பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 6/3/2026 பாராளுமன்ற அமர்வில் ஆற்றிய உரையின் முழுமையான காணொளி.
இன்றைய தினம் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கின்ற விவாதத்திலே சில கருத்துக்களை சொல்லலாம் என்று விளைகின்றேன் .
முதலாவது இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசாங்கம் எடுத்துக்கொண்டு இருக்கின்ற அந்த நடவடிக்கைகளுக்கு எங்களுடைய முழு ஆதரவையும் நாங்கள் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தொடர்ச்சியாக இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவேண்டும், விசாரித்து ஒரு நீதி கிடைக்கவேண்டும் என்ற நிலையிலே நாங்கள் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்மந்தமாக கைது செயற்படுகின்ற விசாரனை செயற்படுகின்ற அத்தனை விடையங்களுக்கும் எங்களை பொறுத்தமட்டிலே நாங்கள் ஆதரவு தருகிறோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
இரண்டாவது விடயம் இந்த இப்பொழுது நடைபெறுகின்ற போர் சூழல் காரணமாக பல பேரும் பாராளுமன்றத்திலே கருத்துகளை சொல்லுகிறார்கள். உண்மையிலே இது தவறான இந்த போர் என்பது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் எங்களுடைய நாட்டிலே எங்களுடைய மக்களுடைய எங்களுடைய இனம் சார்ந்த அடக்கு முறைக்கு எங்களுடைய மக்கள் இந்த போரால் பாதிக்கப்பட்டதை நாங்கள் நன்கு உணர்ந்ததன் அடிப்படையிலே இந்த போர் என்பது உண்மையிலே நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதிலே பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் என்னைப்பொறுத்த மட்டிலே இந்த போர் சம்மந்தமாக குரல் கொடுக்கின்ற எம்மவர்கள் அது யாராக இருந்தாலும் சரி , அவர்களுடைய அந்த எண்ணக்கருவை பார்க்கின்ற போது இந்த போர் சம்மந்தமாக மிக ஒரு உச்சகட்டமான கருத்துகளை சொல்லிவருகிறார்கள், குத்திமுறிகிறார்கள் என்று தமிழிலே சொல்லலாம்.
ஆனால் எங்களுடைய இனம் சார்ந்த போராட்டத்திலே நியாயத்தை கதைப்பதற்கு இந்த நாட்டிலே யாரும் இருக்கவில்லை என்ற கவலையை நான் இங்கு பதிவு செய்கின்றேன். இப்பொழுது பேசுகிறவர்களெல்லாம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களெல்லாம், எங்களுடைய இனம் சார்ந்த , உரிமை சார்ந்த பிரச்சனைகளை அது நியாயமானது என்று சொல்லுவதற்கு யாரும் இந்த நாடாளுமன்றத்தில் முன்வரவில்லை என்பதை நான் இங்கு எங்களுடைய இனம் சார்ந்த என்னுடைய அடக்குமுறைக்குள் இறந்துபோன, அடக்குமுறைக்குள் என்னுடைய இனம் சார்ந்த அந்தப்போரை நாங்கள் நடத்துகின்றபோது அது அந்தப்போர் தவறானது, அந்த இனத்தின் பிரச்சினை என்பது தீர்க்கப்படவேண்டும் என்று செல்லுகின்ற வகையிலே இங்கு யாருமே குரல் கொடுக்கவில்லை என்பதை நான் இந்த உயர்சபையிலே எனது பதிவை நான் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
அடுத்ததாக சொல்லப்படுகிறது இந்த போர் கப்பல் இலங்கையிலே அடிபட்டது அதற்கு இந்தியாதான் காரணம், பொறுப்பென்றால்லாம் இங்கே பேசுகிறார்கள். என்னைப்பொறுத்தமட்டிலே உங்களுக்கு இந்தியா பொருளாதார தடை வருகின்றபோது இங்கு வரவேண்டும் ,இந்த இயற்கை அனர்த்தம் ஏற்படும் போது முதன்முறையாக கால்பதித்தது இந்தியா, அது வரவேண்டும். ஆனால் ஒரு சினேகபூர்வமான போர் கப்பல், ஒரு இந்தியாவிலே நடந்த சினேகபூர்வமான பயிற்சியிலே அவர்கள் காலம் கடந்து அவர்கள் இங்கே வந்து இலங்கை அரசிடம் இங்கே தங்கவேண்டும் என்று கேட்டதாக அறிகின்ற போது ஏன் இந்தியாவை குறை சொல்கின்ற ஒரு நிலையை நீங்கள் கொள்ளுகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
என்னைப்பொறுத்த மட்டிலே இந்த விடயத்திலே இந்தியாவை நீங்கள் குற்றம் சாட்டக்கூடாது, இயலாது. அது சரியான தவறானதொரு விடயம் என்பதை நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
உண்மையிலே குழுக்களின் பிரதி தவிசாளர் அவர்களே பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எங்களுடைய மக்கள் சுமந்த அந்த வலி சுமந்த நாட்களை இப்பொழுதும் நாங்கள் இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக ஏன் ஆயுதம் எடுத்து போராடிய JVP கூட இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை சந்தித்தது பல பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இப்பொழுதும் எங்களுடைய இனம் சார்ந்த போராட்டங்களை அடக்குவதற்காகத்தான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் நீடிக்கப்படுகிறதா என்று அதிகம் சந்தேகம் வருகிறது. ஒரு சமூகம் தன்னுடைய பிரச்சனையை போராட்டத்தினூடாக கொண்டுவருகின்ற போது அந்த பிரச்சினை நியாயமானதாக இருக்கின்ற போது அந்த போராட்டம் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கப்படுகிறது?
இதிலே சொல்லப்படுகிறது இந்த இப்பொழுது இருக்கிற நாட்டின் சூழல் காரணமாக .பெற்றோல் இல்லை, Queue வில் நிற்கிறது இப்படியான பிரச்சனைகளுக்கு, இப்படியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டுதான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கப்படுகிறது என்று சொல்லி சொல்லப்படுகிறது. இதற்கு சட்டங்கள் இருக்கிறது. ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீங்கள் கொண்டுவாறீர்கள்? இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினூடக மூன்று மாதங்கள் விசாரனைக்காக நீதிமன்றம் கொண்டுபோகாமல் வைத்திருக்கமுடியும்.
ஆகவே ஒரு போராட்டம் செய்கின்ற இப்பொழுது இந்த எண்ணை இல்லை என்று ,பெற்றோல் இல்லை என்று மக்கள் போராட்டம் செய்கின்ற அந்த சூழல் ஏற்படுமாக இருந்தால் அதை நாங்கள் எப்படி ஒரு சட்ட ரீதியாக அதை கையாளவேண்டும். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக ஒரு ,DO வை போட்டு பல மாதங்களாக, அவர்களை விசாரனை என்ற பெயரிலே நீதி மன்றத்திற்கு கொடுக்காத ஒரு சூழலை உருவாக்குகின்ற ஒரு இந்த சட்டத்தை நீங்கள் நடைமுறைப்படுத்துவது எங்களை பொறுத்தமட்டிலே ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுடைய பிரதமர் அவர்கள் தன்னுடைய கருத்தை சொல்லுகின்றபோது சொன்னார் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கின்ற போதும் கூட இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினூடக யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா?சொல்லுங்கள் என்று இங்கே பிரதமர் அவர்கள் பேசுகின்ற போது எடுத்துச்சொன்னார்கள். என்னைப்பொறுத்த மட்டிலே இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்படுபவர்கள் இந்த சட்டத்திலே கைது செய்யப்படுவது தவறு என்று நான் சொல்லவில்லை.
இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இந்த போராட்டங்கள் வலுப்பெறும் போது இந்த மக்கள் தங்களுடைய அந்த உரிமையை போராட்டங்களாக மாற்றுகின்ற போது இந்த பயங்கரவாத தடைச்சட்டம் அவர்கள் மீது பாயாதா என்ற உத்தரவாதம் யாரும் கொடுக்கமுடியாது குழுக்களின் பிரதி தவிசாளர் அவர்களே. அவர்களை இந்த சட்டத்தின் கீழ் தான் கைதுசெய்ய வேண்டும். ஏனென்றால் இந்த சட்டம் நீடிக்கப்புகிறது.
அந்தவகையிலே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்பது நீடிப்பு என்பது எங்களை பொறுத்தமட்டிலே நாங்கள் கண்டிப்பதன் ஊடகவும், இதை எதிர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். ஏனென்றால் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினூடக இன்றைக்கும் வலிசுமந்துகொண்டு இருக்கின்ற எங்களுடைய இனத்தின் சார்பாக நாங்கள் சொல்லுகிறோம் பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும், நீடிக்கப்படக்கூடாது, இது இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று கையெழுத்து வேட்டையினூடாக எங்களது மக்கள் அதனை உங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். அந்த வகையிலே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்ற அந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.
அ.செல்வம் அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ )