்ளது. ஜயந்த பதவி விலகாமல் இருப்பது உண்மையில் அரசியல் கோழைத்தனமாகும். ரட்டே ரால நினைப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விமலுக்காக கழுத்தை கொடுத்துள்ளது என்று . உண்மையில் அவர்களுக்கு ஒரு தர்க்கம் இருக்கலாம். நாங்கள் வந்தது முன்மொழிவுக்காக முன்னிற்க. இருப்பினும் குறித்த எல்லையை மீறி விமலும் கம்மன்பிலவும் பெசிலுக்கு செய்தது தவறு என்று . அவ்விருவரும் அரசாங்கத்தினுடைய கெபினட் அமைச்சர்கள் என்பதால் அவ்வாறு சொல்லலாம்.

விமல் மற்றும் கம்மன்பில எப்போதும் அவ்வாறான வேலைகளை செய்கின்ற இருவராவர். தாங்களால் ஏற்க முடியாதவைகளுக்கு எல்லை மீறி தம் கருத்துக்களை சொல்வார்கள். அதிலிருந்து அவர்கள் தங்களது எதிரிக்கு சொல்வது இந்த கூட்டம் அனைவரும் எங்களுடன் தான் இருக்கின்றார்கள் என்று. அதனால் மேடையில் இருக்கக்கூடிய அந்த நபர்கள் தர்மசங்கடத்திற்கு உட்படுவர். அன்று இரண்டாம் திகதியும் விமல் அதனை செய்தார். நேற்றைய கலந்துரையாடலின்போது அதனை செய்தார். தற்போது அவருக்கு ஒரு வினாடியேனும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது. ஜனாதிபதி தனது சகோதரரரை வைத்துக்கொள்ள அவர்களை நீக்கிவிட்டார். உண்மையில் விமல் குறிப்பிட்டது இந்த ஜனாதிபதி பெசில் நடிக்கவைக்கும் பொம்மை என்று. அந்த கதை உண்மை ரட்டே ரால அதனை விமல் குறிப்பிடுவதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் தற்போது விமலிற்கு அரசாங்கத்தில் இருக்க முடியாது. குறைந்தபட்சம் தேசிய சுதந்திர முன்னணி, கம்மன்பில சுயாதீனமாக இருத்தல் வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது குறித்த போராட்டத்தில் விலகியது போன்று தோன்றுகின்றது உண்மையில் இந்தப் பிரச்சனையினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளே உள்ளக முரண்பாடு விரிசல் அடைவது திண்ணமானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டே மேற்கொண்ட போராட்டமே இது.இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என்ற நிலையில் நிலையில் இருந்து கொண்டு வந்த போராட்டமாக இதனை நினைக்க முடியாது.சில சந்தர்ப்பத்தில் விமலும் கம்மன்பிலவும் அவ்வாறு நெளியமாட்டார்கள் என்று நினைத்திருக்கக் கூடும். இருப்பினும் அவர்களோடு ஒன்றாக போராட்டத்தில் இருந்த இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றாக நின்று தம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கும் பொறுப்பை செய்தல் வேண்டும்.

இருப்பினும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சுப் பொறுப்பை விடுவாரா? மஹிந்த அமரவீர அமைச்சுப் பொறுப்பை கைவிடுவாரா? துமிந்த திசாநாயக்க இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை கைவிடுவாரா? அதேபோன்று ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பொறுப்பை கைவிடுவாரா? பைத்தியம் தான்.இவ்வளவு காலமும் தயாசிரி ஜயசேகர கூறியது மத்திய குழு கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கேற்ப அரசாங்கத்திலிருந்து விலக முடியும் என்று. அப்படியாயின் தற்போது ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சி கூட்டணி கூட்டத்திற்கு சென்றது. மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலா? இல்லை என்றால் ஒரு ஜொலிக்காக சென்றார்களா?

ரட்டே ராலவிற்கு தெரிந்த அரசியல் அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஒரு பிளவு இருக்க வேண்டும். அது அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்கின்ற ஒரு குழுவும் வெளியேற முடியாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு குழுவும். தற்போது இந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு அணியும் வலுவானதாக இருந்தபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான தீர்மானத்துக்கு சென்றால் அக்கட்சியின் ஒரு குழு அரசாங்கத்தில் கட்டாயமாக இருக்கும். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி மீண்டும் இரண்டாக உடையக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

அதே போன்று ஏனையகட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலரையும் அரசாங்கம் கழற்றி எடுக்கும். அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சினை இந்த பிரச்சினையில் ஒழிந்திருப்பதே. அடுத்ததாக ஒழியும்போது கட்சியினுடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வு ஏற்படும்.ரட்டே ரால இறுதியாக குறிப்பிட்ட ஆக்கத்தில் இவர்களிடம் இருக்கின்ற அரசியல் நோக்கங்களில் இறுதியானதாக குறிப்பிட்டதனை நேற்று வாசு நிரூபித்திருக்கிறார்.வாசு குறிப்பிட்டது அவர்கள் முயற்சி செய்வது அரசாங்கத்தில் வெளியேறுகின்றவர்களுக்கு தங்குவதற்கு வேறான தங்குமிடமொன்றை ஏற்படுத்துவதற்கு என்று.இதனால் இவர்களது அரசியல் நோக்கம் தொடர்பில் ரட்டே ரால குறிப்பிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

தற்போது ரட்டே ரால குறிப்பிடுவது வேறு நோக்கங்களை தலையில் வைத்துக் கொண்டு வந்த சிறிய கட்சி கூட்டணிக்கு ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு அவர்கள் அழுதுகொண்டு இருக்கவேண்டுமா? இந்த அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 30 பேர் அதில் இருந்து கழன்று வந்தால் அந்தப் பயணம் 115- 120க்கு கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்படும். உண்மையில் அரசாங்கத்தின் உள்ளே வெறுப்படைந்து இருக்கக்கூடிய மொட்டு கட்சிக்காரர்கள் பலர் இருக்கின்றார்கள். தேவையாக இருந்தால் அரசாங்கத்தோடு அவர்கள் பேரம் பேசவும் முடியும்.

இருப்பினும் சிறிய கட்சி கூட்டணி யாருக்கும் அவ்வாறான விடயங்கள் தலைக்கு வராது. அவர்கள் இந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளே செய்தது, தங்களை தாக்க வேண்டிய அவசியமான ஆயுதத்தை ராஜபக்சக்கள் உடைய கைகளுக்கு வழங்கியதுதான். சும்மா அல்ல மூன்றில் 2 அதிகாரத்துடன் வழங்கப்பட்டது. அதனால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் உள்ள அரசியல் கோமாளிகளாக அந்த சிறிய கட்சி கூட்டணிகள் இருக்கின்றது. அந்த உறுப்பினர்கள் 30 பேருக்கும் இருப்பது 30 நோக்கு. அவை அனைத்தும் தனிப்பட்ட நோக்கங்கள் ஆகும். அவையாவும் தனிப்பட்ட நோக்கங்களாகும். அதனால் அதனை முகாமை செய்வது ராஜபக்சக்களுக்கு பெரிய விடயமன்று. எங்களுக்கு முன்னர் சிறிய கட்சி கூட்டணியின் பேரவலத்தை பார்க்ககூடியதாக அமையும்.

அப்படியாயின் போய் வருகின்றேன்.
கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்பு

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவையாகும்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதானது, அரச அதிகாரத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பைப் பயன்படுத்தி எதிர்வருங்காலங்களில் உயரதிகாரத்தில் இருப்பவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முக்கிய முன்நகர்வாகும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னனும் அதற்கான நம்பத்தகுந்த செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் வருமாறு:

உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வரவேற்கின்றோம். அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 61 ஆவது விடயத்தில் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகத் தடைகளை விதிப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது அரச அதிகாரத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பைப் பயன்படுத்தி உயரதிகாரத்தில் இருப்பவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முக்கிய முன்நகர்வாகும்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின்போது பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறு நாம் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

இருப்பினும் அவ்வாறான தடைகளை விதிப்பது அப்பாவி பொதுமக்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், இலங்கையின்மீது பொருளாதாரத்தடைகளை விதிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காண்பித்துவருகின்றன.

எனினும் தற்போது உக்ரேன் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் மற்றும் மீறல்களுக்காக ரஷ்யாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் ரஷ்யாவிற்குச் சொந்தமான முயற்சியாண்மைகளுக்கு எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஒட்டுமொத்த உலகமும் உதவமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், தற்போது ரஷ்யப்படையெடுப்பின் விளைவாக உக்ரேனியர்கள் முகங்கொடுத்திருக்கும் துன்பத்தை நாம் உணர்கின்றோம்.

சர்வதேச நாடுகள் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கின்ற தடைகளில் குறைந்தபட்சம் பொருளாதாரத்தடையையேனும் சரியான தருணத்தில் இலங்கைக்கு எதிராக விதித்து முன்னுதாரணத்தை வழங்கியிருந்தால், தற்போது உலகளாவிய ரீதியில் நடைபெறும் போக்குற்றங்களையும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்களையும் ஓரளவிற்கேனும் குறைத்திருக்கமுடியும். எனவே தற்போதேனும் அனைத்துவழிகளிலும் இலங்கைக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை தொடர்பான விவாதத்தில் ஐ.நாவிற்கான இந்திய நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா பாண்டேவினால் வெளியிடப்பட்ட கருத்து குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கெனன், இலங்கை தொடர்பில் இந்தியா இத்தகைய அப்பட்டமான விமர்சன அறிக்கையை முன்வைப்பது மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கூறியதாவது:

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அவ்வறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற நிலையில், வெறுமனே எழுத்துமூலமாக மாத்திரமன்றி, கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்கக்கூடியவாறான செயல்வடிவிலான நடவடிக்கைகள் அவசியமாகும்.

அதேவேளை சாதாரண மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உள்நாட்டில் நியாயத்தைப் பெற்றுக்கொள்ளமுடியாத பட்சத்திலேயே சர்வதேசத்தை நாடுவர். எனவே எமது நாட்டு மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேசத்தை நாடியிருப்பதென்பது அரசாங்கத்திற்கு அவமானகரமான விடயமாகும். அவ்வாறிருந்தும்கூட, உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரிப்பதென்பது நீதியை வலியுறுத்துகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் குரலை அடக்குவதற்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்தார்

Posted in Uncategorized

இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கை பாரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளது – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.

மூன்று தேர்தல்களின் மக்களின் ஆணையைப்பெற்று தேர்வான அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் அதன் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறான ஊடுருவல் போக்கிலான தன்மையே அதன் பிரதான குறைபாடு என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் மிகத்தெளிவானதொரு பாரபட்சமான தன்மையை வெளிக்காட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு ரீதியான அடிப்படையை சவாலுக்குட்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (4) ஜெனிவா நேரப்படி மாலை 5.30 மணிக்கு இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்றது.

இதன் ஆரம்பத்தில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வெளியிட்டு உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து அவரது அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தொடர்பான 46/1 தீர்மானம் பேரவையில் குறித்தளவிலான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ‘ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறை’ தொடர்பில் அத்தீர்மானத்தின் 6 ஆவது பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் குறைபாடானதும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான தன்மையினைக் கருத்திற்கொண்டு இலங்கையும் ஏனைய சில உறுப்புநாடுகளும் அத்தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இத்தீரமானமானது பக்கசார்பற்றதன்மை, தேர்வுசெய்து இயங்காததன்மை ஆகிய பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி அத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட 60/251 தீர்மானத்தின்படி உறுப்புநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அப்பாற்சென்றதாகவும் காணப்படுகின்றது.

இதுகுறித்து இலங்கையின் நிலைப்பாடு என்னவென்பதை கடந்த முதலாம் திகதி பேரவைக்கு அறிவித்திருந்தேன்.

இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்க்கின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறப்பட்டதன்படி, நாம் சர்வதேச சட்டங்களுக்கும் பிரகடனங்களுக்கும் மதிப்பளிக்கின்ற நாடாவோம்.

இதுவிடயத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் குறித்த விடயங்களை பேரவையுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய தொடர்புடைய கட்டமைப்புக்களுடனும் நாம் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்திருக்கின்றோம்.

உயர்ஸ்தானிகரால் இந்தப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன என்று நாம் கருதுகின்றோம்.

அதன் முக்கிய குறைபாடு எதுவெனில், இலங்கையில் நடத்தப்பட்ட மூன்று தேர்தல்களில் மக்களின் ஆணையின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஊடுரும் போக்கிலான அதன் தன்மையேயாகும்.

அதுமாத்திரமன்றி இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், மிகத்தெளிவானதொரு பாரபட்மான தன்மை தென்படுகின்றது. ஏனெனில் மனித உரிமைகள் பேரவையானது அதன் ஏனைய உறுப்புநாடுகள் தொடர்பில் இவ்வாறானதொரு விசாரணைப்பொறிமுறையை முன்னெடுக்காது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கட்டமைப்பின் அடிப்படையை சவாலுக்குட்படுத்துகின்றது.

எவ்வித அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேலெழுந்தவாரிய ஏராளமான விடயங்கள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து நாம் கவலையடைகின்றோம் என்று குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழ்சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாடுகள், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் வெள்ளிக்கிழமை (4) இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றின.

அதன்பிரகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 46/1 என்ற புதிய தீர்மானத்தை முன்மொழிந்த பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் சார்பில் மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் சர்வதேச தூதுவர் ரீட்டா ஃபிரென்ச் உரையாற்றினார்.

இணையனுசரணை நாடுகளின் சார்பில் இலங்கை குறித்து அவர் பேரவையில் முன்வைத்த விடயங்கள் வருமாறு:

முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

இருப்பினும் மனித உரிமைகள் பேரவையில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்டளவிலான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முதற்கட்டமாக காணாமல்போனோரின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டதன் பின்னர், அவை தொடர்பிலான விசாரணைகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமை விசனத்திற்குரிய விடயமாகும்.

சிவில் சமூக அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், தடுத்துவைப்புக்கள் குறித்த எமது கரிசனைகள் இப்போதும் தொடர்கின்றன. சிவில் சமூக இடைவெளி பரந்த அடிப்படையில் பேணப்படுவது இன்றியமையாததாகும்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதன் முதற்கட்ட நடவடிக்கையாக, அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

எனினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டளவிலானதாகக் காணப்படுவதுடன் அச்சட்டம் குறித்த எமது கரிசனை தொடர்கின்றது.

அதேபோன்று ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி, து இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே அந்தச் செயலணியின் செயற்பாடுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பாரபட்சமற்ற முறையில் அமைவதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்துகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் அதேவேளை, 46ஃ1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையின் உரையாற்றிய ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திரா மணி பாண்டே கூறியதாவது,

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை குறித்த வாய்மூல மற்றும் எழுத்துமூல அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் அயல் மற்றும் நட்புறவு நாடு என்ற அடிப்படையில், இலங்கைவாழ் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான தமிழர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்வதென்பது இலங்கையின் சொந்த நலனுக்குரியது என்றே நாங்கள் நம்புகின்றோம். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடும் இதிலடங்கும்.

மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலாக பல்வேறு கோணங்களில் சர்வதேச சமூகப்பிரநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் தொடர்புகளைப்பேணிவருவது குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட தரப்பினரும் அவ்வாறான தொடர்புகள் பேணப்படுவதையும் அர்த்தமுள்ளதும் செயற்திறன்வாய்ந்ததுமான இருதரப்புக் கலந்துரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையும் நாம் விரும்புகின்றோம்.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவது குறித்த முக்கிய கரிசனைகளை உயர்ஸ்தானிகரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நல்லிணக்கப்பொறிமுறையை முன்னெடுத்துச்செல்வதுடன் பொதுமக்களின் அடிப்படைச்சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழ்சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை அதிகாரப்பகிர்வு விடயம் குறித்து தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மனதிலிருத்தி, மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம்-ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

“சிவில் சமூக அமைப்புகளை தொடர்ந்து கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் கண்டிக்கின்றோம்” என மனித உரிமை பேரவையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சமீபத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கின்றோம் என்றும் விடுதலைகளை ஊக்குவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தனது கருத்தை முன்வைத்த நெதர்லாந்து பிரதிநிதி, முன்னைய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறல் இன்மை ஜனநாயக ஸ்தாபனங்கள் நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் போதல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மக்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை ஐநாவிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பிரான்ஸ் தூதுவர் மனித உரிமை பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை : ‘பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் போதியவு முன்னேற்றமில்லை’ – நோர்வே

இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் போதியவு முன்னேற்றமில்லாதது குறித்து கவலையடைந்துள்ளோம் என ஐ.நா மனித உரிமை பேரவையில் உரையாற்றுகையில் நோர்வே தெரிவித்துள்ளது.

சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை இலங்கை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதே நேரம் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் காணாமல் போனவர்கள் குறித்து மிகவும் மந்த கதியில் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து பிரிட்டன் கவலை வெளியிடடுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டவை நீண்டகால கரிசனைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரிய மிச்சல் பச்லட்

மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இனங்கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கூடுதலாக ஈடுபடுவதை அண்மைக்காலத்தில் காணமுடிந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலமை தொடர்பில் விரைவில் தீர்மானிக்குமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தேவையான இழப்பீடுகளை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில ஏற்பாடுகளைத் திருத்தியமைப்பதற்கும் அந்தச் சட்டத்தின் கீழ் பல கைதிகளை விடுதலை செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்டாமல் தவிர்ப்பதற்குத் தேவையான ஆழமான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும். எனினும், கடந்த வருடம் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் தொடர்ந்தும் பின்னடைவைக் காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அனைவரினதும் மனித உரிமைகளுக்காக அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்பத் தகுந்த வழிவகைகளை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு அதேபோல் தாக்குதல்களின் தன்மை, பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு என்பனபற்றிய விரிவான அறிக்கையொன்றை அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.