சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆழலாம் என்ற நிலைப்பாட்டில் அரசு செயற்படுகின்றது ரெலோ வினோ எம்.பி

இன்று தமிழ்மக்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் தங்களிடம் கெஞ்சவேண்டும் தங்கள் காலடிக்குள் வந்து விளவேண்டும் என்ற நிலையில் அரசு இருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் தனியார் கல்வி நிலையம் 06.04.21 அன்று திறந்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில். இன்று புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது நாங்கள் ஆசிரியர்களை யாழ் மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றோம் அரச உத்தியோகத்தர்களை அதிகாரிகளை இன்று யாழ்மாவட்டத்தில் இருந்து எதிர்பாக்கின்ற நிலை இருக்கின்றது இதில் மாற்றம் வேண்டும். கல்வி செயற்பாடுகள் இங்கு வளர்த்துகொள்ளவேண்டும் நல்ல கல்வி சமூகம் இந்த கிராமங்களில் இருந்து உருவாக வேண்டும்.

அரசாங்கம் எங்களை போரின் போது இறுதிக்காலத்தில் இடம்பெயரவைத்து மக்கள் அனைவரும் சோற்றுப்பாசலுக்காக தங்களிடம் கையேந்த வேண்டும் என்று நினைத்திருந்தது அதனை செய்து முடித்தது.தமிழர்கள் அனைவரும் தங்களிடம் கையேந்த வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்தும் இப்பொழுதும் கூட அவர்கள் இனரீதியான செயற்பாடுகளுடன் இந்த நாட்டினை ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்.

இன்றும் தமிழ்மக்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் தங்களிடம் கெஞ்சவேண்டும் தங்கள் காலடிக்குள் வந்து விளவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றார்கள்.

எங்கள் கிராமங்கள் அரசால் புறக்கணிக்கப்படுகின்றது, நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது, தொல்பொருள்திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம் வன இலாகா திணைக்களம் என ஒவ்வொரு அமைப்பும் அரசாங்கத்தின் முகவர்களாக செய்பட்டு வடகிழக்கு மண்ணை அபகரிக்க திட்டமிட்டு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் வடக்கிற்கான மக்கள் சந்திப்புக்கான முதலாவது விஜயம் என்று வருகை தந்தார் அவர் வவுனியா வடக்கில் சிங்கள பிரதேசத்திற்குத்தான் பயணம் செய்தார் பெயரவில் வடக்கிற்கு என்று சொல்லிக்கொண்டு அவர் சந்தித்த மக்கள் சிங்கள மக்கள் சிங்கள பிரசேத்ததிற்கே வருகை தந்தார்

இன்றும் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கான எந்த செயற்பாட்டினையும் செய்ததை காணக்கூடியதாக இல்லை. சிங்கள மக்களுக்குத்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு இந்த நாட்டினை தொடர்ந்தும் சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆழலாம் என்ற நிலைப்பாட்டில்தான் இந்த அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.