சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆழலாம் என்ற நிலைப்பாட்டில் அரசு செயற்படுகின்றது ரெலோ வினோ எம்.பி

இன்று தமிழ்மக்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் தங்களிடம் கெஞ்சவேண்டும் தங்கள் காலடிக்குள் வந்து விளவேண்டும் என்ற நிலையில் அரசு இருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் தனியார் கல்வி நிலையம் 06.04.21 அன்று திறந்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில். இன்று புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது நாங்கள் ஆசிரியர்களை யாழ் மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றோம் அரச உத்தியோகத்தர்களை அதிகாரிகளை இன்று யாழ்மாவட்டத்தில் இருந்து எதிர்பாக்கின்ற நிலை இருக்கின்றது இதில் மாற்றம் வேண்டும். கல்வி செயற்பாடுகள் இங்கு வளர்த்துகொள்ளவேண்டும் நல்ல கல்வி சமூகம் இந்த கிராமங்களில் இருந்து உருவாக வேண்டும்.

அரசாங்கம் எங்களை போரின் போது இறுதிக்காலத்தில் இடம்பெயரவைத்து மக்கள் அனைவரும் சோற்றுப்பாசலுக்காக தங்களிடம் கையேந்த வேண்டும் என்று நினைத்திருந்தது அதனை செய்து முடித்தது.தமிழர்கள் அனைவரும் தங்களிடம் கையேந்த வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்தும் இப்பொழுதும் கூட அவர்கள் இனரீதியான செயற்பாடுகளுடன் இந்த நாட்டினை ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்.

இன்றும் தமிழ்மக்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் தங்களிடம் கெஞ்சவேண்டும் தங்கள் காலடிக்குள் வந்து விளவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றார்கள்.

எங்கள் கிராமங்கள் அரசால் புறக்கணிக்கப்படுகின்றது, நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது, தொல்பொருள்திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம் வன இலாகா திணைக்களம் என ஒவ்வொரு அமைப்பும் அரசாங்கத்தின் முகவர்களாக செய்பட்டு வடகிழக்கு மண்ணை அபகரிக்க திட்டமிட்டு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் வடக்கிற்கான மக்கள் சந்திப்புக்கான முதலாவது விஜயம் என்று வருகை தந்தார் அவர் வவுனியா வடக்கில் சிங்கள பிரதேசத்திற்குத்தான் பயணம் செய்தார் பெயரவில் வடக்கிற்கு என்று சொல்லிக்கொண்டு அவர் சந்தித்த மக்கள் சிங்கள மக்கள் சிங்கள பிரசேத்ததிற்கே வருகை தந்தார்

இன்றும் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கான எந்த செயற்பாட்டினையும் செய்ததை காணக்கூடியதாக இல்லை. சிங்கள மக்களுக்குத்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு இந்த நாட்டினை தொடர்ந்தும் சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆழலாம் என்ற நிலைப்பாட்டில்தான் இந்த அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 203.5 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 199.21 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

“பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார் அமைச்சர் சமல் ராஜபக்சா

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற

“2010 மற்றும் 2015 க்கு இடையில் நான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன்” எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து தன்னை பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன் என்றார்.

இதன்போது கடுமையாக கோபமடைந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, பதாதைகளை எதிரணியினர் ஏந்தியிருந்தனர். அத்துடன்,​ கைகளிலும் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு

வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது உறவுகளை தேடி அவர்களை கண்டுப்பிடிக்காமலேயே உயிரிழந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் இருக்கின்றார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? என கோரி மிகவும் நீண்ட காலமாக அவர்களது உறவுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி, நோயினால் பீடிக்கப்பட்டு, வைத்தியசாலையில் ஏனைய உறவுகளின் பாதுகாப்பில் உள்ளனர்.

இவ்வாறு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த 87 பேர், சிகிச்சைப் பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் மாத்திரம் 17பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடபட்ட உறவுகள் பலர் உயிரிழந்தப்போதும் இதுவரை அவர்களுக்கான நீதியை எவரும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழில் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறக்க அனுமதி

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று(08) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத் திறப்பதற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர மத்தியில் இருந்த வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே சுமார் 70 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(08) முதல் பேருந்து சேவைகளை நடத்த வட.பிராந்திய போக்குவரத்து சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து சேவைகளின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனிமேல் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் புதிய தமிழ் காவல்படை! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

இதனால் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை இறுதித் தீர்மானமின்றி நிறைவு – ஜி.எல் பீரிஸ்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். மாகாண சபை தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி தீர்மானமின்றி நிறைவுப் பெற்றுள்ளது.

கூட்டணியியுடன் ஒன்றிணைந்து போட்டியிட முயற்சிக்கிறோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்க நடவடிக்கை – ஜீ.எல். பீரிஸ் | Virakesari.lk

மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் நிகழ்வில் கலந்துக் கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினருக்கு ஏற்றாட்போல் செயற்படுகிறார்கள். ஒரு தரப்பினரது நோக்கம் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு மக்களாணைக்கு முரணானது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் குறித்து கட்சி தலைவர்கள் உறுதியான தீர்மானத்தை விரைவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை.ஆனால் தனித்து செல்லும் நிலைப்பாட்டில் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் குறித்து கடந்த வாரம் சுதந்திர கட்சியினருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம் பெற்றது. எவ்வித தீர்மானமும் இல்லாத வகையில் பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி ஊடாக அனைத்து தரப்பினiரையும் ஒன்றினைத்து மாகாண சபை தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை நபாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்தவறுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என்றார்

11 அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் அனுமதி

அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த விடயத்தை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தினார்.

1. UTJ எனப்படும் ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்
2. CTJ எனப்படும் சிலோன் தௌஹீத் ஜமா -அத்
3. SLTJ எனப்படும் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்
4. ACTJ எனப்படும் அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்
5. JSM எனப்படும் ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா
6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)
7. SLISM எனப்படும் இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்,
8.ISIS அமைப்பு,
9. அல்கைதா (Al-Qaeda),
10. Save the Pearls அமைப்பு,
11. Super Muslim அமைப்பு

ஆகியவற்றுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.