ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் கிளி நகரில் திறந்து வைக்கப் பட்டது

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வெற்றி வேட்பாளர் சுரேந்திரனால் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் கிளி நகரில் திறந்து வைக்கப் பட்டது.

மக்களோடு சுரேந்திரன்
சுரேந்திரனோடு மக்கள்

Posted in Uncategorized

சுமந்திரன் உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு; சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று மன்னார் தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.

இந்த கருத்தை அவர் கூறியபோது நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரியபோது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதனால்தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும். அது முற்றிலும் பொய் என்றும் 2020ஆம் ஆண்டில் இருந்தே கட்சியின் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா, இல்லையா? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதேவேளை எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சுமந்திரன், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்கக்கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன்.

அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் போது வன்னியில் சுமந்திரன் ஏறும் எந்த அரசியல் மேடையிலும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் நான் ஏறவில்லை. அதன் காரணம் என்னவென்றால், சுமந்திரன் பிரசாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே.

அவ்வாறான நிலையில், அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும், வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்.

அதேவேளை அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்.

இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலைமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன்.

சுமந்திரனுடன் 2020ஆம் ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறிருக்க, இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக வாக்கு கேட்க முடியாது.

என்னை பொறுத்தவரையில், வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இந்த பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், சுமந்திரனின் இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.

அதேவேளை சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை. யாருக்கும் சிபாரிசு செய்யவுமில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதமும் கொடுக்கவில்லை.

சுமந்திரனின் கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

தேர்தல் நியமனத்துக்காக நான் வாக்கு கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதேநேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாகத்தான் விலகினேன்.

சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன்… நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டுவந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு தள்ளுபடி!

நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று உயர்நீதிமன்றில் இன்று கொள்ளப்பட்டிருந்தது

சிவில் அமைப்பு ஒன்றினால் இந்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

அத்துடன் பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து

இந்நிலையில் இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கருத்தை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ரவிராஜ்சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது..சுரேன் தெரிவிப்பு

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை ஆனைக்கோட்டை பகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவி ராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயல்படுவதில் முன் நின்று உழைத்தவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பங்காளி கட்சிகளாக ரெலோ பயணித்த போது எங்கள் கட்சியின் தலைவர் உடன் நெருங்கிய உறவை பேணியதுடன் தமிழ் மக்கள் சார்ந்து தீர்வு விடயங்களில் நெருக்கமாக செயல்பட்டவர்.

அவ்வாறான ஒருவரின் மனைவியான சசிகலா ரவி ராஜ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்து வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நிலையில் அவரின் வெற்றி உறுதியாக இருந்த நிலையில் சதி நடவடிக்கை மூலம் அவரது ஆசனம் பறிக்கப்பட்டது.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் சசிகலா ரவிராஜ்க்கு தமிழரசு கட்சி ஆசன ஒதுக்கீட்டை வழங்காமல் புறம் தள்ளிய நிலையில் மாமனிதர் ரவிராஜ்சுக்காகவும் அவர் நம்பிக்கை வைத்த தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவரை எம்மோடு இணைத்தோம்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ யாழ் தேர்தல் தொகுதியில் ஆசன ஒதுக்கீட்டினை பகிரும் போது போட்டி நிலை உருவாகிய போதும் சசிகலாவுக்கு கட்டாயம் ஆசனத்தை வழங்க வேண்டும் என கட்சி முடிவு செய்து என்னோடு சக வேட்பாளராக களம் இறக்கினோம்.

தமிழ் தேசியத்திற்காக மாமனிதர் ரவிராஜ் செய்த தியாகங்கள் அளப்பரியது அதனை தமிழ் மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

எமது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கூட்டணி கட்சிகளில் முதன்மையான கட்சியாக பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தமிழ் மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்

ஆகவே மறைந்த மாமனிதரின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி சங்கு சின்னத்தில் போட்டியிடும் எனது இலக்கமான 3 க்கும் பெண் வேட்பாளரான சசிகலாவின் இலக்கம் 7 க்கும் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Posted in Uncategorized

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

ஜனநாயக தமிழ் தேசியகூட்டணி (DTNA)
நாடாளுமன்றத் தேர்தல் – 2024
தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனநாயக தமிழ் தேசியகூட்டணி என்பது தமிழ்ஈழவிடுதலைஇயக்கம் (TELO), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழத் தேசியக்கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய போராட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பயணிக்கும் ஓர் அரசியல் கூட்டமைப்பாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் பல தமிழ் அமைப்பினரும் ஒன்றிணைந்து பலமான
அரசியல் கட்டமைப்பாக கடந்த 2001ஆம் ஆண் டிலிருந்து பயணித்துவந்தோம்.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான ஜனநாயக கட்டமைப்புகளுடனான அரசியல் கடசியாக உருவாக்குவதில் ஏறபட்ட திட்டமிட்ட தடைகள் காரணமாகவும் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட எதேச்சதிகாரப் போக்குகள் காரணமாகவும் தமிழரசுக் கட்சியின் தவறான கொள்கை காரணமாகவும்
வௌவேறு காலகட்டங்களில் சில கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தன.

இறுதியாக 2023 இல் அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி தனது வீட்டு
சின்னததில் தனித்து போட்டியிடுவதாக த Pர்மானித்து, அறிவித்ததோடு தமிழ்த தேசியக்
கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

பல்லாயிரக்கணக்கான தியாகஙகளின் ஊடாக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் மக்களின் அரசியல்
இயக்கமும முக்காலததிறகுமான தமிழ் மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பாகவுள்ள ஒறறுமையும்
ஒன்றுசேர சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனும உறுதியான த Pர்மானததின்
அடிப்படையில் தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் மேற்கண்ட கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக பயணிப்பது எனவும தீர்மானித்தோம். அக்கூட்டணிக்கு ஜனநாயக தமிழ தேசிய கூட்டணி என்று பெயரிடப்பட்டது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட
தமிழ்த் தேசியக் கட்சிகளும தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிவில்
அமைப்புகளின் கூட்டும தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக செயற்பட்டது.

அந்த பொதுக்கட்டமைப்பானது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுததி
ஜனாதிபதித தேர்தலில் போட்டியிட்டோம்.
மிகக் குறுகிய கால அவகாசத்தில் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்குகளைப பதிவு செய்து
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளையும் அதற்கு அவசியமான ஒறறுமையையும் சங்கு
சின்னததின் ஊடாக உலகறியச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள
நாடாளுமன்றத தேர்தலிலும் சங்கு சின்னததில் தொடர்ந்து பயணிப்பதாக முடிவு செய்தோம
இன்று தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தரப்பில் உள்ள ஒரே ஒரு
கூட்டணியான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னததில் யாழ்ப்பாணம வன்னி,
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுததியுள்ளது.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ மக்களின் ஒறறைப் பிரதிநிதித்துவததையாவது
பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன்
தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடாததினோம். திருகோணமலையில் வீட்டுச் சின்னததிலும
அமபாறையில் சங்குச் சின்னததிலும ஒற்றுமையாக வேட்பாளர்களை நிறுததுவதறகு தமிழரசுக்
கட்சியின் தலைமை உறுப்பினர்கள் தமது இணக்கத்தை வெளிப்படுததியிருந்தனர்.

அதறகிணங்க திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து வேட்புமனுவை தாக்கல்
செய்ய முடிந்தது. ஆனால் தமிழரசுக் கட்சியானது தனது சுயநலமான போக்கின் காரணமாக
அமபாறை மாவட்டததில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது இதன் காரணமாக ஜனநாயக
தமிழ் தேசிய கூட்டணியும தனித்துப் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டது.

தென்னிலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும கொழும்பு மாவட்டததில் எமது கூட்டணியில்
இணைந்து போட்டியிட பலர் விருப்பம தெரிவிததிருந்த போதிலும் அங்கு போட்டியிடுவதை நாம்
தவிர்த்திருந்தோம். யுதத காலங்களில் மட்டுமல்லாது அதற்குப் பின்னரும எமது மக்களின் அரசியல்
மறறும் அன்றாடப் பிரச்சினைகளில் நாடாளுமன்றிலும் அதறகு வெளியேயும் எம்மோடு தோளோடு
தோள் நினறு குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை பலவீனப்படுத்துகின்ற எததகைய
செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடலாகாது எனும் தெளிவான, உறுதியான சிந்தனையின் அடிப்படையில்
செயற்பட்டிருந்தோம்.

தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு வழிமுறைகளில் தனது
விடுதலைக்காகப் போராடி வருகிறது. தமிழர்களாகிய நாம இலங்கைத்தீவில் தனித்துவம மிக்க
ஒரு தேசிய இனமாக வாழந்து வருகிறோம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பல
ஆயிரக்கணக்கான ஆணடுகால வரலாற்றைக் கொண்ட மரபுவழியான வாழ விடததை தாயகமாகக்
கொண்ட தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசமாக வாழுகின்றோம்.

ஆனாலும இலங்கைத் தவானது பல இன, பல மத, பல மொழி, கலாசாரங்களைக் கொண்ட ஒரு
தவு என்பதை உணர்ந்து இலங்கைத தீவின் பல்லினத தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன்
விளைவே தேசிய இனப் பிரச்சினை தோற்றம்பெறுவதற கும அது கூர்மை அடைவதறகும ; இறுதியில்
விஸ்வரூபம எடுப்பதறகுமான மூல காரணமாகும
தமிழ் மக்களுடைய இருப்பை அழிக்கும தொடர்ச்சியான செயற்பாடுகளே இன அழிப்பு நடவடிக்கையாகும. தமிழர் தேசத்தின் இருப்பையும தனித்துவததையும அழித்து பெருமபான்மை இனததுடன் அதனைக் கரைக்கும உள்நோக்கததோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுதத இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில்
அகிம்சை வழியிலும பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள்.

அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவிவிடப்பட்ட அரச பயஙகரவாதததின் மிகக்கொடிய விளைவே இறுதிப்போரில் நிகழந்த உச்சமான இனஅழிப்பாகும இதன் அடிப்படையிலேயே, உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம
இலங்கைத் தவில் தமிழர்களுக்கெதிராக இடமபெறறது இனஅழிப்பு என்ற ஏகமனதான தர்மானததை
நிறைவேற்றியது.

எமது வடக்கு மாகாணசபையும் நடைபெற்றது இனஅழிப்பு என்று ஏகமனதான ஒரு
தர்மானததை நிறைவேற்றியது.
கனடா மறறும் ஐரோப்பிய நாடுகளின் உள்ளுராட்சி அமைப்புகளாலும இத்தகைய தீர்மானம நிறைவேற்றப பட்டது.

திருகோணமலை மாவட்டததில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல்
திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏககர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26 க்கும அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பாரம்பரிய தமிழக் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைப்பதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் துண்டாடும திட்டங்கள் நடைமுறைப படுத்தபபட்டு வருகின்றன. இவறறில் பல நீதிமன்றத தீர்ப்புகளை மறியே நடைமுறைப் படுத்தபபடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டததின் மேற்கு எல்லையில் ஒருபுறத்தில் சிங்கள பௌத்த மயமாக்கல்
வேகமாக நடந்து வருகிறது. இன்னொரு புறத்தில் நிலப்பறிப்பு தொடர்கிறது. 3000ற்கும ; அதிகமான
குடுமபங்களின் வாழவாதாரததுக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும நோக்கததோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் உள்ள மேய்ச்சல்தரைகளை அரசஅனுசரணையோடும், பாதுகாப்போடும வெளிமாவட்ட சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தர்ப்புகள் மறப்படுகின்றன.

வாகரை மற்று கதிரவெளிப் பிரதேசங்களில் பிரதேசமக்களின் வாழவாதாரத்தையும சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும பாதிக்கும
கனிமவள அகழவுகளும் சட்ட விரோத இறால் பண்ணைகளும் மக்களின் எதிர்ப்பை மீறியே
முன்னெடுக்கப்படுகின்றன.

அமபாறை மாவட்டததில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான
ஒருபிரதேச செயலர் பிரிவாகத தரம் உயர்த்துமாறு அங்குள்ள தமிழ் மக்கள் நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள் இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும அந்தப பிரச்சினையைத தீர்க்க விருமபவில்லை. மாறாக அங்குள்ள சிறுபான்மையின மக்களை மாறிமாறி ஏமாற றி இனப்பகைமையினை மேலும்மேலும் வளர்க்கும் கைங்கரியததையே செய்துவருகின்றன.

வடக்கு மாகாணததின் வன்னி மாவட்டங்களில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, நீராவியடி
ஆகிய இடங்களில் தமிழ மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும சிறுமலைகளில் அரச
திணைக்களங்களும பிக்குகளும அரசபடையினரும இணைந்து பௌதத கட்டுமானங்களை
உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத தீர்ப்புகளை உதாசீனம செய்தே அனைத்து
செயற்பாடுகளும் முன்னெடுக்கப் படுகின்றன.

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ப்பு
வழஙகிய நீதிபதி நாட்டைவிட்டுத தப்பியோடும் நிலைக்குத தள்ளப்பட்டார். அவ்வாறான நிலைக்கு
வெட்கப் படவேண்டிய, வருததப் படவேண்டிய அரசாங்கம அவரைத தனிப்பட்ட முறையில்
சிறுமைப்படுத்தியது.

முலலைத்தீவு மாவட்டததில் மட்டும 67 பௌத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு பொதுமக்கள் மறறும் இராணுவம இடையிலான விகிதம 2:1 ஆக இன்னமும இருக்கின்றது.
சுமார் 100க்கும் மேற்பட்ட படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டததில் கொக்கச்சான குளம என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் கிராமம்
இராணுவததின் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோகஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப பட்டு, மிகக் குறுகிய காலததுக்குள் 5000ற்கும் அதிகமான தென்னிலங்கை மக்கள் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டதுடன் வவுனியா
மாவட்டததின் இனப்பரமபல் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றக் கிராமத துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் அரச தரப்பினரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் கனிமவளஙகள் பறிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு
விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பேசாலை, விடத்தல்தவு, தள்ளாடி, பூநகரி
பிரதேசங்களில், பொருளாதார அபிவிருததியின் பேரால் மக்களின் எதிர்ப்பைமறி அனைத்தும்
முன்னெடுக்கப்படுகின்றன.

முள்ளிக்குளம கிராமததை ஆக்கிரமித்து வைத்திருக்கும ஸ்ரீலஙகா கடற்படையானது அக்கிராமததின் பூர்வகுடிகளான தமிழ மக்களை அங்கு முழுமையாக
மளக் குடியமரவிடாமல் தடுத்துவருகின்றது.

யாழப்பாண மாவட்டததின் விளைநிலங்களிலும், கரையோரத்திலும் படைத்தரப்பு தனது முகாமகளை
அமைத்திருக்கும் பெருமபாலான காணிகள் தனியாருக்குரியவை. இவறறுள் மிகச்சிறிய
நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழமாவட்டத்திலும தமிழர் மரபுரிமைச்
சொததுக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌதத மயமாக்கப்பட்டுள்ளன. நாவறகுழியில்
அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம உருவாக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌததர்கள் எவரும் இல்லாத தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய
விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது.

தமிழர் தாயகப் பிரதேசத்தின், குறிப்பாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்குரிய கடல்வளம
அழிக்கப் படுகின்றது. அவர்களது வாழவாதாரம சிதைக்கப் படுகிறது. இந்திய இழுவைப்
படகுகளாலும உள்ளுர் இழுவை மடித தொழிலாலும், தென்பகுதி மீனவர்களின ஆக்கிரமிப்புகளாலும சட்ட விரோதமான மன்பிடிமுறைகளாலும், மனவக் கிராமங்களில படைத்தரப்புகள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும கடல் மதான உரிமையை இழந்தும், கடல் வளங்களை இழந்தும், தமது வாழ ;வாதாரங்களை இழந்தும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் 46,000 குடுமபங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திகும அதிகமான மக்கள் மிகமோசமாகபாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் தாயகமெங்கும தமிழர்களையும அவர்களது மண்ணையும் வளங்களையும் கூறுபோடும
வகையில், வனவளத திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் கனிமவளத் திணைக்களம்,
தொல்லியல் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களும அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள அடங்காத மகாவலி அபிவிருததி அதிகாரசபையும் இணைந்து, காடுகளின் பாதுகாப்பு, வன உயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச் செய்கை நிலங்கள்,
வணக்கத் தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக் கணக்கான ஏககர்கள் அளவு நிலங்களை
அபகரித்து வைத்துள்ளன.

யுததம முடிவடைந்த நிலையிலும்கூட சிறைகளில் மிக நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக பயஙகரவாதத தடைச்சட்டததின் கீழ தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதைக் காணமுடிகிறது.
\
தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச்சிததிரிக்கக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயஙகரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கு மத்தியிலும் உச்ச அளவில் பயன்படுததப் பட்டுவருகின்றது.

யுததம முடிந்ததும பு னர்வாழ வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15
ஆணடுகளின் பின்னரும அச்சுறுததலகளின் மத தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். மனித உரிமைச்
செயற்பாட்டாளர்கள், அரசியற செயற்பாட்டாளர்கள் மதான அடக்குமுறைகளும அச்சுறுததல்களும்
தொடர்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முபபதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட உறவினர்கள் மறறும் அரசியற செயற்பாட்டாளார்கள் மது அரச பயஙகரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்றவடிவத்தில ஏவிவிடப்பட்டது.

நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம்அப்பேரணி குலைக்கப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் யாவும ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக்
கொண்டவை. ஸ்ரீலஙகா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கததுடன் திட்டமிடப்படுகின்றவை.
தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத திணைக்களம் போன்ற அரச
திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச்செய்கினறன. பிக்குகள் ஆக்கிரமிப்பு
நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றததையோ
காவல்துறையையோ மதிப்பதில்லை.

படையினர் இரவுகளில் பௌதத கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள்.நிலப்பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேறற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத்தரப்பு முழுமையாக பயன்படுததப படுகின்றது.

வடக்கு கிழக்கில் மட்டும ; 65,000 ஏக்கர்களுக்கு மேற ;பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்
பட்டுள்ளது. இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத்தொடர்ச்சியைத துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்பது, அங்கே சிங்கள பௌத்த மரபுச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைததுச் செயற்பாடுகளும
கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் வௌவேறு வடிவங்களாகவே அமைகின்றன.

சுருக்கமாக சொல்வதெனில், யுத்தம முடிவடைந்த பின்னரான கடந்த 15 வருட காலத்தை இன
நல்லிணக்கததுக்கு பயன்படுத்துவதறகுப் பதிலாக, தமிழர் சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும
நிலப்பறிப்புக்கும் சிங்கள பௌத்தமயமாக்கலுக்குமே அரசு பயன்படுத்தி வந்துள்ளதோடு, அதனை
ஒவ்வொரு அரசாங்கஙகளும தமது கொள்கையாக முன்னெடுதது வந்துள்ளன.

இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும அதேவேளை, நாட்டில்
பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் இருக்கிறது என்ற பொய்யான தோற்றததைக் கட்டியெழுப்பி
பன்னாட்டு சமூகத்தை நமபவைக்க சிங்கள பௌதத அரசாங்கஙகள் தொடர்ந்து முயறசிதது
வருகின்றன.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தர்வுகாண மறுத்து இனஅழிப்பு யுததததைத தொடர்ந்து
முன்னெடுதத காரணத்தாலேயே நாடு வங்குரோத தாகியது. இப்பொழுது நாட்டை பிடிததுலுப்பும்
பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம யுத்தத திற்காக வாங்கிய கடன்சுமைதான் என்பதை
தென்னிலங்கையும் அதனைத் தாங்கிப் பிடிக்கின்ற சர்வதேச சக்திகளும் விளஙகிக்கொள்ளவேண்டும்.

தென்னிலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும பொருளாதார நெருக்கடி எனப்படுவது
இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மூடிமறைக்க முயலகின்றனர். இனப்பிரச்சினைக்குத்
தர்வுகாணாமல் பொருளாதார நெருக்கடியைத் தர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை
எந்தவொரு அரசாங்கமும அதன் உறுப்பினர்களும வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத தயாராக
இருப்பதில்லை.

யுதத தளபாடங்களுக்காக, முன்பிருந்த அரசாங்கஙகள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச்
செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புததுறை சார்ந்த ஒரு நிபுணரின்அ றிக்கையில்
கூறபபட்டுள்ளது. இந்தப பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுததததின் விளைவாக
ஏறபட்ட உயிரழிவு, பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும
இலங்கை அரசாங்கதால் மேற்கொள்ளப்படவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ மக்களை
மட்டெடுப்பதற்கான எந்தவொரு செயல்திட்டமும இன்றுவரையிலும உருவாக்கப்படவுமில்லை.

யுததததுக்காகப் படையினரின் எணணிக்கை பலஇலட்சங்களாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின்
மொத்தத் தேசிய உற்பததியில் நாற்பது வீதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்
தவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளததில் ஏறக்குறையச்
சரிபாதியளவு படையினருக்கான சம்பளமாக வழங கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்ப்பிடததக்களவு குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகததை சிங்கள பௌததமயப்படுத்தும் நிகழச்சிநிரலை நிறைவேற்றுவதறகாக படைததரப்பு பெருஞ்செலவில்
பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான இராணுவப் பொருளாதாரச் சூழலுக்குள் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத்
தலைப்படமாட்டார்கள். தறபோதைய காலங்களிலும அதிகரித்த அளவில் தமிழ் மக்கள்
புலமபெயர்ந்து வருகிறார்கள். தபோது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள், சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களாவர். இவ்வாறாக தலைமை தாங்கும தகைமையுள்ள படித்தவர்கள்
சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாழவியலில் பாதகமான
விளைவுகளையே ஏற்படுததும்.

இப்பொழுது புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களும் தேசிய
மக்கள் சக்தி என்ற அவரது கட்சியும இலங்கையில் ஊழலும் பொருளாதாரப் பிரச்சினை
மாத்திரம்தான் இருக்கிறது வேறு பிரச்சினைகள் எதுவும இல்லை என்ற பொய்யான பிம்பததைக்
காட்டவே முயறசிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும நமபிக்கையையும் தமிழ்த் தேசிய
ஒருமைப்பாட்டையும கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப் பிரச்சினைக்கான
தர்வின் அவசியத்தையும அவசரத்தையும தென்னிலங்கைக்கும உலக சமூகத்துக்கும
நிராகரிக்கப்பட முடியாத விதததில் உணர்த்த வேண்டியதும அவசியமாகும்.

தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும தான் உண்டு என்று ஆட்சிக்கு வரும்
அரசாங்கஙகள் தொடர்ச்சியாக கூறிவரும் ஒருபின்னணியில், தேசிய இனப் பிரச்சினையைப்
பேசுபொருளாக்கி அதன்மது தென்னிலங்கையின் கவனததையும உலகத்தின் கவனததையும்
ஈர்க்கும் நோக்கத்தோடு, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினராகிய நாம் ஒற்றுமையுடன்,
எம்மக்களின் இன நலன்களைப் பேணும் நோக்குடன், எதிர்வரும நாடாளுமன்றத தேர்தலில் வடக்கு
கிழக்கு தாயகம் எங்கும தகுதியான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் தமிழ மக்களில் ஒருபிரிவினர் ஏதாவது ஒரு தென்னிலங்கை கட்சியின் தமிழ்
வேட்பாளருக்கு அல்லது சகோதர இனவேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். இவர்களில்
வென்றவர்களும சரி தோற்றவர்களும சரி இன்றுவரையிலும இனப் பிரச்சினைக்கு
ஏறறுக்கொள்ளததக்க ஒருதீர்வைத் தாம் பிரதிநிதித்துவம செய்யும கட்சிகள் ஊடாக தரவும
இல்லை.

இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவுமில்லை.
எமது கூட்டணியில், நாம் தமிழ மக்களை ஓரணியாகத திரட்டுவோம அதேசமயம், இனப்
பிரச்சினைக்கான தர்வை நோக்கிய தமிழ் மக்களின் உறுதியான கோரிக்கையை சர்வதேச
சமூகத்துக்கும தென்னிலங்கைக்கும வெளிப்படுத துவோம். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார
நீதியையும் கோருவோம
இந்த அடிப்படையில், ஜனநாயக தமிழ தேசியக் கூட்டணி இனப் பிரச்சனைக்கான நிரந்தரதர்வானது
பின்வரும அடிப்படைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உறுதியாக வலியுறுததுகின்றது.

1- இனப் பிரச்சினையைத தர்க்கும நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலஙகைத் தவின்
புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும கொண்ட ஒரு தேசிய
இனமாக ஏறறுக்கொள்ள வேண்டும்.

2- தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத தீவின்
பல்லினத தன்மையை உறுதிப்படுததலாம். எனவே புதிய யாப்பானது இலங்கைத்தீவின் பன்மைத
தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதததில், அதாவது புதிய யாப்பானது இலங்கைத்தீவு ஒரு
பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும

3- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த
வடக்குகிழக்கு மாகாணஙகளில் தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களை ஒன்றிணைத்ததாக
அமையவேண்டும குறித்த சுயநிர்ணய அலகிற்குள் வாழும முஸ்லீம மக்களின் நியாயமான
அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாதத ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணி எபபோதும தயாராக உள்ளது.

4- மலையகத் தமிழ மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த
அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தர்வு வழங்கப்படவேண்டும. மேலும் உடனடி
பிரச்சினைகளுக்கும் அவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும கோரிக்கைகளுக்கும் தீர்வுகள
வழங ;கப்படவேண்டும். இத்தர்வுகளுக்கான போராட்டத தில் ஜனநாயக தமிழ தேசிய கூட்டணியானது
மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.

5- ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலஙகா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றஙகள்,
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக்
கட்டமைப்புக் கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகாரநீதி
வழஙகப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகளின் மள்நிகழாமையை உறுதி செய்யவேண்டும
இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட
அனுபவமாக, ஐநா பொதுச்செயலரின் பொறுப்புகூறலை ஐநா பொதுச்சபையிடம் பாரப்படுததுவதன
மூலம இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைததுலக குற்றவியல்
நீதிமன்றததிடம் பாரப்படுதத வேண்டும்.

6- அபிவிருத்தியின் பெயரால் மேறகொள்ளப்படும நிலப்பறிப்பைத தடுக்கவும, நமது வளங்கள்
இனஅழிப்பின் ஒருபகுதியாகச் சுரண்டப்படுவதைத தடுக்கவும தமிழர் தாயகத்தின் தேசிய
வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைததிறனுடன் பயன்படுததவல்ல
தற ;சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம உருவாக்கவேண்டும். இதற்கேற்ற வகையில்
தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருததியை நோக்காகக்கொண்டு, புலமபெயர்ந்த
தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும உள்வாங்கும
அதிகாரம் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

7- எமது நாட்டின் கடல் வளங்கள் அழிக்கப்படுவதை தடுப்பதறகும கடற்றொழிலாளர்கள்
சமூகத்தின் வாழக்கையை மேம்படுத்துவதறகுமான வகையில், 2016ஆம் ஆண்டில் இலங்கை
இந்திய அரசுகள் மேறகொண்ட கூட்டு இணக்கத்தின் அடிப்படையில் மண்டும் பேச்சுக்களை
ஆரமபித்தல், 1996ஆம் ஆணடின் 02ஆம் இலக்கமற்றும 2017ஆம்ஆணடின் 11ஆம் இலக்க
சட்டங்களை உறுதியான முறையில் நடைமுறைப்படுத்துதல், மீனவர் கூட்டுறவுச் சங்கங்களைவலுவாக்குதல், மனவக் கிராமங்களிலிருந்து படைத்தரப்பினர் வெளியேறுதல போன்ற நடவடிக்கைகள் மூலம அமமக்களின் பாதுகாப்பும வாழ வாதாரங்களும் உறுதிப்படுததப
படவேண்டும்.

8- ஒரு நிரந்தரத தர்வைக் கண்டடைவதறகு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத தோடும், தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென பன்னாட்டு சமூகத்தின் மேறபார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏறபாடு ஒன்று (Protective Mechanism) உருவாக்கப்படவேண்டும். மேற்கூறப்பட்ட, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டை ஏறறுத் தமிழ்மக்களும இதுவே தமது பொதுநிலைப்பாடு என்று தென்னிலங்கைக்கும சர்வதேச சமூகததுக்கும் வெளிக்காட்டசங்குச் சின்னததுககு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டிநிற்கின்றோம்.

தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதறகாகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதறகாகவும், தமிழ் மக்களின்
அரசியல் அபிலாசைகளை ஒருமித்தகுரலில் ஒலிக்கச் செய்வதறகாகவும், பலமான
கட்டமைப்புடனான அரசியல் தர்வை கோரவும், அதற கான அழுததங்களை தென்னிலங்கையின்
முறபோக்கு சக்திகளுடாகவும் சர்வதேச சக்திகளுடாகவும மேற்கொள்ளவும் இத்தேர்தலை ஒருசந்தர்ப்பமாக எமது மக்கள் கையாளவேண்டும
சங்கு சின்னததிறகு வழஙகப்படும் வாக்குகள், தமிழ் மக்கள் தங்களுக்குத் தாங்கள் வழங்கும
வாக்குகளாகவே அமையும.

தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழ் மக்களின் தேசியக் கடமையாக சங்குச் சின்னததுககு
ஆகக்கூடிய வாக்குகளை வழங்குவதன் மூலம எங்கள் கோரிக்கைகளை நாங்களே வெற்றி
பெறவைப்போம்.

இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் – செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் விசேட சந்திப்பு.

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு 22-10-24 காலை விஜயம் செய்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடினார்.

இதன் போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் டானில் வசந் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது கட்சியின் செயல்பாடுகள் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தற்போதைய தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குறித்த குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்,தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

Posted in Uncategorized

திருகோணமலை மாவட்ட மக்களே உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க எங்கள் வேட்பாளர் துஷ்யந்தன்

திருகோணமலை மாவட்ட மக்களே உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க எங்கள் வேட்பாளர் துஷ்யந்தன் உங்கள் முன் நேருக்குநேர் -இடம் நகரசபை மண்டபம் -சனிக்கிழமை 26-10-24 -நேரம் பிற்பகல் 4 மணி.

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது அரசுடன் இணையுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.

தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.

இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம்.

உண்மையை நாட்டு மக்களுக்குக் கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சராவது பிரச்சினை அல்ல, அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்தான் பிரச்சினை – என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!

”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.”

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது,

”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.

வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.

13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.

இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.

Posted in Uncategorized

தமிழரசுக்கட்சி சுமந்திரனின் தனிப்பட்ட கம்பனி : உள்வீட்டு சிக்கலை அம்பலப்படுத்தும் தவராசா!

இலங்கை தமிழரசுக்கட்சி என்பது சுமந்திரனின் தனிப்பட்ட கம்பனி. தனிப்பட்ட இந்த கம்பனியில் அவர் தலைவராக இருக்கிறார். எனவே வீட்டுக்கு வாக்களிப்பதா அல்லது கம்பனிக்கு வாக்களிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியம் என்பது தற்போது அறவே இல்லை. அப்படி இருந்திருந்தால் கடந்த 06 ஆம் திகதி நான் கட்சியை விட்டு விலகியிருக்கமாட்டேன்.நான் ஒருபோதும் பதவி கேட்டு அலைபவன் அல்ல. பதவிக்காக கட்சியை விட்டு விலகியது என குற்றம் சாட்டுவது பொய்யானது.

சம்பந்தனுக்கு உள்ள குணமே சுமந்திரனிடமும் உள்ளது. அதாவது காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றையும் பேசுவது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் உள்ளவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள். அவ்வாறு அவரின் ஆதரவாளர்களை உள்வாங்குவதற்கு காரணம் சம்பந்தன் என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized