சர்ச்சைக்குரிய சேதன உரத் தொகை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு அதன் உள்நாட்டு முகவர் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் வங்கியிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடை உத்தரவு இம்மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குங்கள் – பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன்

அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். விவசாயிகளுக்கு நிவாரணத்தை அல்லது நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளது ளிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரவந அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவர்களுக்கு நிவாரணத்தை அல்லது நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் முதலே நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மிகவும் சீரற்ற காலநிலையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.

இவ்வாறான ஒரு நிலைமையில் அரசாங்கத்தின் சேதன பசளை அறிவிப்பு அவர்களை இன்னும் படு குழியில் தள்ளிவிட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய விவசாயத்திற்கு தேவையான பசளைகள் கிருமிநாசினிகள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியதுடன். அவற்றுக்கான பெரும் தட்டுப்பாடும் நிலவியது.

தட்டுப்பாடு காரணமாக பசளைகளின் விலைகளும் கிருமிநாசினிகளின் விலைகளும் என்றுமே இல்லாதவாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டது. ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள். இதன் காரணமாக விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடக்க முடியாமல் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

ஒரு சில விவசாயிகள் கொரேனாவில் பெரும் பாதிப்பை சந்தித்ததுடன். விவசாயத்தை முன்னெடுக்க போதிய அளவு பணம் இல்லாததன் காரணமாக தங்களுடைய தங்க நகைகள் வாகனங்கள் வீடுகள் போன்றவற்றை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் கடந்த சில வாரங்களாக சீரற்ற மிகவும் மோசமான காலநிலை நிலவுவதன் காரணமாக விவசாயிகளின் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து 75 வீதத்திற்கும் அதிகமான பயிர்களை அழித்துவிட்டது.

இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் அது கட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

எனவே இவர்களின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தின் மூலமாக சரியான தகவல்களை பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை அல்லது நட்ட ஈட்டை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து நிறுத்த வேண்டும்- Manfred Nowak

இலங்கை அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படுவதாக கூறப்படும் சித்திரவதைகள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்து காவல்துறை, இலங்கையின் காவல்துறையினருக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என ஐ. நாவின் முன்னாள் மனித உாிமை சிறப்பு அறிக்கையாளா் பேராசிாியா் Manfred Nowak தெரிவித்துள்ளதாக ‘The Sunday Post’ தொிவித்துள்ளது.

மேலும் குறித்த செய்தியில்,இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்த அகதிகள் இலங்கை காவல்துறையினரின் ஈவிரக்கமற்ற தன்மை குறித்து தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அகதிகள் தெரிவித்தது உண்மை என்பது உறுதியானால் இலங்கை காவல்துறையினருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கும் பயிற்சியை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை நீக்கி வர்த்தமானியை வெளியிட்டமை மக்களின் இயல்பு வாழ்வில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தவுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுப்பாட்டு விலை நீக்கம் போன்ற விடயங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்கனவே வருமானங்களை இழந்து அரசாங்க நிவாரணங்கள் எதுவும் இன்றி மிகவும் வறுமையில் அன்றாட வாழ்வை போராட்டத்தின் மத்தியில் கொண்டு செல்லும் போது அடிப்படை உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது.

தொடர்ந்தும் அன்றாடம் காச்சிகள் தொழில்களை இழந்து வருமானம் இன்றி குடும்பங்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் பொருட்கள் விலை உயர்ந்து செல்லுமாயின் நாட்டில் கொடிய வறுமை மாத்திரமல்ல பஞ்சம் பசி பட்டினி கொள்ளை களவு தற்கொலை வன் செயல் என்பன அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன அத்துடன் நாட்டின் இயல்பு நிலையும் கேள்விக்குள்ளாகி அவசர நிலை உருவாகும்.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுவதால் மொத்த வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் பகல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனால் குறிக்கப்பட்ட தரப்புக்கள் பணம் சம்பாதிக்கவும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் மக்களின் இயல்பு வாழ்வு அவல நிலைக்கு தள்ளப்படவும் வழி வகுக்கும் . ஆகவே அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மனோ கணேசன்

விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பொகவந்தலாவையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யபோவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசு தோல்வி கண்டுள்ளது.

விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடும்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர். இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்துகொள்வார்களாயின் விரும்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனத் தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம், பல விழாக்கள், விருந்துபசாரகள் மற்றும் திருமண வைபவங்களிலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் இவ்வாறு நாளுக்கு நாள் பொறுப்பற்ற முறையின் கீழ், செயற்படுவார்களாயின் பொது வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்றுமுன்தினம் 617ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம் (06) அதிகரித்துள்ளது. அன்றையதினம் 20 பேர் மரணித்துள்ளனர். அதில், 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 பட்ஜெட் வெள்ளி சமர்ப்பிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) சமர்பிக்கப்படவுள்ளது.

பெசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத்திட்டம் இதுவாகும்.

இயன்றவரை வினைத்திறனுடன் காணி வளங்களை பயன்படுத்துதல், இயன்றவர்களையும் விரும்பாதவர்களையும் வெல்வது, உற்பத்திப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் இந்த வரவு -செலவுத் திட்டம் கவனம் செலுத்துமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு- செலவுத்திட்டம் இதுவென்பதுடன், நாட்டின் 76 ஆவது வரவு- செலவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தை வீடு நெருங்கி வருகிறது – ரவூப் ஹக்கீம்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருங்கி வருகின்றது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் என்ன பொருளாதார கொள்கையினை அரசாங்கம் கடைபிடித்தாலும் அவர்களின் அண்மைக்கால நகர்வுகள் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கைமீறிவிட்டது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(07) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பின் தலைவர் ஹாதீக் இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வை, சம்மாந்துறை  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் இன்று விவசாயிகள், ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கள்  என தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பொருட்களின் விலைகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் கிடையாது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானியும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தினால் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

எனவே, அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்து, பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருக்கி வருகின்றது. என்றார்.

’இராணுவ ஆட்சி செய்ய என்னால் முடியும்’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி இல்லை என்றார்.

அப்படி நாட்டை ஆள விரும்பவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​தனது மனைவியுடன் சாதாரண ஹோட்டலில் தங்கியதாகவும் மனைவியின் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்குவதற்கு தான் பணம் செலுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தன்னுடன் 7 பேர் மட்டுமே பயணம் செய்தாகவும் முந்தைய ஜனாதிபதிகள் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்ததாக சிலர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த அவர், தான் அப்படிச் செய்யவில்லை என்றும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கட்டாய தடுப்பூசி – நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டு அரசின் உத்தரவை முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளில், வரும் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்கள் வாராந்திர கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆவது வட்ட மேல்முறையிட்டு நிதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.