மே 9 வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசேட விசாரணை நாளை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் பதிவாகிய சொத்து சேதம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் HRCSL வளாகத்திற்கு நாளாந்தம் வரவழைக்கப்படுவார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு பெற்ற) ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் மனித உரிமை ஆணையத்திற்கு 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமக்கு மொத்தம் 521 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 107 முறைப்பாடுகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 88 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

86 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்திலிருந்தும், 26 முறைப்பாடுகள் களுத்துறை மாவட்டத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

வீடுகளுக்கு தீ வைத்தல் , கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தல் , பஸ்களுக்கு தீ வைத்தது, வீடுகளை சேதப்படுத்தியது போன்ற புகார்கள் இந்த புகார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சேதங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

Posted in Uncategorized

IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீண்டும் சொந்த நாடான அமெரிக்கா செல்ல தயாராகும் கோட்டாபய

தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரியை பெறும் நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் தனது குடியுரிமையை திரும்பப் பெற்றார்.

எவ்வாறாயினும், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்க பிரஜைகள் என்பதால், முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை மீளப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்க குடியுரிமையை துறந்தவருக்கு அதை திரும்ப வழங்க அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தற்போது தாய்லாந்தில் இருக்கும் திரு கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக உதயங்க வீரதுங்க நேற்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக 09 மனுக்கள் தாக்கல்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட ஒன்பது பேரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

மாடு அறுப்பதை தடுத்த மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றில் கிடைத்த நற்பெயர்

களனியில் பசு வதையை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என தெரிவித்த கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சந்தேகநபரை நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விடுதலை செய்தார்.

2007ஆம் ஆண்டு, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபரான அமைச்சரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த  விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய அவர் கைதாகியுள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் தொடர்ந்தும் பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களை களைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

பல பகுதிகளில் இருந்து வருகை தனித்துள்ள மாணவர்கள் மற்றும் பௌத்த தேரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவுளித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மேலும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்

Posted in Uncategorized

ரணில் பக்கம் செல்ல பலர் தயார் தமிழ், முஸ்லிம் எம்.பிக்களும் உள்ளடக்கம்

“ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியிலிருந்து 20 இற்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைய இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர். அவர்களுள் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர் ” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“எதிரணியில் இருந்து வரும் உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு பலமான அரசை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுவவுள்ளார்.

அந்த அரசுக்கு சர்வகட்சி அரசு, சர்வகட்சி ஆட்சி, தேசிய அரசு ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே, பலமிக்க அரசுக்கு இந்த மூன்று பெயர்களில் ஒரு பெயரை அதில் அங்கம் வகிக்கவுள்ள உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஜனாதிபதி சூட்டுவார்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அசைக்க முடியாத அரசை நிறுவுவதே ஜனாதிபதியின் விருப்பம். இதற்காகப் பல கட்சிகளை அவர் தனித்தனியே சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.

எனினும், சில கட்சிகள் இழுத்தடிப்புக்களைச் செய்கின்றன. சர்வகட்சிகளை உள்ளடக்கிய தேசிய வேலைத்திட்டத்துக்குக்கூட சில கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கின்றன.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் சிக்குண்ட நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இது கட்சி அரசியல் செய்யும் நேரமல்ல. எனவே, காலத்தை வீண்விரயம் செய்யாமல் சேர விரும்பும் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு பலமிக்க அரசை நிறுவி பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகளைக் காணும் பயணத்தை ஜனாதிபதி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளார்” – என்றார்.

Posted in Uncategorized

நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணைைவழி சந்திப்பு

17 ஆவணி 2022 மதியம் 15:30 அளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் அவர்களுடனான முக்கிய சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற்றது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஸ்ரீதரன் கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்தா அவர்கள் கலந்துகொண்டு இருந்த பொழுதிலும் உடல்நிலை காரணமாக கூட்டத்தில் தொடர்ந்தும் பங்குபெற்ற முடியவில்லை.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. சமாதான நடவடிக்கைகளில் நோர்வே ஆர்வத்தோடு கடந்த காலங்களில் பங்கு பற்றி இருந்த பொழுதிலும் 2009 யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் அவர்களின் பங்களிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து தமிழ் மக்களிடமிருந்து எட்டி இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவதானிக்கப் படுவதாக தமிழ் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

அதற்கு பதில் அளித்த ஆன் கிளாட் அவர்கள், சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு தாங்கள் சர்வதேச சமூகத்தால் முன்னிலைப்படுத்த பட்டதாகவும் அது தோல்வியடைந்த பின்னர் நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக வேலைத்திட்டங்களில் சர்வதேச சமூகத்தோடு தாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது எந்த கருத்து தமிழ் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல அவசரமாா பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இலங்கை அரசியலில் குறைவாகவே காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் ஆன் கிளாட் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டுள்ள சீன கப்பலால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த வேளையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

MiG விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக உதயங்க வீரதுங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.