இராணுவ பிடியிலுள்ள நிலத்தினை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ குற்றச்சாட்டு

மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய ஆர்வம் கொள்ளவில்லை என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ; குற்றச்சாட்டினார்.

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் போல் டக்கிளஸின் அழைப்பில், இராணுவத்தினரை பொது இடங்களில் இருந்து அகற்றுவதற்கான போராட்டம் பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து nhண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், யுத்தம் நிறைவுறுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எம்மை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகின்றன. மக்களின் நிலம் மக்களுக்குச் சொந்தமானது என்ற தேர்தல் பிரச்சாரத்;துடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் எந்த உத்தரவாதத்தினையும் நிறைவேற்றவில்லை. பலாலியில் வீதியை விடுவித்துவிட்டு நடமாடும் சுதந்திரத்திற்கு தடை போடுகின்றனர். அங்கு மக்களின் நடமாடும் சுதத்திரத்தின் மீது மட்டுப்பாடுகளை விதித்து அறிவித்தல் செய்தவர்கள் இராணுவத்தினர். ஆகவே இராணுவத்திற்கு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கான உத்தியோகப்பற்றற்ற அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கிற்கு வெளியே உரிய வர்த்தமானி அறிவித்தல்கள் வாயிலாகவே உயர்பாதுகாப்பு வலய மட்டுப்பாடுகள் உள்ளன.

எனினும் வடக்குக் கிழக்கில் தமிழர் பூர்வீக நிலங்களில் இராணுவச் சட்டங்களும் அணுகுமுறைகளும் காணப்படுகின்றன. நாங்கள் வெளிப்படையாகவே எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்கின்றோம். எவ்வித நியாயப்பாடுகளும் இன்றி தமிழ் மக்களின் தனியார் காணிகளிலும் நிர்வாகம் சார்ந்த மற்றும் பொதுத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

தையிட்டி உள்ளிட்ட காணிகளின் மக்கள் வீதியில் போராடுகின்றபோதும் அவற்றுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. எனவே தாமதம் இன்றி இராணுவத்தினரை வெளியேற்றி தமிழ் மக்களின் வாழ்வுரிமையை உறுப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

Posted in Uncategorized

இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு

இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு.

தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும், அரங்கேற்றப்பட்டுவரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்க முடியாது.

முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தோவையற்ற இராணுவ முகாம்களும் முப்படையினரின் பிரசன்னமுமே காரணமாகும்.-2009 ம் ஆண்டு போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழவிடக்கூடாதென்கின்ற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

அன்றைய காலத்திலே எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்துவந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்றவேண்டும் என்ற நோக்கோடும். எமது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும் மண்ணையும் காத்திட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம்.

இன்றைய சூழ்நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதித இராணுவ பிரசன்னமும் அதன் அடக்கு முறை இன அழிப்பு வடிவங்களும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரிய தாக்குகின்றது. அந்தவகையிலே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆதரவளிக்கின்றது.

இதவேளை இலங்கை தமிழரசுக்கட்சி சகல தமிழ்தேசிய அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானதாகும் .

இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க இராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும் அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆகிய நாம் ஆதிரவளிக்கின்றோம்.

அ. அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர் .
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ).

Posted in Uncategorized

மன்னார் காற்றாலை கனிய வளம் தொடர்பில் இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இவ் நடவடிக்க்களை ஆராய்ந்து மக்களுக்கான தீர்வை எட்டும் வகையிலான கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of ticket stub and text

May be an image of ticket stub and text

முதலீட்டாளர்கள் அச்சம் இன்றி வரக்கூடிய சூழலை அநுர அரசு உருவாக்கவில்லை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம் இன்றி வரக்கூடிய சூழலை அநுர அரசு உருவாக்கவில்லை என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கொழும்பு பிரபல விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி அச்சம் இன்றி நாட்டுக்குள் வந்து முதலீடு செய்யலாம் எந்த தடையும் இல்லை, எல்லோரும் வாருங்கள் என அறை கூவல் ஒன்றை விடுத்தார்.

இந்த அறிவிப்பு அநுர அரசு மாத்திரமல்ல யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் கோட்டாபய ராஜபக்ச அரசுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நோக்கி விஜித ஹேரத் போன்று அறைகூவலை முன் வைத்தனர். ஆனால் பெரியளவிற்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. காரணம் இலங்கைத் தீவின் அரசியல் அமையின்மையும் உள் நாட்டில் தீர்க்கப்படாது உள்ள தேசிய இனப்பிரச்சினையும் முதன்மையான விடயங்களாகும்.

உள் நாட்டு அரசியலின் அமைதியற்ற சூழலை ஒவ்வொரு வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களது முதலீட்டிற்கு பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்வதுடன் நாட்டில் நிலையான பொருளாதார கொள்கைகள் வலுவாக்கப்படாமை மற்றும் சக இனங்கள் இடையே உள்ள முறுகல் நிலைமைகளை கண்டு முதலீடு செய்ய அச்சப்பட வைக்கின்றது.

கடந்த கால அரசுகள் போன்று அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வுகளை காணாது வெறுமனே அறைகூவல்களை தொடர்ச்சியாக கூவிக் கொண்டுதான் அநுர அரசாங்கமும் இருக்குமாயின் எந்த மாற்றமும் பொருளாதாரத்தில் நிகழ்ந்துவிடப் போவதில்லை இப்படியான அறிவிப்புக்கள் நாட்டு மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தான் நாட்டின் பொருளாதார முதலீடாக அமையும் என்ற உண்மையை அநுர அரசு உணர்ந்து செயல் வடிவம் கொடுக்கும் போதே நாட்டில் பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்ல இன நல்லிணக்கத்தையும் பூரண சுதந்திரத்தையும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்ய முடியும் இதுவே அச்சமின்றி முதலீட்டாளர்கள் வருவதற்கான சூழலை உருவாக்கும் அத்துடன் மாதாந்தம் மில்லியன் கணக்கான உல்லாசப் பயனிகள் வந்து குவிவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.

ஆகவே அர்த்தமற்ற அறைகூவலை விட்டு அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வுகளை காண செயற்பாட்டில் இறங்குங்கள் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

உள்ளூராட்சி மன்றங்களை அதிகாரப் பகிர்விற்கான ஆட்சி அலகு என்பதை விடுத்து திணைக்களம் போல் அரசு நடத்த முயற்சிக்கின்றது – சுவிஸ் தூதுவரிடம் தவிசாளர் நிரோஷ்

உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது கடினமான விடயமாகவே உள்ளது என சுவிசர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிசர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் தலைமையிலான குழுவினர் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (29.07.2025) யாழ்ப்பாணத்தில் சந்தித்து புதிதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட தவிசாளர்களுடன் கலந்துரையாடினர். இச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தாம் இவ்வாறு தெரிவத்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறிப்பிட்டார்.

அவர் மேலும், புதிதாக உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் வலுப்படுத்தும் வகையில் சர்வதேச அனுபவங்களைப் பெற்று மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் சாதாரணமான உள்ளூராட்சி மன்றங்களை ஓர் திணைக்களம் போன்றே மத்திய அரசாங்கத்தின் அணுகும் தன்மை காணப்படுகின்றது. இதற்குப் பின் அதிகாரங்களைப் பகிர மறுக்கும் மத்திய அரச கொள்கை நிகழ்ச்சிநிரல் உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தியையும் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் நாம் சமமாகவே முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். இவ் விடயத்தில் உள்ளூராட்சியை பலப்படுத்த தங்கள் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. உள்ளூராட்சி மன்றங்களின் பணிப்பரப்புக்களை ஏனைய நாடுகள் போல் முன்னெடுக்க அதிகாரங்கள் வலுப்படுத்தப்படவேண்டும். மாறாக அரசாங்கம் மத்தியை நோக்கி அதிகாரங்களை குவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது. தமிழ் மக்களில் பெருமளவானோர் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் ஊடான முதலீடுகளை பெற்று தொழில்துறை ரீதியிலான அபிவிருத்திகளை போரினால் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். எனினும் அரசு தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநிறுத்தாமை காரணமாக புலம்பெயர் முதலீட்டாளர்கள் தாயகம் திரும்ப அஞ்சுகின்றனர்.

எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறலுக்கு உள்நாட்டில் நீதியை ஒருபோதும் பெற்றுவிட முடியாது என்பதை கடந்த போருக்குப் பின்பான காலந்தாழ்தல்கள், அனுபவங்கள் வாயிலாக முடிவுசெய்துள்ளோம் என சுவிசர்லாந்து தூதுவருக்கும் தவிசாளர்களுக்குமான சந்திப்பில் தவிசாளர் தியாகராஜா நிரோ~; தெரிவிதார்.

வலி கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன.

சனிக்கிழமை காலை(26-7-25) பிரதேச சபை முன்றலில் கறுப்பு யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை கொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளையும் நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுஈகைச் சுடரினை தவிசாளர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அஞ்சலிச் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்த்து அஞ்சலித்தனர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் கருத்துரைத்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ;, மாறி மாறி ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றன எனினும் இலங்கை அரச கொள்கை தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க முடியாத ஒன்றாகக் காணப்படுவதனாலும் அரச இயந்திரமும் மக்கள் சமூகமும் இனவாதமயப்படுத்தப்பட்டுள்ளமையின் விளைவினாலும் தமிழ் மக்களுக்கான நீதி பொறுப்புக்கூறல் கிட்டவில்லை. நாம் வரலாற்று ரீதியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேச நீதி ஒன்றே எமக்குத் தீர்வாகும் என்பதை முன்வைக்கின்றோம்.

கறுப்பு யூலை கலவரத்தின் போது அரச அனுசரணையில், ஊக்குவிப்பில், பங்கேற்பில், முன்னெடுப்பிலேயே சகல படுகொலைகளும் தமிழ் மக்கள் மீதான பாரதூரமான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன. வாக்காளர் இடாப்பில் தமிழர்களைத் தேடி அழிக்கும் முயற்சியை கச்சிதமாக மேற்கொண்டனர். மூவாயிரம் தமிழர்கள் வரையில் குத்தியும் உயிருடன் எரியூட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான பொருளாதார அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அரசின் சிறைச்சாலைக்கதவுகள் திறந்து விடப்பட்டு அண்ணன் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எவற்றுக்குமே நீதி கிட்டவில்லை என தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் இரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களும் தமது கண்டனங்களையும் கருத்தக்களையும் முன்வைத்தனர்.

Posted in Uncategorized

கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியளிக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஸ்டிக்கின்றது. கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்கள்ளாகவும் கொன்றழித்தனர். ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன. அழிக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன.

இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்திமூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம்.

Posted in Uncategorized

தமிழருக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை அதற்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் அம்ர்வில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினர், தவிசாளர் தியாகராஜா நிரோஸினால் இத் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களின் வரவேற்பினைப் பெற்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தினை முன்வைத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உரையாற்றுகையில்,

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் வரலாற்று ரீதியில் நாம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். எம் மீதான இனப்படுகொலை அரச கொள்கையாக இடம்பெற்றுள்ளது. எமது பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கில் நிலங்கள் திட்டமிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பௌத்த சிங்கள பேரினவாத விஸ்தரிப்பு முயற்சியாக எமது மொழி உரிமை மறுக்கப்பட்டது. தமிழ் மக்கள் என்ற காரணத்திற்காக சொந்த மண்ணிலேயே அரச ஒத்துழைப்போடும் அனுசரனையோடும் ஏவுதலோடும் வன்செயல்கள் வாயிலாகவும் இராணுவ நடவடிக்கைகள் வாயிலாகவும் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டனர். தமிழர்களைக் கொன்றால் குற்றமில்லை என்ற ஆட்சியாளர்களின் உத்தியோகப்பற்றற்ற ஆதரவு அரசினால் அளிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனைகளில் இருந்து விலத்தளிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை.

தமிழ் பெண்கள் அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர். இதற்கு செம்மணி தக்க சான்று. இன்றும் மீட்கப்படும் புதைகுழிகள் மீது சர்வதேச விசாரணை அமையுமாயின் பல உண்மைகளை அவை வெளிப்படுத்தும். தமிழ் இனமாகப் பிறந்தார்கள் என்ற அடிப்படையில் எமது கல்வி உரிமை வரலாற்றில் மறுக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சர்வதேசத்தினால் காட்டுமுராண்டிச் சட்டம் என இனங்காணப்பட்ட சட்டங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பல தசாப்தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் அரசியல் கைதிகளாக மீதமுள்ளவர்கள் விடுதலைக்காக ஏங்குகின்றனர். அரச படைகளால் வலோத்காரமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களது விடுதலையை கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் தெருக்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டு இருக்கின்றனர். சிறுவர்கள் பாடசாலை வளாகங்களுக்குள் வைத்தே அரச படைகளால் குண்டுகள் வீசப்பட்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவமயமாக்கத்தினுடாக பௌத்த சிங்கள பேரினவாதம் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வித சட்ட ரீதியான அணுகுமுறைகளும் இன்றி இராணுவ அதிகாரம் கொண்டு கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் பல நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகம் திட்டமிட்ட அரச தாபனங்கள் ஊடாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் பல மனிதப் புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஏராளமான எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை. இறுதி யுத்தத்திலும் ஏனைய யுத்தத்திலும் போர்த் தர்மங்களையும் உலக நியதிகளையும் மனித உரிமைகளையும் மீறி அரசு செயற்பட்டுள்ளது. வகைதொகையின்றி இலட்சக்கணக்கில் மக்களை படுகொலை செய்துள்ளது.

உள்நாட்டில் உண்மைகளை கண்டறிந்து நீதியை வழங்க போதிய பொறிமுறைகளும் ஏற்புடைமையும் இன்றைய அரசிடமும் கிடையாது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்குவதையும் நீதியை வழங்குவதாக சர்வதேசத்திடம் பொய்யான உத்தரவாதங்களை வழங்கி தமிழருக்கான நீதியை காலந்தாழ்த்தும் உத்திகளிலேயே அரசு கவனம் செலுத்துகின்றது. காலந்தாழ்த்துதல் ஊடாக எமது நீதிக்கேரிக்கைஇ மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைஇ இனப்பிரச்சினைத்தீர்வு ஆகியவற்றை நீர்த்துப்போகச் செய்யும். தந்திரோபாயத்தினை இலங்கை கொண்டுள்ளது.

எமது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், வரலாறு, அடையாளம் அனைத்தும் திட்டமிடப்பட்டு உள்நாட்டில் அழிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் எம் மீது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி ஒன்றே தீர்வைப் பெற்றுத்தரும் என்பதை அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆணைக்குரிய இவ் உயரிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் ஆட்சி மன்றில் தீர்மானமாக எடுக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கரையோர வர்த்தகர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க கூறிய விடையம் இலங்கையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழித்தால் தான் நாடு முன்னோக்கி செல்லும் யதார்த்த பூர்வமாக இருந்தாலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கான வழியை அனுர சட்டரீதியாக குறிப்பிடவில்லை.

உண்மையாக பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பே அந்த நாடுகளில் இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற அமைதியான நாடுகளாக முன்னோக்கி செல்ல மாத்திரமல்ல அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும் மாற வழி திறந்தது.

இலங்கையில் பல்லினங்கள் வாழும் நாடு அவ்வாறு இருக்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் ஒரு இனத்திற்கு சார்பான அதிகாரங்கள் மேலோங்கி இருக்கும் போது ஏனைய தேசிய இனங்கள் நசுக்கப்படுவதற்கு அப்பால் அதிகார மேலாதிக்கம் கொண்ட இனத்தின் மூலமே இனவாதமும் மதவாதமும் கட்டவிழ்க்கப்படுகிறது.

ஆகவே ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களுமே இனவாதம் மற்றும் மதவாதங்களை தங்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலாக செயற்படுத்தியுள்ளனர் தற்போதும் செயற்படுத்துகின்றனர் எனவே இலங்கைத் தீவில் இனவாதம் மற்றும் மதவாதத்தை அடியோடு இல்லாது ஒழித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பாக மாற்ற வேண்டும்.

இதனை பகிரங்க வெளியில் தொடர்ந்து அனுரகுமார திஸநாயக்காவால் கூற முடியுமா?

Posted in Uncategorized

தமிழினத்தை மண்ணுக்குள் கொன்று முடக்கிய இராணுவத்தினர்: அஞ்சி ஒதுங்கும் அநுர

சர்வதேச மட்டத்திலும், இலங்கையில் தென்னிலங்கை மற்றும் மலையக தரப்புக்களிலும் செம்மணி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறி இருப்பினும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியையும் அரசின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்வி குறியாக்கியுள்ளது.

நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்தவை இனப்படுகொலை இல்லை என காலம் காலமாக இலங்கை அரசு தெரிவித்து வந்த நிலையில், தற்போது எலும்புக்கூடுகள் கொத்து கொத்தாக கண்டுபிடிக்கப்பட்டு நடந்தது இனப்படுகொலைதான் எனவும் அதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்கியுள்ளது.

இருப்பினும், இதற்கு காரணமான சூத்திரதாரிகளை காப்பாற்றுவதில் அன்றைய அரசாங்கம் தொட்டு தற்போதைய அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கம் வரை மிகவும் கவனமாக உள்ளனர்.

நாட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்த அநுர தற்போது அதற்கு காரணமான இராணுவத்தினரை காப்பாற்ற முற்படுவது என்பது அவர்கள் மீதான பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பிலும், செம்மணி விவகாரத்தில் அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு, தமிழ் மக்களின் கோரிக்கை, இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமான இராணுவத்தினரின் அடுத்த கட்டம், சர்வதேச நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும்,வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளரும் வடக்கு மனித உரிமைகள் நிலையத்தின் முக்கியஸ்தருமாகிய தியாகராஜா நிரோஸ் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,